பிஎஸ்6 அப்டேட்டிற்கு பிறகு முதல்முறையாக ஹோண்டா எக்ஸ்-பிளேட்-ன் ஷோரூம் விலை உயர்வு- இனி இதுதான் விலை

ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் எக்ஸ்-பிளேட் பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலையினை பிஎஸ்6 அப்டேட்டிற்கு பிறகு முதன்முறையாக உயர்த்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎஸ்6 அப்டேட்டிற்கு பிறகு முதல்முறையாக ஹோண்டா எக்ஸ்-பிளேட்-ன் ஷோரூம் விலை உயர்வு- இனி இதுதான் விலை

ஹோண்டா நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்ட எக்ஸ்-பிளேட் பைக்கை கடந்த ஜூலை மாதத்தில் ரூ.1.05 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்தது. இதன் சிங்கிள்-டிஸ்க் மற்றும் டபுள்-டிஸ்க் என இரு வேரியண்ட்களும் விலைக்கு தகுந்தப்படியான தொழிற்நுட்பங்களை பெற்று வந்துள்ளன.

பிஎஸ்6 அப்டேட்டிற்கு பிறகு முதல்முறையாக ஹோண்டா எக்ஸ்-பிளேட்-ன் ஷோரூம் விலை உயர்வு- இனி இதுதான் விலை

இந்த நிலையில் தான் தற்போது இதன் எக்ஸ்ஷோரூம் விலையில் ரூ.576 என்ற அளவில் விலை அதிகரிப்பை ஹோண்டா நிறுவனம் கொண்டுவந்துள்ளது. இதனால் பிஎஸ்6 எக்ஸ்-பிளேடின் வேரியண்ட்கள் ரூ.1,06,687 மற்றும் ரூ.1,10,968 என்ற எக்ஸ்ஷோரும் விலையில் தான் இனி விற்பனைக்கு கிடைக்கும்.

பிஎஸ்6 அப்டேட்டிற்கு பிறகு முதல்முறையாக ஹோண்டா எக்ஸ்-பிளேட்-ன் ஷோரூம் விலை உயர்வு- இனி இதுதான் விலை

பிஎஸ்6 தரத்தில் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட 2020 எக்ஸ்-பிளேட் பைக்கில் புத்துணர்ச்சியான டிசைன் ஆனது எல்இடி ஹெட்லேம்ப் & டெயில்லேம்ப், நேர்த்தியான வடிவத்தில் பெட்ரோல் டேங்க் மற்றும் இரு-அவுட்லெட்களுடன் எக்ஸாஸ்ட் உள்ளிட்டவற்றுடன் கொண்டுவரப்பட்டிருந்தது.

பிஎஸ்6 அப்டேட்டிற்கு பிறகு முதல்முறையாக ஹோண்டா எக்ஸ்-பிளேட்-ன் ஷோரூம் விலை உயர்வு- இனி இதுதான் விலை

இவற்றுடன் புதிய டிசைனில் அலாய் சக்கரங்களை பெற்றுள்ள இந்த பிஎஸ்6 பைக்கில் பிளவுப்பட்டதாக க்ராப் ரெயில்கள் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. 2020 எக்ஸ்-பிளேட் பைக்கில் பிஎஸ்6 தரத்தில் 160சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு வருகிறது.

பிஎஸ்6 அப்டேட்டிற்கு பிறகு முதல்முறையாக ஹோண்டா எக்ஸ்-பிளேட்-ன் ஷோரூம் விலை உயர்வு- இனி இதுதான் விலை

அதிகப்பட்சமாக 8000 ஆர்பிஎம்-ல் 13.67 பிஎச்பி மற்றும் 5500 ஆர்பிஎம்-ல் 14.7 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. பிஎஸ்6 அப்டேட்டால் இந்த என்ஜினில் புதியதாக ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்தை ஹோண்டா நிறுவனம் வழங்கியுள்ளது.

பிஎஸ்6 அப்டேட்டிற்கு பிறகு முதல்முறையாக ஹோண்டா எக்ஸ்-பிளேட்-ன் ஷோரூம் விலை உயர்வு- இனி இதுதான் விலை

8-ஆன்போர்டு சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ள இந்த சிஸ்டம், மேம்படுத்தப்பட்ட செயல்திறன் மற்றும் எரிபொருள் திறனிற்கான காற்று-பெட்ரோல் கலவையை உறுதிப்படுத்துகிறது. பைக்கில் சஸ்பென்ஷனிற்கு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ-ஷாக்கும் வழங்கப்படுகின்றன.

பிஎஸ்6 அப்டேட்டிற்கு பிறகு முதல்முறையாக ஹோண்டா எக்ஸ்-பிளேட்-ன் ஷோரூம் விலை உயர்வு- இனி இதுதான் விலை

ப்ரேக்கிங் பணியை கவனிக்க எக்ஸ்-பிளேடின் இரட்டை-டிஸ்க் வேரியண்ட்டில் முன் மற்றும் பின் சக்கரங்களில் முறையே 276மிமீ மற்றும் 220மிமீ அளவில் டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்படுகின்றன. அதுவே சிங்கிள்-டிஸ்க் வேரியண்ட்டில் பின் சக்கரத்தில் மாற்றாக 130மிமீ-ல் ட்ரம் ப்ரேக் வழங்கப்படுகிறது.

பிஎஸ்6 அப்டேட்டிற்கு பிறகு முதல்முறையாக ஹோண்டா எக்ஸ்-பிளேட்-ன் ஷோரூம் விலை உயர்வு- இனி இதுதான் விலை

இவற்றுடன் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ்-ம் பைக்கில் உள்ளது. சிங்கிள்-டிஸ்க்கின் எடை 146 கிலோவாகவும், டபுள்-டிஸ்க்கின் எடை ஒரு கிலோ அதிகமாக 147 கிலோவாகவும் உள்ளது. அட்டகாசமான புதிய தோற்றத்துடன் 2020 ஹோண்டா எக்ஸ்-பிளேட் பைக் விற்பனை செய்யப்பட்டு வருவதால், இந்த சிறிய அளவிலான விலை உயர்வு அதன் விற்பனையை பாதிக்காது என நம்புவோம்.

Most Read Articles

English summary
Honda X-Blade BS6 Receives The First Price Hike After Being Launched: Here Are The New Prices
Story first published: Thursday, August 20, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X