டக்கார் ராலியில் டிவிஎஸ் அணி அசத்தல்... பந்தய களத்தில் அனல் பறக்கிறது!

டக்கார் ராலி பந்தயத்தின் ஸ்டேஜ்-4 பந்தய களம் மிக நீண்ட பயணமாக அமைந்தாலும், கலவையான நிலபரப்புகளால் வீரர்கள் சற்றே நிதான போக்கை கடைபிடித்து நிறைவு செய்தனர். இதனால், வீரர்கள் சில சவால்கள் இருந்தாலும், அதனை உற்சாகத்துடன் கடந்து நிறைவு செய்தனர்.

டக்கார் ராலியில் டிவிஎஸ் அணி அசத்தல்... பந்தய களத்தில் அனல் பறக்கிறது!

சவூதி அரேபியாவில் நடந்து வரும் டக்கார் ராலி பந்தயம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. முதல் 3 ஸ்டேஜ் போட்டிகளும் வீரர்களுக்கு மிக கடுமையான சவால்களை தந்தன. குறிப்பாக, மூன்றாவது ஸ்டேஜ் போட்டி மிக சவாலாக இருந்ததால், பல விபத்துக்கள் மற்றும் பாதிப்புகளை சந்தித்தனர்.

டக்கார் ராலியில் டிவிஎஸ் அணி அசத்தல்... பந்தய களத்தில் அனல் பறக்கிறது!

இந்த நிலையில், நான்காவது ஸ்டேஜ் போட்டி வீரர்களுக்கு சற்றே ஆசுவாசத்தை தந்தது. ஏனெனில், இதில் பாலைவன பகுதி குறைவாக இருந்ததால், சவால்கள் இருந்தாலும், வீரர்கள் உத்வேகத்துடன் போட்டியை நிறைவு செய்தனர்.

டக்கார் ராலியில் டிவிஎஸ் அணி அசத்தல்... பந்தய களத்தில் அனல் பறக்கிறது!

நான்காவது ஸ்டேஜ் போட்டியானது நியோம் மற்றும் அல் உலா இடங்களுக்கு இடையே 672 கிலோமீட்டர் கடக்கும் வகையில் அமைந்தது. இதில், 453 கிலோமீட்டர் தூரம் ஸ்பெஷல் ஸ்டேஜ் களமாக அமைந்தது. வழக்கம்போல் கடுமையான சவால்கள் இருந்தாலும், பொதி மணல் நிறைந்த பாலைவன பகுதி குறைவாக இருந்ததால், வீரர்கள் நம்பிக்கையுடன் கடக்க முனைந்தனர்.

டக்கார் ராலியில் டிவிஎஸ் அணி அசத்தல்... பந்தய களத்தில் அனல் பறக்கிறது!

இந்தியாவை சேர்ந்த நம்பர்-1 ராலி ரேஸ் பந்தய வீரரான சி.எஸ்.சந்தோஷ் நான்காவது ஸ்டேஜ் போட்டியில் 44வது இடத்தை பிடித்தார். ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் அணி சார்பில் பங்கேற்று வரும் சி.எஸ்.சந்தோஷ் ஒட்டுமொத்த தர வரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறி 42வது இடத்தை பிடித்தார்.

டக்கார் ராலியில் டிவிஎஸ் அணி அசத்தல்... பந்தய களத்தில் அனல் பறக்கிறது!

நான்காவது ஸ்டேஜ் போட்டி பற்றி சி.எஸ்.சந்தோஷ் குறிப்பிடுகையில்," நான்காவது ஸ்டேஜ் போட்டியில் அதிக பாறைகள் மற்றும் அதிவேகமாக கடப்பதற்கான வாய்ப்பு இருந்ததால், உற்சாகத்தை அளித்தது. இந்த ஸ்டேஜில் ஒரே ஒரு சிறிய தவறு செய்தேன். ஆனால், அதனை சரிசெய்து கொண்டேன்.

டக்கார் ராலியில் டிவிஎஸ் அணி அசத்தல்... பந்தய களத்தில் அனல் பறக்கிறது!

