லாக்டவுன் நேரத்திலும் புதிய பைக் மாடலை களமிறக்க தயாராகும் டுகாட்டி...

டுகாட்டி இந்தியா நிறுவனம் பனிகளே வி2 பைக்கின் டீசர் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் அறிமுகமாகவுள்ள இந்த புதிய பைக்கை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

லாக்டவுன் நேரத்திலும் புதிய பைக் மாடலை களமிறக்க தயாராகும் டுகாட்டி...

டுகாட்டி இந்தியா நிறுவனம் புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக தனது தயாரிப்புகளை அப்டேட் செய்து வருகிறது. ஆனால் இவற்றின் அறிமுகத்திற்கு தடையாக கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

லாக்டவுன் நேரத்திலும் புதிய பைக் மாடலை களமிறக்க தயாராகும் டுகாட்டி...

இருப்பினும் ஹார்லி-டேவிட்சன், ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டோராட் போன்ற மற்ற இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களை போன்று டுகாட்டி நிறுவனமும் மீண்டும் விற்பனை போட்டியில் இருக்கவுள்ளது. இதனை வெளிப்படுத்தும் விதமாக தான் தற்போது பனிகளே வி2 பைக்கின் டீசர் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

MOST READ: செம ட்ரிக்ஸ்... 3 லட்ச ரூபாய் செலவு செய்து சொந்த ஊர் வந்த மனிதர்... எப்படினு தெரிஞ்சா அசந்திருவீங்க

லாக்டவுன் நேரத்திலும் புதிய பைக் மாடலை களமிறக்க தயாராகும் டுகாட்டி...

இந்த டீசர் படத்தில் பைக்கின் பெட்ரோல் டேங்க், 'coming soon' என்ற வார்த்தைகளுடன் காட்டப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்க் மட்டுமே காட்டப்பட்டுள்ளதால் பைக் டுகாட்டி பனிகளே வி2 மாடலா அல்லது பேபி பணிகளே மாடலா என்பது தெரியவில்லை.

லாக்டவுன் நேரத்திலும் புதிய பைக் மாடலை களமிறக்க தயாராகும் டுகாட்டி...

எப்படியிருந்தாலும் டுகாட்டி நிறுவனத்தின் இந்த புதிய பைக் இந்தியாவில் தற்சமயம் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற 959 பனிகளே பைக்கிற்கு மாற்றாக தான் இருக்கும். மேற்கத்திய நாடுகளில் ஏற்கனவே விற்பனையில் உள்ள பனிகளே வி2 மாடல், ஸ்டைல், உடற்கட்டமைப்பு மற்றும் முன்புற தோற்றத்தில் கிட்டத்தட்ட இதன் முன்னோடி மாடலான பனிகளே வி4 பைக்குடன் ஒத்து காணப்படுகிறது.

MOST READ: கொரோனாவிற்கு எதிரான போராட்டம்.. புதுமையான விதத்தில் கை கொடுக்கும் ஹார்லி டேவிட்சன்...

லாக்டவுன் நேரத்திலும் புதிய பைக் மாடலை களமிறக்க தயாராகும் டுகாட்டி...

இவற்றுடன் பக்கவாட்டு ஸ்விங்கார்மையும் வி2 பைக் வி4 மாடலில் இருந்து தான் பெற்றுள்ளது. அதேபோல் பனிகளே வி4 மாடலில் இருந்து எலக்ட்ரானிக் ஷூட்டையும் பெற்றுள்ள டுகாட்டியின் இந்த புதிய பைக், திருத்தியமைக்கப்பட்ட ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டத்தை கொண்டுள்ளது. இதனால் இதன் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் தற்போதைய 959 பனிகளே மாடலை காட்டிலும் சிறப்பானதாக இருக்கும்.

லாக்டவுன் நேரத்திலும் புதிய பைக் மாடலை களமிறக்க தயாராகும் டுகாட்டி...

இதன் எலக்ட்ரானிக் தொகுப்பில் ஐஎம்யு-அசிஸ்ட் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், வீலிங் கண்ட்ரோல் மற்றும் கார்னரிங் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவற்றுடன் பை-ட்ராக்‌ஷ்னல் அப்/டவுன் விரைவான ஷிஃப்டர், என்ஜின் ப்ரேக்கிங் கண்ட்ரோல் போன்றவையும் அடங்கும்.

MOST READ: சூப்பர்... நோயாளிகள் மருத்துவமனை செல்வதற்கு இலவச கேப் வசதி... பஸ்கள் இல்லாததால் அதிரடி அறிவிப்பு...

லாக்டவுன் நேரத்திலும் புதிய பைக் மாடலை களமிறக்க தயாராகும் டுகாட்டி...

சஸ்பென்ஷிற்கு இந்த பைக்கின் முன்புறத்தில் ஷோவா பெரிய பிஸ்டன் ஃபோர்க்ஸும், பின்புறத்தில் முழுவதும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சாக்ஸ் மோனோஷாக், ஸ்டேரிங் டேம்பருடன் வழங்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் சஸ்பென்ஷன், பனிகளே வி2 பைக்கில் வழங்கப்படவில்லை.

லாக்டவுன் நேரத்திலும் புதிய பைக் மாடலை களமிறக்க தயாராகும் டுகாட்டி...

ப்ரேக்கிங் பணியை ப்ரெம்போ எம்4.32 மோனோப்ளாக் காலிப்பர்ஸ் பின் சக்கரத்திலும் ப்ரெம்போ மாஸ்டர் சிலிண்டர்கள் உடன் இரட்டை 320மிமீ டிஸ்க்ஸ் முன் சக்கரத்திலும் கவனிக்கிறது. இயக்க ஆற்றலுக்கு பனிகளே வி2 பைக்கானது பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 955சிசி சூப்பர்-குவாட்ரோ எல்-ட்வின் என்ஜினை கொண்டுள்ளது.

MOST READ: சைரன் ஒலி காது கிழிக்க நன்றி தெரிவித்த போலீஸ்.. அமெரிக்காவை அடுத்து இந்தியாவில் நிகழ்ந்த விநோதம்!

லாக்டவுன் நேரத்திலும் புதிய பைக் மாடலை களமிறக்க தயாராகும் டுகாட்டி...

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 10,750 ஆர்பிஎம்-ல் 155 பிஎச்பி பவரையும், 9,000 ஆர்பிஎம்-ல் 104 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இத்தகைய ஆற்றல் அளவுகளுடன் பைக் 153 கிலோ என மிகவும் குறைவான எடையில் உருவாக்கப்பட்டுள்ளதால் அதிகப்பட்ச ஆற்றலில் இதன் வேகத்தை நினைத்து பாருங்கள்.

லாக்டவுன் நேரத்திலும் புதிய பைக் மாடலை களமிறக்க தயாராகும் டுகாட்டி...

தற்சமயம் நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு அறிமுகமாகவுள்ளதாக கூறப்படும் டுகாட்டியின் புதிய பணிகளே வி2 பைக்கிற்கு இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.16 லட்சத்தில் விலை நிர்ணயிக்கப்படவுள்ளது.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati Panigale V2 Teased In India; Launch Soon
Story first published: Thursday, April 30, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X