ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டர் கூட ஓரமா தான் நிக்கனும், உருவாகிறது சிஎஃப் மோட்டோவின் புதிய ஜீஹோ சைபர்!!

சிஎஃப் மோட்டோ நிறுவனம் அதன் புதிய சப்-பிராண்ட்டான ஜீஹோவின் அறிமுகம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டர் கூட ஓரமா தான் நிக்கனும், உருவாகிறது சிஎஃப் மோட்டோவின் புதிய ஜீஹோ சைபர்!!

சீனாவை சேர்ந்த சிஎஃப் மோட்டோவின் இந்த புதிய துணை பிராண்டில் தயாரிக்கப்படவுள்ள ஸ்கூட்டர்களின் கான்செப்ட் மாடல் சைபர் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சைபர் ஸ்கூட்டர்கள் தயாரிப்பு பணிகள் அடுத்த 2021ஆம் ஆண்டில் இருந்து துவங்கவுள்ளன.

ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டர் கூட ஓரமா தான் நிக்கனும், உருவாகிறது சிஎஃப் மோட்டோவின் புதிய ஜீஹோ சைபர்!!

மேலும் இதுதான் சிஎஃப் மோட்டோவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டராகும். இதன் கான்செப்ட் மாடல் எதிர்காலத்திற்கான தோற்றத்தை கொண்டுள்ளதை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள படங்களின் மூலம் அறிய முடிகிறது.

ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டர் கூட ஓரமா தான் நிக்கனும், உருவாகிறது சிஎஃப் மோட்டோவின் புதிய ஜீஹோ சைபர்!!

எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டிஆர்எல்கள், கூர்மையான வெட்டுகள் மற்றும் மெருதுவான வளைவுகளுடன் செதுக்கப்பட்ட உடற் அமைப்பு, நறுக்கப்பட்ட பின் டெயில்லேம்ப்கள் & இண்டிகேட்டர்கள் இதன் வெளிப்பக்கத்தில் நாம் பார்க்கக்கூடிய அம்சங்களாக உள்ளன.

ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டர் கூட ஓரமா தான் நிக்கனும், உருவாகிறது சிஎஃப் மோட்டோவின் புதிய ஜீஹோ சைபர்!!

பின் பயணிக்கான இருக்கை டெயில்லைட்டிற்கு மேற்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஜீஹோ சைபரில் வழங்கப்பட்டுள்ள தொழிற்நுட்ப அம்சங்கள் என்று பார்த்தால், ஜிபிஎஸ், ப்ளூடூத் மற்றும் வை-பை உள்ளிட்டவை அடங்குகின்றன.

ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டர் கூட ஓரமா தான் நிக்கனும், உருவாகிறது சிஎஃப் மோட்டோவின் புதிய ஜீஹோ சைபர்!!

மேற்கூறியவை மூலமாக நாவிகேஷன், வாய்ஸ் கண்ட்ரோல்கள் மற்றும் சாவி இல்லா ஸ்டார்ட் போன்ற வசதிகளை பெறலாம். ஸ்மார்ட்போன் இணைப்பும் இந்த கான்செப்ட் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது. சைபர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஈக்கோ, ஸ்ட்ரீட் மற்றும் ஸ்போர்ட் என வெவ்வேறு விதமான ரைடிங் மோட்களில் தேர்ந்தெடுக்கும் வகையில் வழங்கப்படவுள்ளன.

ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டர் கூட ஓரமா தான் நிக்கனும், உருவாகிறது சிஎஃப் மோட்டோவின் புதிய ஜீஹோ சைபர்!!

ஜீஹோ சைபரின் இந்த தொழிற்நுட்ப அம்சங்கள் தற்போதைய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை காட்டிலும் சிறப்பானவைகளாக உள்ளன. இந்த சைபர் கான்செப்ட் ஸ்கூட்டரில் 4kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டர் கூட ஓரமா தான் நிக்கனும், உருவாகிறது சிஎஃப் மோட்டோவின் புதிய ஜீஹோ சைபர்!!

இது 92 சதவீத ஆற்றலை நேரடியாக எலக்ட்ரிக் மோட்டாருக்கு வழங்கும். இந்த எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பின் மூலமாக அதிகப்பட்சமாக 13.4 எச்பி பவரை பெற முடியும். சிஎஃப் மோட்டோவின் புதிய சைபர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அதிகப்பட்சமாக 130கிமீ வரையில் சிங்கிள் சார்ஜில் இயக்கி செல்ல முடியும்.

ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டர் கூட ஓரமா தான் நிக்கனும், உருவாகிறது சிஎஃப் மோட்டோவின் புதிய ஜீஹோ சைபர்!!

0-வில் இருந்து 50kmph வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எட்டிவிடும் என்றும், அதிகப்பட்சமாக 110kmph வேகத்தில் இயக்க முடியும் எனவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வேகம் தற்சமயம் இந்தியாவில் உள்ள ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரை காட்டிலும் பல மடங்கு அதிகமாகும்.

ஜீஹோ சைபரின் பேட்டரி தான் நாம் கவனிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. ஏனெனில் இதன் பேட்டரி தொகுப்பு -20 டிகிரியில் இருந்து 55 டிகிரி என அனைத்து விதமான வெப்பநிலையில் தடையின்றி செயல்படும். இந்த பேட்டரியை 8 வருடங்களில் 2,500 முறை தாராளமாக சார்ஜ் செய்யலாம்.

Most Read Articles

English summary
CFMoto Zeeho Cyber Electric Scooter Concept – Likely Rival To Ather 450X
Story first published: Thursday, December 10, 2020, 18:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X