Just In
- 31 min ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 1 hr ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- News
நல்ல கூட்டம் வேறு.. மாஸ்க் அணியாத மோடி.. குவியும் விமர்சனங்களும், அக்கறை அறிவுரைகளும்!
- Movies
மார்ச் மாதம் இல்லையாம்.. மோகன்லாலின் அந்த மெகா பட்ஜெட் பட ரிலீஸ் மீண்டும் தள்ளி வைப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டக்கார் ராலியில் கலக்கும் ஹீரோ, டிவிஎஸ் அணி வீரர்கள்!
டக்கார் ராலியில் இந்தியாவின் ஹீரோ மற்றும் டிவிஎஸ் நிறுவனங்களின் சார்பில் பங்கேற்றிருக்கும் அணி வீரர்கள் முதல் ஸ்டேஜில் முதல் 15 இடங்களுக்குள் வந்து அசத்தி இருக்கின்றனர். கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

உலகின் மிக மிக சவாலான மோட்டார் பந்தயமாக டக்கார் ராலி குறிப்பிடப்படுகிறது. இந்த ராலியில் பங்கேற்று வெற்றி பெறுவது உலகம் முழுவதும் உள்ள மோட்டார் பந்தய வீரர்களின் வாழ் நாள் கனவாக உள்ளது. இந்த முறை டக்கார் ராலி சவூதி அரேபியாவில் நேற்று துவங்கியது.

டக்கார் ராலி துவங்கிய முதல் ஸ்டேஜில் வீரர்களுக்கு மத்தியில் மிக கடுமையான போட்டி நிலவியது. ஜெத்தா நகரில் இருந்து அல் வஜ் வரையில் 319 கிலோமீட்டர் தூரத்திற்கு முதல் ஸ்டேஜ் போட்டி நடந்தது. முதல் ஸ்டேஜ் என்பது மினி டக்கார் என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது, டக்கார் ராலியின் ஒட்டுமொத்த சவால்களை கொண்டதாக முதல் ஸ்டேஜ் கருதப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியாவை சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனங்களின் ரேஸிங் அணி வீரர்கள் முதல் ஸ்டேஜில் கலக்கியுள்ளனர். முதல் ஸ்டேஜில் ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் அணி வீரர் பாவ்லோ கன்கால்வ்ஸ் 12வது இடத்தையும், டிவிஎஸ் ராலி ஃபேக்டரி டீம் அணி வீரர் அட்ரியன் மெட்ஜ் 15வது இடத்தையும் பிடித்து அசத்தினர்.

ஹோண்டா ரேஸிங் அணிக்காக 5 ஆண்டுகள் பங்கேற்ற போர்ச்சுக்கலை சேர்ந்த ஹீரோ அணி வீரர் பாவ்ரோ மிகுந்த கவனத்துடன், நேவிகேஷன் குளறுபடிகள் மற்றும் கீழே விழாதவகையில் நேரத்தை சிறப்பாக கையாண்டு இந்த குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறார்.

ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் அணியின் மற்றொரு வீரர் செபாஸ்டியன் பஹ்லர் 32வது இடத்தை பிடித்தார். ஆரம்பம் சிறப்பாக இருப்பதால், ஹீரோ அணி நிர்வாகம் உற்சாகம் அடைந்துள்ளது.

ஹீரோ அணி சார்பில் பங்கேற்றுள்ள இந்திய வீரர் சி.எஸ்.சந்தோஷ் 39வது இடத்தை பிடித்தார். முதல் ஸ்டேஜில் கடும் சவால்களை கடந்து முன்னேறி வந்த அவர் இறுதியில் சிறிய விபத்தை சந்தித்ததால், சற்றே பின்னடவை சந்தித்தார்.

எனினும், முதல் ஸ்டேஜ் சிறப்பாகவே அமைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஹீரோ அணியின் ஜாக்கிம் ரோட்ரிகஸ் பைக்கில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்னை காரணமாக, விலகினார்.

ஷெர்கோ டிவிஎஸ் அணியின் ஜானி அபுபெர்ட் 22வது இடத்தையும், லாரென்ஸோ சான்டோலினோ 26வது இடத்தையும் பிடித்துள்ளனர். இது நிச்சயம் ஷெர்கோ டிவிஎஸ் ரேஸிங் அணிக்கு பெரும் உற்சாகத்தை தரும் விஷயமாக கூறலாம்.

டக்கார் ராலியில் முதல்முறையாக களமிறங்கி உள்ள இந்திய வீரர் ஹரித் நோவா முதல் ஸ்டேஜ் முடிவில் 111வது இடத்தை பிடித்தார்.

பைக் பிரிவில் முதல் ஸ்டேஜ் முடிவில் டோபி பிரைஸ் முதல் இடத்தை பிடித்தார். கார் பிரிவில் வைடோடாஸ் ஸாலா முதல் இடத்தை பிடித்து அசத்தினார். ஃபார்முலா -2 பந்தயத்தில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஃபெர்னான்டோ அலான்ஸோ 11வது இடத்தை பிடித்தார்.

இன்று இரண்டாவது ஸ்டேஜ் விறுவிறுப்பாக நடந்து வருவதுடன் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. தொடர்ந்து டக்கார் ராலி குறித்த செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படிக்கலாம்.