டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 950 எஸ் பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதி அறிவிப்பு... புக்கிங்கும் துவங்கியது

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 950 எஸ் ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்கின் பிஎஸ்-6 மாடலுக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 950 எஸ் பைக்கின் பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதி அறிவிப்பு... புக்கிங்கும் துவங்கியது!

ஸ்போர்ட்ஸ் டூரர் வகை பைக்குகளில் மிகச் சிறந்த பிரிமீயம் பைக் மாடல் என்ற மதிப்பை டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா பைக் மாடல்கள் பெற்றுள்ளன. இதில், ஸ்போர்ட்ஸ் டூரர் ரகத்தில் மிக குறைவான திறன் கொண்ட மாடலாக டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 950 எஸ் பைக் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இந்த பைக் ஸ்டான்டர்டு, எஸ் மற்றும் எஸ் ஸ்போக்ஸ் சக்கரங்கள் என மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 950 எஸ் பைக்கின் பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதி அறிவிப்பு... புக்கிங்கும் துவங்கியது!

இந்த நிலையில், இந்த புதிய பைக் மாடலை இந்தியாவிலும் களமிறக்க உள்ளது டுகாட்டி நிறுவனம். மல்டிஸ்ட்ரேடா 950 மாடலின் எஸ் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வரும் நவம்பர் 2ந் தேதி விலை அறிவிப்புடன் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 950 எஸ் பைக்கின் பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதி அறிவிப்பு... புக்கிங்கும் துவங்கியது!

இந்த புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 950 எஸ் பைக்கிற்கு ரூ.1 லட்சம் செலுத்தி டுகாட்டி டீலர்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். வரும் நவம்பர் முதல் வாரத்தில் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 950 எஸ் பைக்கின் பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதி அறிவிப்பு... புக்கிங்கும் துவங்கியது!

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 950 எஸ் பைக்கில் ஏராளமான தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்துள்ளன. இந்த பைக்கில் 937சிசி டெஸ்டஸ்ட்ரேட்டா எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 113 எச்பி பவரை வழங்கும். இந்த எஞ்சின் யூரோ-5 மாசு உமிழ்வு விதி தரத்திற்கு இணையானது. அதாவது, இந்தியாவில் இந்த எஞ்சின் பிஎஸ்-6 விதிகளுக்கு நிகரான அம்சங்களுடன் வருகிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 950 எஸ் பைக்கின் பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதி அறிவிப்பு... புக்கிங்கும் துவங்கியது!

இந்த பைக்கில் டுகாட்டி ஸ்கைஹூக் சஸ்பென்ஷன் எவோ சிஸ்டம், டுகாட்டி குயிக் ஷிஃப்ட் தொழில்நுட்பம், முழுமையான எல்இடி ஹெட்லைட், டுகாட்டி கார்னரிங் லைட்ஸ் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 950 எஸ் பைக்கின் பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதி அறிவிப்பு... புக்கிங்கும் துவங்கியது!

தவிரவும், இந்த பைக்கில் 5 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், க்ரூஸ் கன்ட்ரோல், ஹேண்ட் ஃப்ரீ சிஸ்டம், 19 அங்குல முன்சக்கரம், 840 மிமீ உயரத்திலான இருக்கை அமைப்பு, பாஷ் கார்னரிங் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், முன்சக்கரத்தில் 320 மிமீ டியூவல் டிஸ்க் பிரேக்குகள், பின்சக்கரத்தில் 265 மிமீ ரோட்டர் கொண்ட டிஸ்க் பிரேக் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 950 எஸ் பைக்கின் பிஎஸ்-6 மாடல் அறிமுக தேதி அறிவிப்பு... புக்கிங்கும் துவங்கியது!

டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா 950 பைக் மாடலானது ரூ.12.84 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக வரும் புதிய மாடலானது ரூ.13 லட்சத்தை ஒட்டி விலை நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட தூர பயணம் மற்றும் தினசரி பயன்பாடு என இரண்டிற்கும் இந்த பைக் மாடல் சிறப்பாக இருக்கும் என்று டுகாட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Italian motorcycle manufacturer Ducati has announced the opening of pre-bookings for its BS6 Multistrada 950 S in India.
Story first published: Monday, October 26, 2020, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X