கடந்த 4 மாதங்களில் 3 முறை விலை உயர்வு... பிஎஸ்6 என்டார்க் 125ஐ விலைமிக்க ஸ்கூட்டராக மாற்றும் டிவிஎஸ்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் என்டார்க் 125 ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரூம் விலையினை மீண்டும் ஒருமுறை உயர்த்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கடந்த 4 மாதங்களில் 3 முறை விலை உயர்வு... பிஎஸ்6 என்டார்க் 125ஐ விலைமிக்க ஸ்கூட்டராக மாற்றும் டிவிஎஸ்

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் டிவிஎஸ், என்டார்க் 125 ஸ்கூட்டர் மாடலின் பிஎஸ்6 வெர்சனை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக ஸ்கூட்டரின் விலை ரூ.500 அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 மாதங்களில் 3 முறை விலை உயர்வு... பிஎஸ்6 என்டார்க் 125ஐ விலைமிக்க ஸ்கூட்டராக மாற்றும் டிவிஎஸ்

அதாவது, கடந்த ஜூன் மாதத்தில் 910 ரூபாயும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 1500 ரூபாயும் இந்த ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரூம் விலையில் அதிகரிக்கப்பட்டிருந்தது. இத்தகைய விலை அதிகரிப்புகளினால் டிவிஎஸ் என்டார்க் இனி ரூ.68,385 என்ற ஆரம்ப விலையில் (ட்ரம் வேரியண்ட்) தான் விற்பனைக்கு கிடைக்கும்.

கடந்த 4 மாதங்களில் 3 முறை விலை உயர்வு... பிஎஸ்6 என்டார்க் 125ஐ விலைமிக்க ஸ்கூட்டராக மாற்றும் டிவிஎஸ்

அதேநேரம் இதன் டிஸ்க் வேரியண்ட் ரூ.72,385-ஐ விலையாகவும், டாப் ரேஸ் எடிசன் ரூ.74,865-ஐ விலையாகவும் எக்ஸ்ஷோரூமில் பெற்றுள்ளன. இதில் ரேஸ் எடிசனுக்கு கூடுதல் தேர்வாக வழக்கமான சிவப்பு/கருப்பு நிறத்துடன் மஞ்சள்/கருப்பு என்ற ட்யூல்-டோன் பெயிண்ட் அமைப்பும் வழங்கப்படுகிறது.

கடந்த 4 மாதங்களில் 3 முறை விலை உயர்வு... பிஎஸ்6 என்டார்க் 125ஐ விலைமிக்க ஸ்கூட்டராக மாற்றும் டிவிஎஸ்

இந்த கூடுதல் நிறத்தேர்வை என்டார்க்கின் இந்த ஸ்பெஷல் எடிசன் சமீபத்தில் தான் பெற்றிருந்தது. இத்தகைய சிறப்புகளை பெற்று இருப்பினும் ரேஸ் எடிசனின் விலையும் மற்ற இரண்டை போலவே ரூ.500 மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 மாதங்களில் 3 முறை விலை உயர்வு... பிஎஸ்6 என்டார்க் 125ஐ விலைமிக்க ஸ்கூட்டராக மாற்றும் டிவிஎஸ்

இத்தகைய விலை அதிகரிப்புகளுக்கு ஏற்றப்படி ஸ்கூட்டரில் வேறெந்த அப்டேட்டும் கொண்டுவரப்படவில்லை. இதனால் வழக்கமான 125சிசி ஃப்யூல்-இன்ஜெக்டட் சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்டு பிஎஸ்6 என்ஜின் உடனே டிவிஎஸ் என்டார்க் விற்பனையை தொடரவுள்ளது.

கடந்த 4 மாதங்களில் 3 முறை விலை உயர்வு... பிஎஸ்6 என்டார்க் 125ஐ விலைமிக்க ஸ்கூட்டராக மாற்றும் டிவிஎஸ்

அதிகப்பட்சமாக 7000 ஆர்பிஎம்-ல் 9.1 பிஎச்பி பவரையும், 5500 ஆர்பிஎம்-ல் 10.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

கடந்த 4 மாதங்களில் 3 முறை விலை உயர்வு... பிஎஸ்6 என்டார்க் 125ஐ விலைமிக்க ஸ்கூட்டராக மாற்றும் டிவிஎஸ்

பிஎஸ்6 அப்டேட்டாக ஸ்கூட்டரின் எடை முன்பை விட 1.9 கிலோ அதிகரிக்கப்பட்டுள்ளதால், தற்போது டிவிஎஸ் என்டார்க்கின் கெர்ப் எடை 118 கிலோ என்ற அளவில் உள்ளது. அதேபோல் பெட்ரோல் டேங்கின் கொள்ளளவையும் 5 லிட்டரில் இருந்து 5.8 லிட்டராக டிவிஎஸ் நிறுவனம் உயர்த்தியுள்ளது.

கடந்த 4 மாதங்களில் 3 முறை விலை உயர்வு... பிஎஸ்6 என்டார்க் 125ஐ விலைமிக்க ஸ்கூட்டராக மாற்றும் டிவிஎஸ்

அப்கிரேட்கள் எதுவுமின்றி மீண்டும் மீண்டும் விலை அதிகரிப்பை மட்டுமே பெற்றுவரும் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டருக்கு இந்திய சந்தையில் போட்டியாக ஹோண்டா ஆக்டிவா 125, சுஸுகி ஆக்ஸஸ் 125 மற்றும் யமஹாவின் 125சிசி ஸ்கூட்டர்கள் உள்ளன.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Ntorq 125 BS6 Prices Increased Yet Again: Scooter Registers Third Price Hike In 4 Months
Story first published: Wednesday, September 2, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X