பிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் மூன்று புதிய டுகாட்டி பைக் மாடல்கள்!

பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட மேலும் மூன்று புதிய பைக் மாடல்களை இந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டுகாட்டி இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் மூன்று புதிய டுகாட்டி பைக் மாடல்கள்!

கடந்த ஏப்ரல் 1 முதல் வாகனங்களுக்கான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டன. இந்த சூழலில், சூப்பர் பைக் தயாரிப்பில் பிரபலமான டுகாட்டி நிறுவனம் பிஎஸ்-6 பைக் மாடல்களை கொண்டு வருவதற்கான திட்டத்தில் தீவிரமாக உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக, தனது பிஎஸ்-6 பைக் மாடல்களின் அறிமுகத்தை சற்று தாமதப்படுத்தி உள்ளது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் மூன்று புதிய டுகாட்டி பைக் மாடல்கள்!

இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதத்தில் பனிகேல் பிஎஸ்-6 மாடலை கொண்டு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு மேலும் மூன்று பைக் மாடல்களை பிஎஸ்-6 எஞ்சின் தேர்வுடன் அறிமுகப்படுத்த டுகாட்டி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் மூன்று புதிய டுகாட்டி பைக் மாடல்கள்!

மல்டிஸ்ட்ரேடா குடும்பத்தில் ஒரு புதிய பைக் மாடலை டுகாட்டி அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந் பைக் 950 சிசி பிஎஸ்-6 எஞ்சினுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் மூன்று புதிய டுகாட்டி பைக் மாடல்கள்!

அடுத்து பிஎஸ்-6 தர எஞ்சினுடன் ஸ்க்ராம்ப்ளர் 800 பைக் மாடல்களை வரும் நம்பரில் இந்தியா கொண்டு வருவதற்கும் டுகாட்டி திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் டுகாட்டி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களாக ஸ்க்ராம்பளர் மாடல்கள் உள்ளன.

பிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் மூன்று புதிய டுகாட்டி பைக் மாடல்கள்!

மூன்றாவதாக, ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக் மாடலையும் பிஎஸ்-6 தர எஞ்சினுடன் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டுகாட்டி திட்டமிட்டுள்ளது. இந்த மாடலுக்கு குறைவான வரவேற்பு இருந்தாலும், வரும் காலங்களில் நிச்சயம் விற்பனை படிப்படியாக உயர வாய்ப்பு இருப்பதாக டுகாட்டி கருதுகிறது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் மூன்று புதிய டுகாட்டி பைக் மாடல்கள்!

டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக் மாடலானது யூரோ-5 மாசு அம்சத்துடன் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதே எஞ்சின் இந்தியாவில் பிஎஸ்-6 தரத்திற்கு நிகரானதாக இருக்கும். மேலும், டிசைனில் சிறிய அளவிலான மாற்றங்களுடன் புதுப்பொலிவு பெற்று வர இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் மூன்று புதிய டுகாட்டி பைக் மாடல்கள்!

பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக வர இருக்கும் புதிய டுகாட்டி பைக் மாடல்கள் இந்தியர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, ஸ்க்ராம்ப்ளர் மாடல்கள் சரியான பட்ஜெட்டிலும், வசீரமான தோற்றத்திலும் கிடைப்பதால், இந்தியர்கள் அதிக ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Italian motorcycle manufacturer Ducati has announced that it intends launching three new BS6 products by the end of this year. The announcement comes after the brand announced that its first ever BS6 compliant Panigale will be launched by the end of August.
Story first published: Friday, July 24, 2020, 14:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X