சுசுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரின் புதிய டிவிசி வீடியோ.. ஏலியன்களுக்கும் பார்த்தவுடன் பிடித்துவிடுமாம்...

இந்த வருட துவக்கத்தில் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்ட சுசுகி நிறுவனத்தின் ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரின் புதிய டெலிவிஷன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுசுகி நிறுவனம் கூற வந்துள்ள விஷயத்தை இந்த செய்தியில் பார்ப்போம்.

சுசுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரின் புதிய டிவிசி வீடியோ.. ஏலியன்களுக்கும் பார்த்தவுடன் பிடித்துவிடுமாம்...!

ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டருக்கு தயாரிப்பு நிறுவனம் ரூ.64,800-ஐ ஆரம்ப விலையாக நிர்ணயித்துள்ளது. டிஸ்க் ப்ரேக் மற்றும் அலாய் சக்கரங்களுடன் இந்த ஸ்கூட்டர் அதிகப்பட்சமாக ரூ.69,500 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

சுசுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரின் புதிய டிவிசி வீடியோ.. ஏலியன்களுக்கும் பார்த்தவுடன் பிடித்துவிடுமாம்...!

ஜப்பானிய நிறுவனமான சுசுகியின் மிக சிறப்பான 125சிசி ஸ்கூட்டர் மாடலாக நீண்ட காலமாக உள்ள ஆக்ஸஸ் தான் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து முதலாவதாக பிஎஸ்6 என்ஜினை பெற்ற இருசக்கர வாகனமாகும்.

சுசுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரின் புதிய டிவிசி வீடியோ.. ஏலியன்களுக்கும் பார்த்தவுடன் பிடித்துவிடுமாம்...!

இந்திய அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடுவிற்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பே பிஎஸ்6 என்ஜினை பெற்றிருந்த இந்த ஸ்கூட்டரின் டார்க் திறன் பிஎஸ்6 அப்டேட்டால் 0.2 என்எம் குறைந்திருந்தாலும், பிஎச்பி ஆற்றலில் எந்த மாற்றமும் இல்லை.

சுசுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரின் புதிய டிவிசி வீடியோ.. ஏலியன்களுக்கும் பார்த்தவுடன் பிடித்துவிடுமாம்...!

இதனால் சுசுகி ஈக்கோ செயல்திறன்மிக்க தொழிற்நுட்பம் மற்றும் எம்-ஸ்குவாஷ் கம்பஸ்டன் சாம்பர் உடன் உள்ள இதன் 124சிசி சிங்கிள்-சிலிண்டர் முழு-அலுமினிய 4-ஸ்ட்ரோக் ஏர்-கூல்டு ஃப்யூல்-இன்ஜெக்டட் என்ஜின் தற்சமயம் விற்பனையில் உள்ள ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டருக்கு அதிகப்பட்சமாக 6,750 ஆர்பிஎம்-ல் 8.6 பிஎச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்-ல் 10 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது.

சுசுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரின் புதிய டிவிசி வீடியோ.. ஏலியன்களுக்கும் பார்த்தவுடன் பிடித்துவிடுமாம்...!

இந்த என்ஜின் உடன் சிவிடி ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுசுகி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டருக்கான புதிய டிவிசி வீடியோ, இந்த ஸ்கூட்டர் வேற்று கிரக ஏலியன்களுக்கு கூட பார்த்தவுடன் பிடித்து போய்விடும் என்பதை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.

பிஎஸ்6 அப்டேட்டினால் இந்த ஸ்கூட்டர் மாடலின் விலை சற்று அதிகரிக்கப்பட்டிருந்தது. இந்த விலை உயர்வை பிஎஸ்6 என்ஜினால் மட்டும் நியாயப்படுத்தாமல் புதிய அம்சங்களாக எல்இடி ஹெட்லேம்ப்கள், திருத்தியமைக்கப்பட்ட பகுதி அனலாக்/டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவற்றையும் சுசுகி நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

சுசுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரின் புதிய டிவிசி வீடியோ.. ஏலியன்களுக்கும் பார்த்தவுடன் பிடித்துவிடுமாம்...!

ஸ்டீல் ட்ரம் ப்ரேக், அலாய் ட்ரம் ப்ரேக் மற்றும் அலாய் டிஸ்க் ப்ரேக் என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் பிஎஸ்6 ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டருக்கு பேர்ல் சுசுகி டீப் ப்ளூ, மெட்டாலிக் மேட் ப்ளாட்டினம் சில்வர், பேர்ல் மைரேஜ் வொய்ட், பளபளப்பான ஸ்பார்கிள் ப்ளாக் மற்றும் மெட்டாலிக் மேட் ஃபைப்ரோனியம் க்ரே என்ற நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Suzuki Access 125 BSVI New TVC With Aliens Released
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X