பிஎஸ்ஏ பிராண்டில் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! முதலாவதாக இங்கிலாந்தில் அறிமுகமாகுகின்றன

கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்தின் 60 சதவீத பங்கை கொண்டுள்ள மஹிந்திரா க்ரூப்பின் சேர்மன் ஆனந்த் மஹிந்திரா பிஎஸ்ஏ (BSA) மோட்டார்சைக்கிள்களை இங்கிலாந்தில் அசெம்பிள் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎஸ்ஏ பிராண்டில் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! முதலாவதாக இங்கிலாந்தில் அறிமுகமாகுகின்றன

ஆனந்த் மஹிந்திராவின் கூற்றுபடி பார்த்தோமேயானால், பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்கள் அடுத்த 2021ஆம் ஆண்டின் மத்தியில் இங்கிலாந்தில் அசெம்பிள் செய்யப்படவுள்ளன. இதற்கு இன்னும் சில மாதங்கள் தான் உள்ளதால், பிஎஸ்ஏ வரிசை மோட்டார்சைக்கிள் கிட்டத்தட்ட தயாரிப்பு பணிகள் அனைத்தையும் முடிக்கவுள்ளன என்பது தெளிவாகிறது.

பிஎஸ்ஏ பிராண்டில் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! முதலாவதாக இங்கிலாந்தில் அறிமுகமாகுகின்றன

இங்கிலாந்தில் அசெம்பிள் செய்யப்படுவதற்கு பதிலாக இந்தியாவில் உள்ள அட்வான்ஸான மற்றும் செலவு-குறைவான மஹிந்திரா தொழிற்சாலையிலேயே பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள் அசெம்பிள் செய்யப்படலாமே என்ற கேள்வி இந்நேரம் உங்களது மனதில் எழுந்திருக்கும்.

பிஎஸ்ஏ பிராண்டில் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! முதலாவதாக இங்கிலாந்தில் அறிமுகமாகுகின்றன

மஹிந்திரா க்ரூப்பின் இந்த நடவடிக்கை இங்கிலாந்து அரசாங்கத்தின் சலுகைகளை பெறும் வகையில் கொண்டுவரப்படவுள்ளது. அதாவது எலக்ட்ரிக் பைக்குகளின் தயாரிப்பிற்காக 4.6 மில்லியன் யூரோ (ரூ.45.2 கோடி)-வை கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்திற்கு மானியமாக அந்நாட்டு அரசாங்கம் வழங்கியுள்ளது.

பிஎஸ்ஏ பிராண்டில் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! முதலாவதாக இங்கிலாந்தில் அறிமுகமாகுகின்றன

இந்த தொகையின் உதவியுடன் இங்கிலாந்து, ஆக்ஸ்போர்டுஷைர் மாகாணத்தில் கிளாசிக் லெஜண்ட்ஸின் தொழிற்நுட்ப மற்றும் வடிவமைப்பு மையம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்னால், கிளாசிக் லெஜண்ட்ஸ், எலக்ட்ரிக் வாகன ப்ளாட்ஃபாரத்தின் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக கூறியிருந்தோம்.

பிஎஸ்ஏ பிராண்டில் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! முதலாவதாக இங்கிலாந்தில் அறிமுகமாகுகின்றன

இதனால் 2021ஆம் ஆண்டின் மத்தியில் பிஎஸ்ஏ பெட்ரோல் மோட்டார்சைக்கிள்களை தொடர்ந்து எலக்ட்ரிக் பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்கள் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு இறுதியில் இருந்து வெளிவரவுள்ளன. மேலும் இந்த எலக்ட்ரிக் வாகன ப்ளாட்ஃபாரத்தை எதிர்காலத்தில் ஜாவா மோட்டார்சைக்கிள் பிராண்டும் பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிஎஸ்ஏ பிராண்டில் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! முதலாவதாக இங்கிலாந்தில் அறிமுகமாகுகின்றன

அடுத்த எரிபொருள் பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிளை பற்றி இதுவரை கிடைத்துள்ள தகவல்களில் இந்த மோட்டார்சைக்கிளின் விலை 5 ஆயிரம் யூரோவில் இருந்து 10 ஆயிரம் யூரோ (ரூ.4.9 லட்சம் - ரூ.9.8 லட்சம்) வரையில் நிர்ணயிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிஎஸ்ஏ பிராண்டில் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள்!! முதலாவதாக இங்கிலாந்தில் அறிமுகமாகுகின்றன

இதனால் இந்த பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிளின் விலை வெளிநாட்டு சந்தைகளில் பிரபலமான ராயல் என்பீல்டு 650சிசி ட்வின் பைக்குகளை காட்டிலும் அதிகமாக ட்ரையம்ப் பொன்னேவில்லிஸ் பைக்கிற்கு இணையானதாக கொண்டுவரப்படும். நம் நாட்டு சந்தைக்கு இந்த விலை அதிகம் என்பதால் இந்தியாவில் இன்னும் சில வருடங்களுக்கு பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்கள் அறிமுகமாக வாய்ப்பில்லை.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Classic Legends to assemble BSA motorcycles in the UK next year
Story first published: Wednesday, November 18, 2020, 2:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X