இனி ட்யூக் 250 பைக்கிலும் எல்இடி ஹெட்லேம்ப் தான்... அதிரடியாக அப்டேட்டை கொண்டுவரும் கேடிஎம்...

கேடிஎம் நிறுவனத்தின் 2020ஆம் ஆண்டிற்கான 250 ட்யூக் மாடல் 390 ட்யூக் பைக்கில் இருப்பது போன்ற எல்இடி ஹெட்லேம்ப் உடன் டீலர்ஷிப் ஒன்றில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்லேன் செய்தி தளம் வெளியிட்டுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இனி ட்யூக் 250 பைக்கிலும் எல்இடி ஹெட்லேம்ப் தான்... அதிரடியாக அப்டேட்டை கொண்டுவரும் கேடிஎம்...

கேடிஎம் நிறுவனம் முதன்முதலாக ப்ரீமியம் தரத்திலான பாகங்களுடன் 390 ட்யூக் மாடலை அறிமுகப்படுத்திய சமயத்தில் தான் சில செலவு குறைவான பாகங்களுடன் இதன் 250சிசி வெர்சனையும் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த இரண்டு பைக்குகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளில் முக்கியமானது ஹெட்லேம்ப் அமைப்பு.

இனி ட்யூக் 250 பைக்கிலும் எல்இடி ஹெட்லேம்ப் தான்... அதிரடியாக அப்டேட்டை கொண்டுவரும் கேடிஎம்...

ஏனெனில் 390 ட்யூக் பைக்கில் முழு எல்இடி தரத்தில் வழங்கப்பட்டிருந்த ஹெட்லேம்ப், 250 ட்யூக்கில் ஹாலோஜன் யூனிட்டாக பொருத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் 390 ட்யூக் உள்ளதை போன்று முழு-எல்இடி ஹெட்லேம்ப் உடன் 2020 கேடிஎம் 250 ட்யூக் மாடல் டீலர்ஷிப் ஒன்றில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இனி ட்யூக் 250 பைக்கிலும் எல்இடி ஹெட்லேம்ப் தான்... அதிரடியாக அப்டேட்டை கொண்டுவரும் கேடிஎம்...

இந்த 2020 மாடல் டீலர்ஷிப்களுக்கு சென்றடையும் பணியினை ஏற்கனவே துவங்கிவிட்டது. இதன் பிஎஸ்6 வெர்சன் ரூ.2 லட்சம் என்ற விலையுடன் இந்த ஆண்டு துவக்கத்திலேயே அறிமுகமாகிவிட்டது. இருப்பினும் ஹெட்லேம்ப் மாற்றத்தால் இதன் விலை சற்று உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி ட்யூக் 250 பைக்கிலும் எல்இடி ஹெட்லேம்ப் தான்... அதிரடியாக அப்டேட்டை கொண்டுவரும் கேடிஎம்...

2020 கேடிஎம் 250 ட்யூக் பைக்கை பற்றிய கூடுதல் விபரங்கள் வரும் வாரங்களில் வெளியாகவுள்ளன. இருப்பினும் எளிமையான டிஜிட்டல் யூனிட் உடன் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. கேடிஎம் நிறுவனம் 390 ட்யூக் பைக்கில் இருந்து தான் முழு-எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப் அமைப்பை வழங்கி வருகிறது.

இனி ட்யூக் 250 பைக்கிலும் எல்இடி ஹெட்லேம்ப் தான்... அதிரடியாக அப்டேட்டை கொண்டுவரும் கேடிஎம்...

ஆனால் ஐரோப்பிய சந்தையில் எண்ட்ரீ-லெவல் 125சிசி பைக் உள்பட அதன் மொத்த தயாரிப்புகளிலும் இந்த எல்இடி ஹெட்லேம்பை தான் பொருத்தி வருகிறது. கூர்மையான தோற்றத்தில் காணப்படும் இந்த ஹெட்லேம்ப் அமைப்பு செங்குத்தாக பிரிக்கப்பட்டு பிராண்டின் சமீபத்திய வடிவமைப்பு அடையாளத்துடன் இணைகிறது.

இனி ட்யூக் 250 பைக்கிலும் எல்இடி ஹெட்லேம்ப் தான்... அதிரடியாக அப்டேட்டை கொண்டுவரும் கேடிஎம்...

ஹெட்லேம்ப் அமைப்பை தவிர்த்து தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 250 ட்யூக்கின் 2020 வெர்சன் பைக்கில் வேறெந்த மாற்றமும் தென்படவில்லை. இந்த பைக்கில் பொருத்தப்பட்டு வரும் 249சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் ஆனது அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் மூலமாக 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது.

இனி ட்யூக் 250 பைக்கிலும் எல்இடி ஹெட்லேம்ப் தான்... அதிரடியாக அப்டேட்டை கொண்டுவரும் கேடிஎம்...

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 30 பிஎச்பி மற்றும் 24 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. சந்தையில் 250 ட்யூக் மாடலுக்கு போட்டியாக யமஹா எஃப்இசட்எஸ் 25 மற்றும் சுசுகி ஜிக்ஸெர் 250 உள்ளிட்ட மாடல்கள் உள்ளன. இவை அனைத்து சமீபத்தில் தான் பிஎஸ்6 அப்டேட்டை ஏற்றிருந்தன.

இனி ட்யூக் 250 பைக்கிலும் எல்இடி ஹெட்லேம்ப் தான்... அதிரடியாக அப்டேட்டை கொண்டுவரும் கேடிஎம்...

ஊரடங்கு உத்தரவினால் 2 மாதங்களுக்கும் மேலாக பஜாஜ் நிறுவனத்தின் தொழிற்சாலை மூடப்பட்டிருந்ததால் கேடிஎம் பைக்குகளின் டெலிவிரிகள் நீண்ட தாமதத்திற்கு பின்பே மேற்கொள்ளப்படுகின்றன. எல்இடி ஹெட்லேம்பை பெற்றுள்ள 250 ட்யூக் பைக்கின் அறிமுகம் வரும் வாரங்களில் இருக்கலாம்.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM 250 Duke gets LED headlight from Duke 390 – Spy Shots
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X