பிரபல ராயல் எண்ட்பீல்டு பைக் மாடலான கிளாசிக் 350-ன் விலை அதிகரிப்பு...

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் சிறப்பான விற்பனை மாடலாக விளங்கும் கிளாசிக் 350 பைக்கின் இந்திய எக்ஸ்ஷோரூம் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பிரபல ராயல் எண்ட்பீல்டு பைக் மாடலான கிளாசிக் 350-ன் விலை அதிகரிப்பு...

ராயல் எண்ட்பீல்ட் கிளாசிக் 350 சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் மாடல் இந்திய சந்தையில் ரூ.1.57 லட்ச ஆரம்ப விலையுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையில் கஷ்கொட்டையின் சிவப்பு, ஆஷ், மெர்குரி சில்வர் மற்றும் ரெட்டிட்ச் சிவப்பு என்ற நான்கு நிறத்தேர்வுகள் இந்த பைக்கிற்கு வழங்கப்பட்டுள்ளன.

பிரபல ராயல் எண்ட்பீல்டு பைக் மாடலான கிளாசிக் 350-ன் விலை அதிகரிப்பு...

இதன் ட்யூல்-சேனல் ஏபிஎஸ் வெர்சன் சற்று ப்ரீமியமாக ரூ.1.65 லட்சத்தில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விலையில் கிளாசிக் 350 பைக்கிற்கு க்ரோம் ப்ளாக், கிளாசிக் ப்ளாக், ஸ்டீல்த் ப்ளாக், ஸ்ட்ரோம்ரைடர் சாண்ட், ஏர்போர்னே ப்ளூ மற்றும் கன்மெட்டல் க்ரே என்ற 6 பெயிண்ட் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

MOST READ: இந்தியாவிலேயே சிறந்த விமான நிலையம் எது தெரியுமா...? தரவரிசை வெளியீடு...!

பிரபல ராயல் எண்ட்பீல்டு பைக் மாடலான கிளாசிக் 350-ன் விலை அதிகரிப்பு...

அதேபோல் ப்ரீமியம் கிளாசிக் 350 மாடலில் அலாய் சக்கரங்களில் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்படுகின்றன. பைக்கின் இந்த எக்ஸ்ஷோரூம் விலைகளில் தான் தற்போது ரூ.2,755 அளவில் அதிகரிப்பை ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

பிரபல ராயல் எண்ட்பீல்டு பைக் மாடலான கிளாசிக் 350-ன் விலை அதிகரிப்பு...

ஆனால் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப பைக்கில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. இதனால் அதே 346சிசி என்ஜின் தான் பிஎஸ்6 தரத்தில் வழங்கப்பட உள்ளது. இந்த என்ஜின் அமைப்பு புல்லட் 350 பிஎஸ்6 பைக்கிலும் பொருத்தப்பட்டு வருகிறது.

MOST READ: போட்டோவை போட்டு ஆசையை தூண்டி விட்ட சமந்தா... கணவர் நாக சைதன்யாவுடன் செஞ்ச காரியத்தை பாருங்க...

பிரபல ராயல் எண்ட்பீல்டு பைக் மாடலான கிளாசிக் 350-ன் விலை அதிகரிப்பு...

ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் உள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 5,250 ஆர்பிஎம்-ல் 19.1 பிஎச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்-ல் 28 என்எம் டார்க் திறனையும் பைக்கிற்கு வழங்கும் ஆற்றல் கொண்டது. இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

பிரபல ராயல் எண்ட்பீல்டு பைக் மாடலான கிளாசிக் 350-ன் விலை அதிகரிப்பு...

பிஎஸ்6 ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 மாடலுக்கு பிஎஸ்6 ஜாவா கிளாசிக் மற்றும் பிஎஸ்6 ஜாவா 42 பைக்குகள் போட்டியாக உள்ளன. இவை இரண்டின் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூமில் முறையே ரூ.1.73 லட்சம் மற்றும் ரூ.1.60 லட்சமாக உள்ளது.

MOST READ: விமானங்களில் இனி இதுக்கெல்லாம் தடையாமுங்கோ... இதோ லிஸ்ட் - செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை!

பிரபல ராயல் எண்ட்பீல்டு பைக் மாடலான கிளாசிக் 350-ன் விலை அதிகரிப்பு...

கிளாசிக் 350 மாடலின் விலையை அதிகரிப்பதற்கு முன்னதாக பிஎஸ்6 ஹிமாலயன் மற்றும் புல்லட் 350 பிஎஸ்6 பைக்குகளின் விலையையும் ராயல் எண்ட்பீல்டு சமீபத்தில் உயர்த்தி இருந்தது.

Most Read Articles

English summary
Prices of BS6 Royal Enfield Classic 350 hiked
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X