ஜெஸ்ட்மனி உடன் கூட்டணி சேர்ந்தது முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் ஈவ் இந்தியா...

இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஈவ் இந்தியா ஜெஸ்ட்மனி நிறுவனத்துடன் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜெஸ்ட்மனி உடன் கூட்டணி சேர்ந்தது முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் ஈவ் இந்தியா...

ஜெஸ்ட்மனி நிறுவனத்துடன் ஈவ் இந்தியாவின் இந்த கூட்டணி, AI-மூலமாக இயக்கப்படும் மாதத்தவணை கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மலிவான விலையில் எலக்ட்ரிக் வாகனங்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாகியுள்ளது.

ஏனெனில் இந்த கூட்டணியினால் இனி ஈவ் இந்தியாவின் தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் வெளிப்படையான மாதத்தவணை திட்டங்களின் மூலமாக வாங்க முடியும். ஜெஸ்ட்மனி நிறுவனமும் இணைந்துள்ளதால், சிபில் ஸ்கோர் இல்லாவிடினும் வாடிக்கையாளர்கள் நிதிக்கான அணுகலை பெறலாம்.

6ஜெஸ்ட்மனி உடன் கூட்டணி சேர்ந்தது முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் ஈவ் இந்தியா...

இப்போதைக்கு வாகனத்தை பெற்று கொண்டு பிறகு பணத்தை செலுத்தும் வசதி எக்ஸெனியா, 4யு, யுவர் மற்றும் விண்ட் போன்ற ஈவ் ஸ்கூட்டர்களை வாங்குவோருக்கு கிடைக்கும். இவற்றின் விலை ரூ.51,900-ல் இருந்து ரூ.73,900 வரையில் எக்ஸ்ஷோரூமில் உள்ளது.

பேப்பர் இல்லா செயல்முறையான இதனை வீட்டில் இருந்தப்படியே கூட செயல்படுத்தலாம். மேலும் கடன்களுக்கு உடனடியாக ஒப்புதல்களும் வழங்கப்படவுள்ளன. வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் KYC சம்பிரதாயங்களை நிறைவு செய்து பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கு 3, 6 அல்லது 12 மாத கால மாதத்தவணை பதவிக்காலத்தைத் தேர்வு செய்யலாம்.

6ஜெஸ்ட்மனி உடன் கூட்டணி சேர்ந்தது முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் ஈவ் இந்தியா...

புவனேஸ்வரில் தலைமையிடத்தை கொண்டு செயல்படும் ஈவ் இந்தியா தான் கிழக்கு இந்தியாவின் முதல் ஆட்டோமொபைல் நிறுவனமாகும். தற்சமயம் 63 டீலர்களை வைத்து செயல்பட்டுவரும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் இந்த ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கையை 200 ஆக அதிகரிக்க திட்டமிட்டு வருகிறது.

இந்த கூட்டணி குறித்து ஈவ் இந்தியா நிறுவனத்தின் இயக்குனரும் துணை நிறுவனருமான ஹர்ஷ்வர்தன் திட்வாணி கூறுகையில், "எங்களது வாடிக்கையாளர்கள் இப்போது ஈவ் இந்தியாவுடன் மாதத்தவணை விருப்பங்களைப் பெற முடியும் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

6ஜெஸ்ட்மனி உடன் கூட்டணி சேர்ந்தது முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் ஈவ் இந்தியா...

உயர்நிலை தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மைக்கு எங்களது ஈவ் இந்தியா நிறுவனம் முன்னுரிமை அளிக்கிறது.

தற்போதைய கோவிட்-19 சூழ்நிலையில் வாடிக்கையாளர்களுடன் நேரடி தொடர்பு இல்லாமல் ஆவணங்கள் சமர்பிப்பதை தான் ஜெஸ்ட்மனி உடனான எங்கள் கூட்டணியில் வலியுறுத்தப்படும்” என கூறினார்.

மேலும் "யாரேனும் அல்லது எல்லோரும் இப்போது எங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஜெஸ்ட்மனி உடன் கிடைக்கக்கூடிய எளிதான மாதத்தவணை விருப்பங்கள் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்" எனவும் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

ஜெஸ்ட்மனி உடன் கூட்டணி சேர்ந்தது முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் ஈவ் இந்தியா...

ஜெஸ்ட்மனி நிறுவனத்தின் சிஇஓ-வும் துணை நிறுவனருமான லிசி சாப்மேன் பேசுகையில், "எங்களது ப்ளாட்ஃபாரத்தில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பெரும் தேவையை நாங்கள் காண்கிறோம். டிஜிட்டல் கிரெடிட்டின் வசதியைத் தவிர, ஈவ் உடனான கூட்டாண்மை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு மலிவு விலையில் வழங்க வேண்டும் என்பதற்குமானதாகும்.

தற்போதைய கோவிட்-19 சோதனை காலத்தில் வாகனத்தை வாங்கிவிட்டு, பின்னர் பணத்தை செலுத்தும் வசதி மக்களுக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கும் என நம்புகிறோம். தேவையை புதுப்பிப்பதில் நிதி விருப்பங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை நாங்கள் எப்போதும் அறிவோம். பண்டிகை காலம் நெருங்கி வருவதால், நுகர்வோர் ஆர்வம் மேலும் அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என கூறினார்.

ஜெஸ்ட்மனி உடன் கூட்டணி சேர்ந்தது முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் ஈவ் இந்தியா...

ஈவ் இந்தியா

ஈவ் இந்தியா நிறுவனத்தை பற்றி கூற வேண்டுமென்றால், எதிர்காலத்தில் சத்தம் மற்றும் மாசு உமிழ்வு இல்லாத வாகனம் மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாகும். ஈவ் என்பது உயர்தர தொழில்நுட்பத்திற்கும் உலகின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்கும் இடையில் உள்ள பிணைப்பை குறிக்கும் சொல் ஆகும்.

ஜெஸ்ட்மனி

2015 ஆம் ஆண்டில் லிசி சாப்மேன், பிரியா ஷர்மா மற்றும் ஆஷிஷ் அனந்தராமன் ஆகியோரால் நிறுவப்பட்ட ஜெஸ்ட்மனி மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் AI-மூலமாக இயக்கப்படும் மாதத்தவணை நிதி தளமாகும்.

நிதி தொழிற்நுட்ப நிறுவனமான இது, போதிய கடன் பெறாததால் தற்சமயம் கடன் அட்டைகள் அல்லது மற்ற முறையான நிதி தேர்வுகள் இல்லாமல் இருக்கும் நாட்டின் 300 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களின் வாழ்க்கையை அர்த்தமுள்ள வகையில் மேம்படுத்தக்கூடிய ஒரு தளமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஜெஸ்ட்மனியின் தனித்துவமான தளம் ஆனது மில்லியன் கணக்கான இந்திய நுகர்வோரின் வாழ்க்கையை மிகவும் மலிவானதாக மாற்ற மொபைல் தொழில்நுட்பம், டிஜிட்டல் வங்கி மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது.

ஜெஸ்ட்மனியின் தொழில்நுட்பம் மற்றும் பெரும்பான்மையான மக்கள் அணுகும் வகையில் மலிவான டிஜிட்டல் நிதி அணுகலை உருவாக்க தொடர்ந்து பணியாற்றி வருவதால் உலக பொருளாதார மன்றத்தால் 2020 தொழில்நுட்ப முன்னோடியாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
EeVe India Partners With ZestMoney
Story first published: Friday, September 11, 2020, 20:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X