இந்த மொபட்டோட விலை முழுசா ரூ. 20,000 கூட இல்ல! நம்ப முடியாத மிக மிக மலிவு விலையில் டிடெல் மொபட்..!

பிரபல இந்திய நிறுவனமான டிடெல் ரூ. 20 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் மின்சார மொபட்டை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்த மொபட்டோட விலை முழுசா ரூ. 20,000ம் கூட இல்ல... மிக மிக மலிவு விலையில் சீன தயாரிப்பிற்கே டஃப் கொடுக்கும் டிடெல்!

உலகின் மிக மிக மலிவு விலைக் கொண்ட இருசக்கர வாகனத்தை பிரபல டிடெல் (Detel) நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மின்சாதனப் பொருட்களை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனம், மிக மிக மலிவு விலையில் மின்னணு பொருட்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் பெயர்போன நிறுவனமாக இருக்கின்றது.

இந்த மொபட்டோட விலை முழுசா ரூ. 20,000ம் கூட இல்ல... மிக மிக மலிவு விலையில் சீன தயாரிப்பிற்கே டஃப் கொடுக்கும் டிடெல்!

குறிப்பாக இந்நிறுவனம் இந்தியாவில் ரூ. 299க்கு செல்போனை களமிறக்கியதன் மூலம் மிகவும் பிரபலமடைந்தது. இதைத்தொடர்ந்து, ரூ. 3,999க்கு எல்இடி டிவியையும் அது களமிறக்கியது. இந்த தயாரிப்புகள்குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துகள் நிலவி வந்தாலும், இவற்றின் மூலமே டிடெல் புகழின் உச்சத்தைத் தொட்டது.

இந்த மொபட்டோட விலை முழுசா ரூ. 20,000ம் கூட இல்ல... மிக மிக மலிவு விலையில் சீன தயாரிப்பிற்கே டஃப் கொடுக்கும் டிடெல்!

இந்நிலையிலேயே மிக மிகக் குறைந்த விலையில் மின்சார இருசக்கர வாகனத்தை டிடெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 19,999 ஆகும். வழக்கமான மிதிவண்டியின் விலையில் இந்த மொபட் ரக மின்சார இருசக்கர வாகனம் அறிமுகம் செய்திருப்பது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த மொபட்டோட விலை முழுசா ரூ. 20,000ம் கூட இல்ல... மிக மிக மலிவு விலையில் சீன தயாரிப்பிற்கே டஃப் கொடுக்கும் டிடெல்!

மேலும், இந்த மொபட்டை சாலையில் இயக்க லைசென்ஸ் தேவையில்லை என்பது கூடுதல் சிறப்பு தகவலாக உள்ளது. அதேபோன்று, இதனை பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில் இந்த மின்சார மொபட் அதிகபட்சமாக 25 கிமீ எனும் வேகத்தில் மட்டுமே செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றது.

இந்த மொபட்டோட விலை முழுசா ரூ. 20,000ம் கூட இல்ல... மிக மிக மலிவு விலையில் சீன தயாரிப்பிற்கே டஃப் கொடுக்கும் டிடெல்!

நகர பயன்பாட்டிற்கு இந்த மொபட் நிச்சயம் நல்ல பயனை அளிக்கும் என கூறப்படுகின்றது. இளைஞர்கள், சந்தைக்கு செல்வோர் மற்றும் குறுகிய இடைவெளி பயணத்தை மேற்கொள்வோருக்கு உதவும் வகையில் இந்த மொபட் வடிவமைக்கப்பட்டிருப்பதாக டிடெல் தெரிவித்துள்ளது.

இந்த மொபட்டோட விலை முழுசா ரூ. 20,000ம் கூட இல்ல... மிக மிக மலிவு விலையில் சீன தயாரிப்பிற்கே டஃப் கொடுக்கும் டிடெல்!

