Just In
- 1 hr ago
ஒருபக்கம் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சலுகை!! மோட்டார்சைக்கிள் விற்பனையில் கவாஸாகியின் அடுத்தடுத்த அறிவிப்புகள்
- 3 hrs ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 4 hrs ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 15 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
Don't Miss!
- News
கமல் காட்டிய குறும்படம் .. ஒட்டுமொத்த எம்ஜிஆர் ரசிகர்களும் நெகிழ்ச்சி.. கையை பிசைக்கும் அதிமுக
- Finance
40% வரை ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி.. அமேசானின் சூப்பர் சலுகைகள்.. கவனிக்க வேண்டிய ஆஃபர் மழை..!
- Sports
எதிரணி வீரர்களை சீண்டறது கீழ்த்தரமானது.. இதுமூலமா நம்மோட பலவீனம்தான் வெளிப்படும்!
- Movies
திருமணம் செய்வதாக ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை.. பைலட் மீது டிவி நடிகை பரபரப்பு புகார்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா பைக்கிற்கு புத்தம் புதிய எஞ்சின்... ஓட்டுபவரை பரவசத்தில் ஆழ்த்துமாம்!
புதிய தலைமுறை மல்டிஸ்ட்ரேடா பைக் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், இந்த பைக்கிற்காக உருவாக்கப்பட்டு இருக்கும் புத்தம் புதிய எஞ்சின் மற்றும் அதன் விபரங்களை டுகாட்டி நிறுவனம் இன்று நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

பிரிமீயம் வகை அட்வென்ச்சர் டூரர் பைக் மார்க்கெட்டில் டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. உலக அளவில் இந்த பைக்கிற்கு அதிக ரசிகர்களும் உண்டு. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையும், இந்த பைக்கின் அந்தஸ்தையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் புதிய தலைமுறை மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டுகாட்டி மல்டிஸ்ட்ரேடா வி4 என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய மாடலுக்காக வி4 க்ரான்டூரிஷ்மோ என்ற பெயரில் வரும் 4ந் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த பைக்கிற்காக விசேஷ அம்சங்களுடன் கூடிய புதிய எஞ்சின் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டுகாட்டி வி4 க்ரான்டூரிஷ்மோ பைக்கில் நான்கு சிலிண்டர்கள் கொண்ட 1,158 சிசி 90 டிகிரி கோணத்தில் பொருத்தப்பட்ட எஞ்சின் இடம்பெறுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 170 எச்பி பவரையும், 125 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எஞ்சின் யூரோ-5 மாசு உமிழ்வு தர விதிகளுக்கு இணையானது. டுகாட்டி குயிக் ஷிஃப்ட் வசதி மூலமாக கியர்களை மிக எளிதாக கூட்டி குறைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த புதிய எஞ்சின் மிகவும் இலகு எடை கொண்டதாகவும், அடக்கமான வடிவத்தில், அதி செயல்திறனை வழங்குவதற்கும், அதிக முறுக்கு விசையை கொணர்வதற்குமான தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு சிறந்த சாகச பைக்கிற்கு தேவையான அம்சங்களை மனதில் கொண்டு உரிமையாளர் எங்கு வேண்டுமானாலும் எந்த சமரசமும் இல்லாமல் செல்வதற்கான இந்த எஞ்சின் உருவாக்கப்பட்டுள்ளதாக டுகாட்டி தெரிவித்துள்ளது.

இந்த பைக் எஞ்சினின் மிக முக்கியமான சிறப்பம்சமாக 60,000 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒருமுறை மட்டுமே முக்கிய பராமரிப்புப் பணிகள் தேவைப்படும் என்று டுகாட்டி தெரிவித்துள்ளது. இதற்கு தக்கவாறு, அதி உயர்வகை உதிரிபாகங்கள் மற்றும் வடிவமைப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய எஞ்சின் தவிர்த்து, புதிய மல்டிஸ்ட்ரேடா வி4 பைக்கிற்கான அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தையும் டுகாட்டி வெளியிட்டுள்ளது. பாஷ் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறது. இதற்காக பைக்கின் முன்புறத்தில் ஒரு ரேடார் கருவியும், பின்புறத்தில் ஒரு ரேடார் சாதனமும் பொருத்தப்படும்.
குறிப்பு: மாதிரி படம் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் உள்ள ரேடார் கருவி மூலமாக பைக்கின் முன்னால் செல்லும் வாகனங்களின் வேகம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கண்காணித்து அதற்கு தக்கவாறு பைக்கின் வேகத்தை கூட்டிக் குறைத்துக் கொள்ளும். பின்னால் இருக்கும் ரேடார் மூலமாக பின்னால் வரும் வாகனங்களின் வேகம், நெருக்கமாக வரும் அபாயம் குறித்து ஓட்டுபவருக்கு எச்சரிக்கை வழங்கும்.
குறிப்பு: மாதிரி படம் கொடுக்கப்பட்டுள்ளது.