பிஎஸ்6 அப்டேட்டால் குறைவான ஆற்றல் என்ஜினை பெற்ற 2020 சுசுகி ஜிக்ஸெர் 250..

சுசுகி ஜிக்ஸெர் 250 பிஎஸ்6 பைக்கை பற்றிய சில முக்கிய தகவல்கள் இந்த பைக்கின் அடுத்த மாத அறிமுகத்திற்கு முன்னதாக வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

பிஎஸ்6 அப்டேட்டால் குறைவான ஆற்றல் என்ஜினை பெற்ற 2020 சுசுகி ஜிக்ஸெர் 250..

அடுத்த மாதத்திற்குள்ளாக அறிமுகமாகவுள்ள இந்த பிஎஸ்6 பைக் அதன் முந்தைய தலைமுறை பைக்கை விட குறைவான ஆற்றலை பெற்றுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில் ஜிக்ஸெர் 250 பைக்கில் பொருத்தட்டு உள்ள பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 249சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 26.1 பிஎச்பி பவரையும் 22.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிஎஸ்6 அப்டேட்டால் குறைவான ஆற்றல் என்ஜினை பெற்ற 2020 சுசுகி ஜிக்ஸெர் 250..

இது ஜிக்ஸெர் 250 பிஎஸ்4 பைக்கின் ஆற்றலை காட்டிலும் 0.4 பிஎச்பி மற்றும் 0.4 என்எம் டார்க் திறன் குறைவாகும். என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவுகளில் மாற்றத்தை தவிர்த்து இந்த பிஎஸ்6 பைக்கில் டிசைன் மற்றும் தொழிற்நுட்பம் உள்ளிட்டவற்றில் எதிலும் பெரிய அளவில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.

பிஎஸ்6 அப்டேட்டால் குறைவான ஆற்றல் என்ஜினை பெற்ற 2020 சுசுகி ஜிக்ஸெர் 250..

முன்னதாக வெளியாகியிருந்த இந்த 250சிசி பிஎஸ்6 பைக்கின் ஸ்பை புகைப்படங்களும் இதை தான் தெரிவித்தன. இதனால் பரிமாண அளவுகளிலும் எந்த மாற்றத்தையும் இந்த பைக் பெறவில்லை. சுசுகி ஜிக்ஸெர் 250 பைக்கின் நீளம் 2,010 மிமீ, அகலம் 805மிமீ, உயரம் 1,035மிமீ மற்றும் வீல்பேஸ் 1,340மிமீ ஆகும்.

பிஎஸ்6 அப்டேட்டால் குறைவான ஆற்றல் என்ஜினை பெற்ற 2020 சுசுகி ஜிக்ஸெர் 250..

எரிபொருள் இல்லாத நிலையில் 165 கிலோ எடையையும், 165மிமீ க்ரவுண்ட் கிளியரென்ஸையும் கொண்டுள்ள இந்த 250சிசி பைக்கின் இருக்கையானது தரையிலிருந்து 800மிமீ உயரத்தில் உள்ளது.

சுசுகி நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜிக்ஸெர் 250 பைக் மாடலின் நாக்டு வெர்சனை அறிமுகப்படுத்தி இருந்தது. பார்ப்பதற்கு மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தில் இருந்த இந்த பைக் பெரிய அளவில் இரட்டை எக்ஸாஸ்ட் அமைப்பை பெற்றிருந்தது.

பிஎஸ்6 அப்டேட்டால் குறைவான ஆற்றல் என்ஜினை பெற்ற 2020 சுசுகி ஜிக்ஸெர் 250..

இந்த நாக்டு வெர்சன் பைக்கில் வழங்கப்பட்டு இருந்த சிங்கிள்-சிலிண்டர் மற்றும் ஆயில் இண்டர்கூலர் அமைப்புடன் உள்ள 249சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 9,300 ஆர்பிஎம்-ல் 26.4 பிஎச்பி பவரையும், 7,300 ஆர்பிஎம்-ல் 22.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷனிற்காக 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

சுசுகி ஜிக்ஸெர் 250 பைக்கில் சஸ்பென்ஷன் அமைப்பாக முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸும், பின்புறத்தில் மோனோஷாக்கும் உள்ளன. ப்ரேக்கிங் பணியை இரு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள் கவனிக்கின்றன. இவற்றுடன் ட்யூல்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டமும் உள்ளது.

பிஎஸ்6 அப்டேட்டால் குறைவான ஆற்றல் என்ஜினை பெற்ற 2020 சுசுகி ஜிக்ஸெர் 250..

மற்ற அம்சங்களாக எல்இடியில் ஹெட்லைட்ஸை பெற்றுள்ள இந்த பைக் எல்சிடி தரத்தில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ளது. அறிமுகத்திற்கு பிறகு ஜிக்ஸெர் 250 பைக்கிற்கு கேடிஎம் ட்யூக்250, யமஹா எஃப்இசட் 25 மற்றும் சமீபத்தில் அறிமுகமான பஜாஜ் டோமினார் 250 உள்ளிட்ட பைக்குகள் போட்டி மாடல்களாக பார்க்கப்படுகின்றன.

பிஎஸ்6 அப்டேட்டால் குறைவான ஆற்றல் என்ஜினை பெற்ற 2020 சுசுகி ஜிக்ஸெர் 250..

பிஎஸ்6 மாற்றத்தால் 2020 ஜிக்ஸெர் 250 பைக்கின் விலையை சற்று அதிகமாக எதிர்பார்க்கலாம். சுசுகி ஜிக்ஸெர் மாடல் பைக்கிற்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளதால் இந்த சின்ன ஆற்றல் குறைவு அதன் விற்பனையை பெரிய அளவில் பாதிக்காது.

Source: Indianautoblog

Most Read Articles
English summary
Suzuki Gixxer 250 BS6 Specs Leaked Ahead Of Launch: Details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X