பிஎஸ்6 மோஜோ 300 ஏபிஎஸ் பைக்கின் அறிமுகத்தில் தீவிரம் காட்டும் மஹிந்திரா...

கடந்த வாரத்தில் கார்னெட் ப்ளாக் மற்றும் ரப்பி ரெட் என இரு விதமான நிறங்களில் மோஜோ 300 ஏபிஎஸ் பைக்கை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து கூடுதலாக இரு புதிய நிறங்களில் இந்த பைக்கை மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பிஎஸ்6 மோஜோ 300 ஏபிஎஸ் பைக்கின் அறிமுகத்தில் தீவிரம் காட்டும் மஹிந்திரா...

இந்த புதிய நிறத்தேர்வுகளில் ஒன்றான சிவப்பு இரத்தினக்கல் தேர்வில் பைக்கின் ஹெட்லைட் கௌல் சிவப்பு/கருப்பு நிற கலவையிலும், எரிபொருள் டேங்க் மற்றும் ரேடியேட்டர் உள்ளிட்டவை சிவப்பு/வெள்ளை நிற கலவையிலும் காட்சியளிக்கின்றன. எரிபொருள் டேங்கில் சிவப்பு ஸ்ட்ரிப் வழங்கப்பட்டுள்ளது.

பிஎஸ்6 மோஜோ 300 ஏபிஎஸ் பைக்கின் அறிமுகத்தில் தீவிரம் காட்டும் மஹிந்திரா...

பைக்கின் பெல்லி பேன், பக்கவாட்டு பேனல்கள் மற்றும் அலாய் சக்கரங்கள் கருப்பு நிறத்தில் உள்ளன. பின்புற பகுதியில் சில சிவப்பு நிற ஹைலைட்கள் காணப்படுகின்றன. ரப்பி ரெட் நிறத்தேர்வில் இருந்ததை போல் அல்லாமல் ஃப்ரேம் மற்றும் ஸ்விங்கார்ம் உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன.

பிஎஸ்6 மோஜோ 300 ஏபிஎஸ் பைக்கின் அறிமுகத்தில் தீவிரம் காட்டும் மஹிந்திரா...

மற்றொரு நிறத்தேர்வான பேர்ல் ப்ளாக்கில் பெயருக்கு ஏற்றாற்போல் பிஎஸ்6 மோஜோ 300 பைக் முழுவதும் கருப்பு நிறத்தை பெற்றுள்ளது. இது ஸ்போர்ட்டியாக இருப்பது மட்டுமில்லாமல் கம்பீரமாகவும் காட்சியளிக்கிறது. இருப்பினும் ரியர் கௌல் மற்றும் நிறுவனத்தின் முத்திரை உள்ள பகுதிகளில் வெள்ளை நிறத்தை மஹிந்திரா வழங்கியுள்ளது.

பிஎஸ்6 மோஜோ 300 ஏபிஎஸ் பைக்கின் அறிமுகத்தில் தீவிரம் காட்டும் மஹிந்திரா...

முத்திரையில் உள்ள வெள்ளை சற்று சில்வர் நிறமாகவே காட்சியளிக்கிறது. மற்ற அனைத்து நிறத்தேர்வுகளை காட்டிலும் இந்த பேர்ல் ப்ளாக் நிறத்தில் பைக் சற்று ப்ரீமியம் தோற்றத்தில் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். முந்தைய இரு நிறங்களில் பைக்கின் டயர்களில் சிவப்பு நிற ஸ்ட்ரிப் தென்பட்டது.

பிஎஸ்6 மோஜோ 300 ஏபிஎஸ் பைக்கின் அறிமுகத்தில் தீவிரம் காட்டும் மஹிந்திரா...

ஆனால் அது தற்போது வெளியாகியுள்ள இரு நிறங்களில் டயரின் கருப்பு நிறத்திலேயே ஒட்டி கொண்டுள்ளது. இந்த புதிய நிறத்தேர்வுகளினால் பிஎஸ்6 மஹிந்திரா மோஜோ 300 ஏபிஎஸ் பைக் குறைந்தது நான்கு நிறங்களிலாவது சந்தைப்படுத்தப்படும் என்பதை அறிய முடிகிறது.

பிஎஸ்6 மோஜோ 300 ஏபிஎஸ் பைக்கின் அறிமுகத்தில் தீவிரம் காட்டும் மஹிந்திரா...

இந்த பைக்கில் பிஎஸ்6 தரத்தில் 294.72சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை மஹிந்திரா நிறுவனம் பொருத்தியுள்ளது. இந்த பிஎஸ்6 என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகள் எதுவும் தற்போதைக்கு கிடைக்கவில்லை. முந்தைய பிஎஸ்4 தரத்தில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-ல் 26.29 பிஎச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்-ல் 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தியது.

பிஎஸ்6 மோஜோ 300 ஏபிஎஸ் பைக்கின் அறிமுகத்தில் தீவிரம் காட்டும் மஹிந்திரா...

என்ஜின் அப்டேட்டை தவிர்த்து பைக்கின் தோற்றத்தில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை என்பது வெளியாகி வருகின்ற பைக்கின் படங்களை பார்த்தாலே தெரிகிறது. இதனால் மஹிந்திரா மோஜோவிற்கு அடையாளமான இரட்டை ஹெட்லேம்ப் அமைப்பு, பெரிய ரேடியேட்டர் மற்றும் எக்ஸாஸ்ட் அமைப்பு உள்ளிட்டவை அப்படியே இந்த பிஎஸ்6 பைக்கிலும் தொடர்ந்துள்ளன.

Most Read Articles
English summary
2 more colours of upcoming BS6 Mahindra Mojo 300 ABS revealed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X