சுசுகி ஆக்ஸஸ் 125 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.64,800...

சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஆக்ஸஸ் 125 பிஎஸ்6 ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஸ்கூட்டரை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சுசுகி ஆக்ஸஸ் 125 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.64,800...

சுசுகி நிறுவனம் ஆக்ஸஸ் 125 பிஎஸ்6 ஸ்கூட்டருக்கு ஸ்டாண்டர்ட் மற்றும் ஸ்பெஷல் என இரு வேரியண்ட் தேர்வுகளை வழங்கியுள்ளது. இதில் ஸ்டாண்டர்ட் வேரியண்ட்டின் விலை ரூ.64,800 ஆகவும், ஸ்பெஷல் வேரியண்ட்டின் விலை ரூ.68,500 ஆகவும் இந்திய எக்ஸ்ஷோரூமில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுசுகி ஆக்ஸஸ் 125 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.64,800...

மேலும் இதில் ஸ்டாண்டர்ட் வேரியண்ட், அலாய் ட்ரம் ப்ரேக், அலாய் டிஸ்க் ப்ரேக் மற்றும் ஸ்டீல் ட்ரம் ப்ரேக் என மூன்று வேரியண்ட்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆக்ஸஸ் 125 பிஎஸ்6 மாடலின் ஸ்பெஷல் வேரியண்ட் அலாய் டிஸ்க் ப்ரேக் மற்றும் அலாய் ட்ரம் ப்ரேக் என இரு ட்ரீம் தேர்வுகளை பெற்றுள்ளது.

சுசுகி ஆக்ஸஸ் 125 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.64,800...

இந்த புதிய பிஎஸ்6 ஸ்கூட்டரின் அறிமுகம் குறித்து சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கொய்சிரோ ஹிராவ் கூறுகையில், நாங்கள் இந்த புதிய ஆண்டில் பிஎஸ்6-க்கு இணைக்கமாக மாற்றப்பட்ட சுசுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டருடன் அடியெடுத்து வைத்துள்ளோம். குறிப்பிட்ட கால அளவுக்குள் புதிய ஃபேமிலி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவதில் பெருமை அடைகிறோம்.

சுசுகி ஆக்ஸஸ் 125 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.64,800...

எங்களது மற்ற தயாரிப்புகளையும் புதிய மாசு உமிழ்விற்கு ஏற்ற விதத்தில் தயாரிக்கும் பணியில் தொடர்ந்து எங்களது நிறுவனம் பணியாற்றி கொண்டுதான் வருகிறது. ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டர் மாடல் சுசுகி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிக பெரிய பங்காற்றியுள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வாடிக்கையாளர்களின் இதே வரவேற்பு ஆக்ஸஸ் 125 மாடலின் இந்த பிஎஸ்6 வெர்சனுக்கும் கிடைக்கும் என நம்புகிறோம் என கூறினார்.

சுசுகி ஆக்ஸஸ் 125 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.64,800...

சுசுகி நிறுவனத்தின் முதல் பிஎஸ்6 ஸ்கூட்டராக அறிமுகமாகவுள்ள ஆக்ஸஸ் 125-ல் புதிய மாசு உமிழ்வு விதிக்கு அப்டேட் செய்யப்பட்ட 124சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 6750 ஆர்பிஎம்-ல் 8 பிஎச்பி பவரையும் 5500 ஆர்பிஎம்-ல் 10 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

சுசுகி ஆக்ஸஸ் 125 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.64,800...

இந்த புதிய பிஎஸ்6 ஸ்கூட்டர் சிறந்த வெளியிடு ஆற்றலை வழங்கக்கூடிய சுசுகி நிறுவனத்தின் ஈக்கோ செயல்திறன் தொழிற்நுட்பத்துடன் அறிமுகமாகவுள்ளது. மேலும் இந்த பிஎஸ்6 ஸ்கூட்டர் சில முக்கியமான அம்சங்களையும் பெற்றுள்ளது. அதாவது எல்இடி ஹெட்லைட்ஸ், எரிபொருளை நிரப்ப ஸ்கூட்டரின் வெளிப்புறத்தில் மூடி, ஈக்கோ அசிஸ்ட் ஒளியூட்டப்பட்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், கம்பைண்ட் ப்ரேக்கிங் சிஸ்டம் (சிபிஎஸ்) மற்றும் ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் டெக்னாலஜி உள்ளிட்டவற்றை புதிய ஆக்ஸஸ் 125 பிஎஸ்6 ஸ்கூட்டர் பெற்றுள்ளது.

சுசுகி ஆக்ஸஸ் 125 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.64,800...

தொழிற்நுட்பங்கள் மட்டுமில்லாமல் ஸ்கூட்டரின் சில வெளிப்புற டிசைன் அமைப்பையும் சுசுகி நிறுவனம் மாற்றியமைத்துள்ளது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரில் கால்களை வைப்பதற்கு பெரிய ஃபுட்போர்டு, மேம்படுத்தப்பட்ட டிசைனில் இருக்கைக்கு அடியில் பொருட்களை வைக்கும் பகுதி, ஸ்கூட்டர் முழுவதும் கூடுதலாக க்ரோம், பெரிய அளவில் இருக்கை அமைப்பு மற்றும் சிறிது மாற்றியமைக்கப்பட்ட ஸ்கூட்டரின் பாடி க்ராஃபிக்ஸ் உள்ளிட்டவை அப்டேட்டாக கொடுக்கப்பட்டுள்ளன.

சுசுகி ஆக்ஸஸ் 125 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.64,800...

2020 ஆக்ஸஸ் 125 பிஎஸ்6 ஸ்கூட்டரை பல நிறத்தேர்வுகளில் சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஸ்கூட்டரின் ஸ்டாண்டர்ட் வேரியண்ட் பேர்ல் டீப் ப்ளூ, மெட்டாலிக் மேட் பிளாட்டினம் சில்வர், முத்தின் வெள்ளை, க்ளாஸ் ஸ்பார்கிள் ப்ளாக் மற்றும் மெட்டாலிக் மேட் ஃபைப்ரோயின் க்ரே என்ற ஐந்து நிற தேர்வுகளை பெற்றுள்ளது. ஸ்பெஷல் வேரியண்ட்டிற்கு மெட்டாலிக் மேட் போர்டியாக்ஸ் சிவப்பு, மெட்டாலிக் டார்க் க்ரீனிஷ் ப்ளூ, மெட்டாலிக் மேட் ப்ளாக் & முத்தின் வெள்ளை உள்ளிட்ட நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்படவுள்ளது.

சுசுகி ஆக்ஸஸ் 125 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலை ரூ.64,800...

125சிசி பிரிவில் பிரபலமான ஸ்கூட்டராக உள்ள ஆக்ஸஸ் 125 ஏற்கனவே கூறியதுபோல் சுசுகியின் முதல் பிஎஸ்6 ஸ்கூட்டராக இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு விற்பனையில் கடுமையான போட்டியினை தர ஹோண்டா ஆக்டிவா 125, டிவிஎஸ் எண்டார்க் 125, யமஹா ஃபாசினோ 125 மற்றும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 போன்ற ஸ்கூட்டர்கள் தயாராகவுள்ளன.

Most Read Articles
English summary
New (2020) Suzuki Access 125 BS-VI Scooter Launched In India: Prices Start At Rs 64,800
Story first published: Monday, January 6, 2020, 18:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X