Just In
- 3 min ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 1 hr ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 1 hr ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Movies
மார்ச் மாதம் இல்லையாம்.. மோகன்லாலின் அந்த மெகா பட்ஜெட் பட ரிலீஸ் மீண்டும் தள்ளி வைப்பு!
- News
150 ஆடுகள், 300 கோழிகள், 2500 கிலோ பிரியாணி அரிசி.. கலகலக்கும் முனியாண்டி திருவிழா.. பின்னணி என்ன?
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Education
8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்திய ஷோரூம்களில் புதிய டுகாட்டி பனிகளே வி2... எக்ஸ்ஷோரூம் விலை ரூ.17 லட்சம்...
புதிய அறிமுகமான டுகாட்டி பனிகளே வி2 இந்திய டீலர்ஷிப்களை வந்தடைய துவங்கிள்ளது. இதுகுறித்து பைக்வாலே செய்திதளம் வெளியிட்டுள்ள படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டுகாட்டி பனிகளே 959 பைக்கிற்கு மாற்றாக விற்பனைக்கு வந்த புதிய பனிகளே வி2-ன் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.16.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பனிகளே 959 பைக்கின் விலை ரூ.15.3 லட்சமாக தான் இருந்தது.

இந்த புதிய பைக் மாடலின் முன்பதிவுகளை கடந்த ஜூலை மாதத்தில் துவங்கிய டுகாட்டி நிறுவனம் பனிகளே வி2-வில் 955சிசி, இரட்டை-சிலிண்டர் என்ஜினை பொருத்தியுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 10,750 ஆர்பிஎம்-ல் 152.8 பிஎச்பி பவரையும், 9,000 ஆர்பிஎம்-ல் 104 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

அதுவே பனிகளே 959 பைக்கில் வழங்கப்பட்ட என்ஜின் 145.3 பிஎச்பி மற்றும் 102 என்எம் டார்க் திறனை தான் வெளிப்படுத்தியது. பனிகளே வி2-வில் என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் பை-டைரக்ஷ்னல் விரைவு ஷிஃப்டர் உள்ளிட்டவை இணைக்கப்படுகின்றன.

டிசைன் அமைப்பை பொறுத்தவரையில் பனிகளே வி2, டுகாட்டியின் லிட்டர்-க்ளாஸ் பனிகளே வி4 சூப்பர்பைக்கின் அடிப்படையில் தோற்றத்தை பெற்றுள்ளது. இதன் காரணமாக வி2-ல் எல்இடி டிஆர்எல்களுடன் இரட்டை ஹெட்லேம்ப் அமைப்பு, கூர்மையான லைன்கள், செதுக்கப்பட்ட வடிவத்தில் பெட்ரோல் டேங்க், பக்கவாட்டு-பகுதி ஸ்விங்கார்ம் மற்றும் சற்று உயரமாக வடிவமைக்கப்பட்ட பின்புற பகுதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

தொழிற்நுட்ப அம்சங்களில் 4.3 இன்ச்சில் டிஎஃப்டி திரை, ட்ராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், கார்னரிங் ஏபிஎஸ், என்ஜின் ப்ரேக் கண்ட்ரோல் மற்றும் வீலிங் கண்ட்ரோல் உள்ளிட்டவை அடங்குகின்றன. சஸ்பென்ஷனிற்கு முன்புறத்தில் 43மிமீ-ல் ஷோவா பெரிய பிஸ்டன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட சாக்ஸ் மோனோ-ஷாக்கும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த இரு வன்பொருள்களையும் முழுவதும் அட்ஜெஸ்ட் செய்ய முடியும். ப்ரேக்கிங் பணியை கவனிக்க இரு சக்கரங்களிலும் ப்ரெம்போ காலிபர்களுடன் முன் சக்கரத்தில் இரட்டை டிஸ்க்கும், பின் சக்கரத்தில் ஒற்றை டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளன.

டுகாட்டி சிவப்பு மற்றும் வெள்ளை ரியோஸ்ஸோ லிவரி என்ற இரு விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டுவரும் இந்த பைக்கில் ரேஸ், ஸ்போர்ட்ஸ் மற்றும் சாலை என்ற மூன்று ரைடிங் மோட்கள் உள்ளன. தற்போது டீலர்ஷிப்களை வந்தடைந்து கொண்டிருப்பதால் இந்த பைக்கின் டெலிவிரி பணிகளை விரைவில் எதிர்பார்க்கலாம்.