கேடிஎம் 790 ஏடிவி-க்கு இதுதான் போட்டி... சீன நிறுவனம் அறிமுகம் செய்த புதிய பைக்... எப்போது அறிமுகம்?

கேடிஎம் நிறுவனத்தின் 790 ஏடிவி பைக்கிற்கு போட்டியாக சீன நிறுவனமான சிஎஃப் மோட்டோ 800 எம்டி பைக்கை வெளியீடு செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

கேடிஎம் 790 ஏடிவி-க்கு இதுதான் போட்டி... சீன நிறுவனம் அறிமுகம் செய்த புதிய பைக்... எப்போது அறிமுகம்?

சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சிஎஃப் மோட்டோ புதிய 800 எம்டி எனும் புதிய அட்வென்சர் டூரர் ரக மோட்டார்சைக்கிள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இரு விதமான வெர்சன்களில் அது விற்பனைக்குக் கொண்டுவரப்பட இருக்கின்றது.

கேடிஎம் 790 ஏடிவி-க்கு இதுதான் போட்டி... சீன நிறுவனம் அறிமுகம் செய்த புதிய பைக்... எப்போது அறிமுகம்?

கேடிஎம் நிறுவனத்தின் 790 அட்வென்சர் பைக்கின் சில டிசைன் தாத்பரியங்களைத் தழுவி இந்த பைக் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் சில தனித்துவமான அம்சங்களையும் இப்பைக்கில் நம்மால் காண முடுகின்றது.

கேடிஎம் 790 ஏடிவி-க்கு இதுதான் போட்டி... சீன நிறுவனம் அறிமுகம் செய்த புதிய பைக்... எப்போது அறிமுகம்?

இப்பைக்கில் ஆஃப்-ரோடு (கரடு-முரடான சாலை) பயணங்களுக்கு ஏற்ற வீல் மற்றும் டயர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த டயர் இரு விதமான பயன்பாட்டு திறனைக் கொண்டிருக்கின்றது. அதாவது, இதனை ஆஃப்-ரோடு பயணம் மட்டுமின்றி ஸ்போர்ட்ஸிற்கு பயன்படுத்தும் வகையிலும் சிறப்பு வசதிகளுடன் டயரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

கேடிஎம் 790 ஏடிவி-க்கு இதுதான் போட்டி... சீன நிறுவனம் அறிமுகம் செய்த புதிய பைக்... எப்போது அறிமுகம்?

இந்த பைக் கேடிஎம் நிறுவனத்தின் 790 அட்வென்சர் பைக்கைத் தழுவி உருவாக்கப்பட்டிருப்பதால் 799சிசி திறன் கொண்ட எல்சி8 பாரல்லல் ட்வின் எஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 95 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டதாகும்.

கேடிஎம் 790 ஏடிவி-க்கு இதுதான் போட்டி... சீன நிறுவனம் அறிமுகம் செய்த புதிய பைக்... எப்போது அறிமுகம்?

இந்த பைக்கில் ஹெட்லைட்டிற்காக இரு எல்இடி மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன், உயரமான வின்ட்ஸ்கிரீன், ஆஃப்-ரோடு வெர்ஷன் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் க்னக்கிள் குவார்ட் மற்றும் பெரிய எஞ்ஜின் குவார்ட் உள்ளிட்டவைச் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

கேடிஎம் 790 ஏடிவி-க்கு இதுதான் போட்டி... சீன நிறுவனம் அறிமுகம் செய்த புதிய பைக்... எப்போது அறிமுகம்?

இப்பைக்கைப் பற்றிய கூடுதல் சிறப்பு தகவல்கள் வெளியிடப்படவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 2021ம் ஆண்டில் இப்பைக் விற்பனைக்கு வரவிருப்பதை முன்னிட்டே தற்போது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சிஎஃப்மோட்டோ 800 எம்டி பைக்கை கிஸ்கா டிசைன் தாத்பரியங்களுடன் உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பு: முதல் படத்தை தவிர பிற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles

English summary
CFMoto Unveiled 800 MT Bike In Two Variants. Read In Tamil.
Story first published: Tuesday, December 22, 2020, 17:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X