Just In
- 3 hrs ago
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- 4 hrs ago
350,000வது மான்ஸ்டர் பைக்கை டெலிவிரி செய்தது டுகாட்டி!! இந்தியாவில் விற்பனையில் இருக்கா?
- 6 hrs ago
இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா? நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்!
- 6 hrs ago
ஹோண்டா மின்சார பைக் எப்படி இருக்கும் தெரியுமா?.. இணையத்தில் கசிந்த புகைப்படம்...
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Movies
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த டிசம்பரில், ஹோண்டா வாகனங்களை வாங்குவோர் ரூ.5 ஆயிரம் வரையில் சேமிக்கலாம்!!
ஹோண்டாவின் ஆக்டிவா 6ஜி, ஹார்னெட், சிடி110 இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரம் வரையிலான பணம் தள்ளுபடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆண்டு இறுதிகளில் விற்பனையை அதிகரிக்க தயாரிப்பு நிறுவனங்கள் சலுகைகளை அறிவிப்பது வழக்கம். இந்த வகையில் தற்போது ரூ.5 ஆயிரம் வரையிலான 5 சதவீத பணம் தள்ளுபடிகளை ஹோண்டா டூவீலர்ஸ் அதன் தயாரிப்புகளுக்கு அறிவித்துள்ளது.

இந்த சலுகை அறிவிப்புகள் க்ரெட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட்டை பயன்படுத்தி வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே செல்லப்படியாகும். எளிமையாக வாகனத்தை வாங்குவதற்காக முன்தொகை செலுத்த வேண்டிய அவசியமில்லை மற்றும் ஆவணங்கள் தேவை இல்லை போன்ற வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு ஹோண்டா வழங்கியுள்ளது.

ஆனால் உரிமையாளர் நிச்சயம் அங்கீகரிக்கப்பட்ட வங்கி கணக்கை வைத்திருக்க வேண்டும். அதேபோல் ஹோண்டா நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ள நிதி கூட்டணி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களாக இருக்க வேண்டும்.

இந்த சலுகைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வரம்பின்படி ஆக்டிவா, புதிய ஹார்னெட் மற்றும் சிடி110 ட்ரீம் டீலக்ஸ் என்ற ஹோண்டா தயாரிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த சலுகையின்படி வாங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை வங்கி இருப்பு மற்றும் / அல்லது கிரெடிட் கார்டு வரம்பால் வெளிப்படையாக வரையறுக்கப்படுகிறது.

மேலும் இதற்கான தொகையை மாதத்தவணையாகவும் மாற்றி கொள்ளலாம். மேற்குறிப்பிடப்பட்டுள்ள தயாரிப்புகள் ஹோண்டா டூ வீலர்ஸ் நிறுவனத்தின் விற்பனைக்கு முக்கிய பங்காற்றுகின்றன. குறிப்பாக ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் இந்தியாவிலேயே அதிகளவில் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர் மாடலாக உள்ளது.

ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் கடந்த 2020 நவம்பர் மாதத்தில் 4,33,206 இருசக்கர வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதுவே 2019ஆம் வருடத்தில் இதே நவம்பர் மாதத்தில் 3,96,399 யூனிட் வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் கடந்த மாதத்தில் விற்பனையில் 10 சதவீத வளர்ச்சியை இந்நிறுவனம் கண்டுள்ளது.