Just In
- 6 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 8 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 8 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
- 10 hrs ago
பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா?
Don't Miss!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Movies
பிக் பாஸ் ஃபினாலேவில் முகேன் ராவ்.. லீக்கான கிராண்ட் ஃபினாலே புகைப்படம்.. ஷூட் ஓவரா?
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
செம ஸ்டைல், பவர்ஃபுல் எஞ்சின்... டுகாட்டின் புதிய ஸ்க்ராம்பளர் பைக் மாடல்கள் அறிமுகம்!
பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் 1100 ஸ்போர்ட் புரோ பைக் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய மாடல்கள் குறித்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் டுகாட்டி நிறுவனத்தின் ஸ்க்ராம்ப்ளர் பைக் மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் பட்ஜெட்டிற்கு ஏற்ப பல்வேறு சிசி திறன் கொண்ட மாடல்களில் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வகை பைக் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஸ்க்ராம்ப்ளர் ரகத்தில் அதிசெயல்திறன் மிக்க இரண்டு புதிய மாடல்களை டுகாட்டி நிறுவனம் இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

டுகாட்டி ஸ்க்ராம்பளர் 1100 புரோ மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ ஆகிய இரண்டு மாடல்களில் இந்த பைக்குகள் வந்துள்ளன. இதில், 1100 புரோ மாடலானது ஓசியன் டிரைவ் என்ற இரட்டை வண்ணக் கலவையிலும், 1100 ஸ்போர்ட் புரோ என்ற மேட் பிளாக் என்ற வண்ணத் தேர்விலும் வந்துள்ளது.

இந்த பைக் மாடல்களில் வட்ட வடிவிலான ஹெட்லைட் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள், புதிய டியூவல் டெயில் பைப்புகளுடன் சைலென்சர் அமைப்பு, குட்டையான வால் பகுதியுடன் முரட்டுத்தனமாக காட்சி அளிக்கிறது.

ஸ்க்ராம்பளர் 1100 ஸ்போர்ட் புரோ மாடலில் கூடுதலாக கஃபே ரேஸர் போன்ற ஹேண்டில்பார் மற்றும் ரியர் வியூ மிரர்கள், பிரத்யேக வண்ணக் கலவையில் லோகோ, முன்புறத்தில் மர்ஸோச்சி ஃபோர்க்குகள், பின்புறத்தில் கயபா மோனோ ஷாக் அப்சார்பர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. முன்சக்கரத்தில் பைரெல்லி MT60 RS120/80 ZR18 டயரும், பின்புறத்தில் 180/55 ZR17 டயரும் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ மற்றும் ஸ்போர்ட் புரோ மாடல்களில் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், கார்னரிங் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், மூன்று விதமான ரைடிங் மோடுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த பைக் மாடல்களில் 1,079சிசி எல்-ட்வின் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 83.5 பிஎச்பி பவரையும், 90.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். விசேஷ ஸ்லிப்பர் க்ளட்ச் கொண்ட 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 புரோ பைக் மாடலுக்கு ரூ.11.95 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், ஸ்க்ராம்ப்ளர் 1100 ஸ்போர்ட் புரோ மாடலுக்கு ரூ.13.74 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு புதிய பைக் மாடல்களுக்கும் முன்பதிவும் துவங்கப்பட்டு இருக்கிறது. சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, கொச்சி, ஆமதாபாத், புனே ஆகிய நகரங்களில் முன்பதிவு ஏற்கப்படுவதுடன், டெலிவிரியும் உடனடியாக துவங்கப்படுவதாக டுகாட்டி தெரிவித்துள்ளது.