இனி அப்பாச்சி பைக்கை சொந்தமாக்க குறைந்தது ரூ.1 லட்சமாவது ஆகும்... ஷோரூம் விலைகளை உயர்த்தியது டிவிஎஸ்

அப்பாச்சி ஆர்டிஆர் 160 மற்றும் ஆர்டிஆர் 180 பைக் மாடல்களின் எக்ஸ்ஷோரூம் விலைகளை சென்னையை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் கணிசமாக உயர்த்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இனி அப்பாச்சி பைக்கை சொந்தமாக்க குறைந்தது ரூ.1 லட்சமாவது ஆகும்... ஷோரூம் விலைகளை உயர்த்தியது டிவிஎஸ்...

பிஎஸ்6 தரத்தில் விற்பனை செய்யப்பட்டு இந்த இரு அப்பாச்சி பைக்குகளில் ஆர்டிஆர் 160-ன் விலை 3,500 ரூபாயும், ஆர்டிஆர் 180 பைக்கின் விலை ரூ.2,500 அளவிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் டிஸ்க் ப்ரேக் உடன் டிவிஎஸ் அப்பாச்சி பைக்கை வாங்க நினைத்தால் நிச்சயம் நீங்கள் ரூ.1 லட்சத்தை செலுத்தியாக வேண்டும்.

இனி அப்பாச்சி பைக்கை சொந்தமாக்க குறைந்தது ரூ.1 லட்சமாவது ஆகும்... ஷோரூம் விலைகளை உயர்த்தியது டிவிஎஸ்...
Variant Old BS6 Price New BS6 Price Hike
Drum Brake ₹93,500 ₹97,000 ₹3,500
Disc Brake ₹96,500 ₹1,00,000 ₹3,500

முன்னதாக ரூ.93,500 என்ற ஆரம்ப விலையுடன் விற்பனை செய்யப்பட்டு வந்த அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கில் எல்இடி தரத்தில் டிஆர்எல்கள் & டெயில்லேம்ப்கள், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஸ்போர்ட்டியான என்ஜின் கௌல் மற்றும் சிங்கிள்-சேனல் சூப்பர்-மோட்டோ ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இனி அப்பாச்சி பைக்கை சொந்தமாக்க குறைந்தது ரூ.1 லட்சமாவது ஆகும்... ஷோரூம் விலைகளை உயர்த்தியது டிவிஎஸ்...

இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 159.7சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 15.53 பிஎச்பி பவரையும், 13.9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்த 160சிசி அப்பாச்சி பைக்கிற்கு டிவிஎஸ் நிறுவனம் பேர்ல் வொய்ட், மேட் ப்ளூ, பளபளப்பான சிவப்பு, பளபளப்பான கருப்பு மற்றும் மேட் சிவப்பு என்ற 6 நிற தேர்வுகளை வழங்குகிறது.

இனி அப்பாச்சி பைக்கை சொந்தமாக்க குறைந்தது ரூ.1 லட்சமாவது ஆகும்... ஷோரூம் விலைகளை உயர்த்தியது டிவிஎஸ்...
Model Old BS6 Price New BS6 Price Price Hike
Apache RTR 180 BS6 ₹1,01,450 ₹1,03,950 ₹2,500

அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக் மாடலானது ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டும் தான் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை அதிகரிப்பினால் தற்போது எக்ஸ்ஷோரூமில் ரூ.1.03,950-ஐ விலையாக பெற்றுள்ள இந்த பைக்கில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 177.4சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

இனி அப்பாச்சி பைக்கை சொந்தமாக்க குறைந்தது ரூ.1 லட்சமாவது ஆகும்... ஷோரூம் விலைகளை உயர்த்தியது டிவிஎஸ்...

பிஎஸ்6 அப்டேட்டினால் ஆயில்-கூல்டு சிஸ்டத்தை கூடுதலாக பெற்றது மட்டுமில்லாமல் டிவிஎஸ் நிறுவனத்தின் ரேஸ் ட்யூன்டு ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்தையும் கொண்டுள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-ல் 16.62 பிஎச்பி பவரையும், 7,000 ஆர்பிஎம்-ல் 15.5 என்எம் டார்க் திறனையும் பைக்கிற்கு வழங்கக்கூடியது.

இனி அப்பாச்சி பைக்கை சொந்தமாக்க குறைந்தது ரூ.1 லட்சமாவது ஆகும்... ஷோரூம் விலைகளை உயர்த்தியது டிவிஎஸ்...

எல்இடி தரத்தில் டிஆர்எல்கள் & டெயில்லேம்ப், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ரேசிங் கிராஃபிக்ஸ், பெரிய டேங்க் எக்ஸ்டென்ஷன்ஸ், ஒரே துண்டாக இருக்கை, என்ஜின் கௌல், பிளவுப்பட்ட பில்லன் க்ராப் ரெயில், சிங்கிள்-சேனல் சூப்பர்-மோட்டோ ஏபிஎஸ் ப்ரேக் சிஸ்டம் மற்றும் அலாய் சக்கரங்களை ஆர்டிஆர் 180 பைக் சிறப்பம்சங்களாக கொண்டுள்ளது.

இனி அப்பாச்சி பைக்கை சொந்தமாக்க குறைந்தது ரூ.1 லட்சமாவது ஆகும்... ஷோரூம் விலைகளை உயர்த்தியது டிவிஎஸ்...

இந்த ஆண்டு துவக்கத்தில் தான் பிஎஸ்6 அப்டேட்டால் இந்த இரு பைக் மாடல்களும் விலை உயர்வை பெற்றிருந்தன. இந்த நிலையில் தற்போது மீண்டும் இவற்றின் விலை அதிகரிக்கப்பட்டாலும், சந்தையில் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளுக்கு பெரிய அளவில் வரவேற்பு உள்ளதால் இத்தகைய விலை உயர்வு இவற்றின் விற்பனையை பெரியதாக பாதிக்காது என்பது உறுதி.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
TVS Apache RTR 180 BS6 gets another price hike, RTR 160 BS6 price reaches INR 1 lakh mark
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X