Just In
- 4 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 7 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய பிராண்டில் புதிய இ-ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய சீன நிறுவனம்... மின்சார ஸ்கூட்டர்னா இப்படிதான் இருக்கணும்!
புதிய பிராண்ட் பெயரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பிரபல சீன நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டர் பற்றிய சிறப்பு தகவலை இப்பதிவில் காணலாம்.

சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான சிஎஃப் மோட்டோ, ஜீஹோ எனும் புதிய பிராண்டை வெளியூடு செய்துள்ளது. இந்த புதிய பிராண்டின் மூலமாகவே புதுமுக மின்சார இருசக்கர வாகனங்களை அது விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த பிராண்டின் அறிமுகத்தைத்தொடர்ந்து நவீன மற்றும் எதிர்கால ஸ்டைலில் காட்சியளிக்கும் ஜீஹோ சைபர் (Zeeho Cyber) எனும் புதுமுக மின்சார ஸ்கூட்டரை அது அறிமுகம் செய்துள்ளது. இதுவே ஜீஹோ பிராண்டின்கீழ் அறிமுகம் செய்யப்படும் முதல் மின்சார இருசக்கர வாகனம் ஆகும்.

இதனை கிஸ்கோ டிசைன் தாத்பரியத்தைக் கொண்டு சிஎஃப் மோட்டோ வடிவமைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, பிற சிஎஃப் மோட்டோ தயாரிப்புகளைப் போலவே புதிய மின்சார ஸ்கூட்டரும் மிகவும் துடிப்பான ஸ்டைலில் காட்சியளிக்கின்றது. இதில், 10kW திறன் கொண்ட வாட்டர்-கூல்ட் மின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது ஓர் அதி திறன் வாய்ந்த மோட்டார் ஆகும். இது அதிகபட்சமாக 14 பிஎச்பி பவரையும், 20.3 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. அதேசமயம், இந்த ஸ்கூட்டர் வெறும் 2.9 செகண்டுகளில் மணிக்கு 50 கிமீ எனும் வேகத்தை எட்டக்கூடியது. மேலும், இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 110 கிமீ ஆகும். எனவேதான் இதனை சூப்பர் திறன் மின்சார ஸ்கூட்டர் என்கின்றனர்.

ஸ்கூட்டருக்கு தேவையான மின்சார திறனை வழங்கும் வகையில் 4kWh திறன் கொண்ட லித்தியன் அயன் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கின்றது. இது ஓர் முழுமையான சார்ஜில் 130 கிமீ தூரம் வரை பயணிக்க உதவும். மேலும், இதனை 0த்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 30 நிமிடங்களே போதும்.

சிஎஃப்மோட்டோ ஜீஹோ சைபர் மின்சார ஸ்கூட்டர் பிற முக்கிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆகையால், இதன் விலை மற்றும் பிற சுவாரஷ்ய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், இந்த புதிய மின்சார ஸ்கூட்டர் இப்போதே மின் வாகன ஆர்வரலர்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியிருக்கின்றது.

சிஎஃப் மோட்டோ தற்போது வரை அதன் வர்த்தகத்தை இந்தியாவில் தொடங்காத காரணத்தினால் இதன் அறிமுகம் சந்தேகமே. அதேசமயம், இந்திய சந்தையில் கால் தடம் பதிக்க சிஎஃப் மோட்டோ நிறுவனம் கடந்த சில வருடங்களாக முயற்சிகளை மேற்கொண்டு வருவது. ஆகையால், புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்போது வேண்டுமானாலும் அறிமுகமாகலாம்.

இருப்பினும், புதிய ஜீஹோ மின்சார ஸ்கூட்டரின் இடத்தை நிவர்த்திச் செய்கின்ற வகையில் இந்தியாவில் ஏத்தர், பஜாஜ் சேத்தக் ஹீரோ எலெக்ட்ரிக் உள்ளிட்ட மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனையில் இருக்கின்றன.