இதில், 250 வாட் மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கின்றது. இதுவே, மொபட்டை அதிகபட்சமாக மணிக்கு 25கிமீ வேகத்தில் பயணிக்க உதவுகின்றது. இதற்கு தேவையான மின் சக்தியை 48V 12 Ah லித்தியன் அயர்ன் பாஸ்பேட் பேட்டரி வழங்குகின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 60கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்த மொபட்டோட விலை முழுசா ரூ. 20,000ம் கூட இல்ல... மிக மிக மலிவு விலையில் சீன தயாரிப்பிற்கே டஃப் கொடுக்கும் டிடெல்!

ஆனால், இதை முழுமையாக சார்ஜ் செய்ய குறைந்த 6 மணி நேரம் முதல் 7 மணி நேரம் வரை ஆகுமாம். அதேசமயம், ஃபாஸ்ட் சார்ஜ் பாயிண்ட் மூலம் சார்ஜ் செய்யும்போது இதைவிட மிக மிகக் குறைந்த நேரத்தில் இது சார்ஜாகிவிடும் என கூறப்படுகின்றது. இந்த மொபட்டிற்கு ஹெல்மெட்டை இலவசமாக வழங்க டிடெல் திட்டமிட்டுள்ளது.

இந்த மொபட்டோட விலை முழுசா ரூ. 20,000ம் கூட இல்ல... மிக மிக மலிவு விலையில் சீன தயாரிப்பிற்கே டஃப் கொடுக்கும் டிடெல்!

இதன் விலை மலிவானதாக இருந்தாலும் அதில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்கள் எக்கசக்கமாக காணப்படுகின்றது. அதாவது, வழக்கமான மொபட்டுகளில் என்னவெல்லாம் அம்சங்கள் இடம்பெற்றிருக்கும், அவையனைத்தும் டிடெல் நிறுவனத்தின் இந்த குறைந்த விலை மொபட்டிலும் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, சார்ஜ் தீர்ந்துவிட்டால் பெடல் செய்தே இலக்கை நோக்கி நகர்கின்ற வகையில் மிதிப்பான் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த மொபட்டோட விலை முழுசா ரூ. 20,000ம் கூட இல்ல... மிக மிக மலிவு விலையில் சீன தயாரிப்பிற்கே டஃப் கொடுக்கும் டிடெல்!

இதுமட்டுமின்றி, வட்ட வடிவ முகப்பு மின் விளக்கு, சாயும் வசதிக் கொண்ட பின்னிருக்கை, சிறப்பான சஸ்பெனுக்காக டெலிஸ்கோபிக் ஃபோர்க், டர்ன் இன்டிகேட்டர்கள் ஆகியவையும் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், பொருட்களை எடுத்துச் செல்ல ஏதுவாக முன் பக்கத்தில் கேரியர், அலாய் வீல், டிரம் பிரேக் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த மொபட்டோட விலை முழுசா ரூ. 20,000ம் கூட இல்ல... மிக மிக மலிவு விலையில் சீன தயாரிப்பிற்கே டஃப் கொடுக்கும் டிடெல்!

மிக மிகக் குறைந்த விலையில் பல்வேறு அம்சங்களை டிடெல் மொபட் தாங்கியிருப்பதால் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளது. இதற்கான விற்பனை தற்போது ஆன்-லைன் தளம் வாயிலாக தொடங்கியுள்ளது. ரூ. 1,999 என்ற தொகையில் முன் பதிவு நடைபெற்று வருகின்றது.

இந்த மொபட்டோட விலை முழுசா ரூ. 20,000ம் கூட இல்ல... மிக மிக மலிவு விலையில் சீன தயாரிப்பிற்கே டஃப் கொடுக்கும் டிடெல்!

www.detel-india.com என்ற தளத்தை தனியார் புக்கிங்கிற்காகவும், www.b2badda.com என்ற தளத்தை பல்காக ஆர்டர் செய்யும் விற்பனையாளர்களுக்காகவும் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் சர்வீஸ் மையங்கள் பற்றிய தகவல் மற்றும் எப்போது டெலிவரி வழங்கப்படும் என்ற தகவல் முழுமையாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த மொபட் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்க தவறவில்லை.

Most Read Articles

English summary
Detel Electric Moped Launched At Rs.20k In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X