தற்போது எனது கைகள் மிகவும் வலுவாகவும், நம்பிக்கையாகவும் இருப்பதாக உணர்கிறேன். அடுத்து வரும் சில நாட்கள் மிக சவாலானதாக இருக்கும் என்று கருதுகிறேன். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்,"என்று தெரிவித்தார்.

டக்கார் ராலியில் டிவிஎஸ் அணி அசத்தல்... பந்தய களத்தில் அனல் பறக்கிறது!

டக்கார் ராலியில் ஹீரோ அணியின் மிக அனுபவம் வாய்ந்த வீரர் பாவ்லோ கான்க்ளேவ்ஸ் மூன்றாவது ஸ்டேஜ் போட்டியின்போது எஞ்சின் பிரச்னையால் 110வது இடத்திற்கு தள்ளப்பட்டார். ஆனால், நான்காவது ஸ்டேஜில் மிகச் சிறப்பான முறையில் 4வது இடத்தை பிடித்தார். இதனால், ஒட்டுமொத்த தர வரிசையில் 110வது இடத்தில் இருந்து 51வது இடத்திற்கு முன்னேறினார்.

டக்கார் ராலியில் டிவிஎஸ் அணி அசத்தல்... பந்தய களத்தில் அனல் பறக்கிறது!

ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் அணியின் மற்றொரு வீரர் செபாஸ்டியன் பஹ்லர் நான்காவது ஸ்டேஜில் 21வது இடத்தை பிடித்தார். ஒட்டுமொத்த தர வரிசையில் 20வது இடத்தில் உள்ளார். நான்காவது ஸ்டேஜ் பற்றி பஹ்லர் குறிப்பிடுகையில்," இது மிகவும் கடினமான மிக நீளமான பந்தயமாக அமைந்தது. ஏராளமான பாறைகள், பாலைவனம் உள்ளிட்டவற்றையும் கொண்டிருந்தது. வழியை சரியாக கணித்து செல்வது கடினமாக இருந்ததால், வேகத்தை குறைத்துக் கொண்டேன்," என்றார்.

டக்கார் ராலியில் டிவிஎஸ் அணி அசத்தல்... பந்தய களத்தில் அனல் பறக்கிறது!

ஷெர்கோ டிவிஎஸ் ராலி அணி வீரர்கள் மிக நிதானமான போக்கை கடைபிடித்து டாப் 10 அணிகளில் ஒன்றாக சாதித்து வருகின்றனர். டிவிஎஸ் அணி வீரர் ஜானி அபுபெர்ட் 7வது இடத்தை பிடித்தார். லாரன்ஸோ சான்டோலினா மற்றும் அட்ரியன் மெட்ஜ் ஆகியோர் 10வது மற்றும் 15வது இடத்தை பிடித்தனர்.

டக்கார் ராலியில் டிவிஎஸ் அணி அசத்தல்... பந்தய களத்தில் அனல் பறக்கிறது!

ஃபார்முலா ஒன் முன்னாள் சாம்பியன் ஃபெர்னான்டோ அலான்ஸோ நான்காவது ஸ்டேஜில் 10வது இடத்தை பிடித்ததுடன், ஒட்டுமொத்த தர வரிசை பட்டியலில் டாப் 10 இடங்களில் தக்க வைத்து வருகிறார்.

டக்கார் ராலியில் டிவிஎஸ் அணி அசத்தல்... பந்தய களத்தில் அனல் பறக்கிறது!

பைக் பிரிவில் ஒட்டு மொத்த தர வரிசையில் மான்ஸ்டர் எனெர்ஜி ஹோண்டா அணி வீரர்களான ரிக்கி பிராபெக் முதல் இடத்திலும், கெவின் பெனாவிட்ஸ் இரண்டாவது இடத்தையும், ஜோஸ் இக்னாசியோ கார்னெஜோ மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

Most Read Articles
English summary
2020 Dakar Stage 4 went underway with, Ricky Brabec from (Monster Energy Honda) leading the bike category. José Ignacio took the victory on fourth stage, with his teammate Kevin Benavides in a close second.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X