ரெட்ரோ ஸ்டைல் ஸ்கூட்டர் - ஸ்போர்ட்டி லுக் பைக்... மின்சார தரத்தில் அறிமுகம் செய்த ஈவீ இந்தியா...!

ஈவீ இந்தியா நிறுவனம் அதன் ரெட்ரோ ஸ்டைலிலான மின்சார ஸ்கூட்டர் மற்றும் ஸ்போர்ட்டி லுக்கிலான எலெக்ட்ரிக் பைக்கை இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரெட்ரோ ஸ்டைல் ஸ்கூட்டர் - ஸ்போர்ட்டி லுக் பைக்... மின்சார தரத்தில் அறிமுகம் செய்த ஈவீ இந்தியா...!

ஒடிசாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஆரம்பநிலை மின்வாகன உற்பத்தி நிறுவனமான ஈவீ (EeVe India) நொய்டாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் பிரிமியம் தரத்திலான மின்சார வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது.

ரெட்ரோ ஸ்டைல் ஸ்கூட்டர் - ஸ்போர்ட்டி லுக் பைக்... மின்சார தரத்தில் அறிமுகம் செய்த ஈவீ இந்தியா...!

இரு மின்சார வாகனங்கள் தற்போது இந்நிறுவனத்தின் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்று ரெட்ரோ ஸ்டைலிலான மின்சார ஸ்கூட்டராகவும் மற்றொன்று ஸ்போர்ட்டி லுக்கிலான மின்சார பைக்காகவும் உள்ளது.

ரெட்ரோ ஸ்டைல் ஸ்கூட்டர் - ஸ்போர்ட்டி லுக் பைக்... மின்சார தரத்தில் அறிமுகம் செய்த ஈவீ இந்தியா...!

இதில், ஸ்கூட்டருக்கு ஃபார்ஸெட்டி எனவும் பைக்கிற்கு டெஸிரோ என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ளது. இவ்விரு மின்சார வாகனங்களும் ஹப்-மவுண்டட் மின் மோட்டார் மற்றும் ஸ்வாப்பபிள் பேட்டரி (தேவைக்கேற்ப கழட்டி மாட்டிக்கொள்ளலாம்) ஆகிய சிறப்பம்சத்தைப் பெற்றிருக்கின்றன.

இதேபோன்று, இரு மின்சார வாகனத்தின் பேட்டரியையும் முழுமையாக சார்ஜ் செய்ய 3 முதல் 4 மணி நேரங்களே போதுமானதாக உள்ளது.

ரெட்ரோ ஸ்டைல் ஸ்கூட்டர் - ஸ்போர்ட்டி லுக் பைக்... மின்சார தரத்தில் அறிமுகம் செய்த ஈவீ இந்தியா...!

சிறப்பம்சங்களில் பலவற்றில் ஒரே மாதிரியானதாக காணப்படும் இந்த வாகனங்கள் ரேஞ்ச் விஷயத்தில் மட்டும் மாறுபட்டு காணப்படுகின்றன. ஆம், ஃபார்ஸெட்டி ஸ்கூட்டரானது ஒரு முழுமையான சார்ஜில 100 கிமீ ரேஞ்சையும், டெஸ்ஸிரோ எலெக்ட்ரிக் பைக் ஒரு முழுமையான சார்ஜில் 120 கிமீ ரேஞ்சையும் வழங்கும் திறனைக் கொண்டுள்ளது.

ரெட்ரோ ஸ்டைல் ஸ்கூட்டர் - ஸ்போர்ட்டி லுக் பைக்... மின்சார தரத்தில் அறிமுகம் செய்த ஈவீ இந்தியா...!

இந்த பிரிமியம் தரத்திலான இரு மின்சார வாகனங்களும் இந்தியாவில் இன்னும் ஒரு சில மாதங்களில் விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதில், ஃபார்ஸெட்டி மின்சார ஸ்கூட்டர் ஜூன் அல்லது ஜூலை மாதத்திலும், டெஸ்ஸிரோ எலெக்ட்ரிக் பைக் செப்டம்பர் மாதத்திற்குள்ளாகவும் களமிறக்கப்படும் என கூறப்படுகின்றது.

ரெட்ரோ ஸ்டைல் ஸ்கூட்டர் - ஸ்போர்ட்டி லுக் பைக்... மின்சார தரத்தில் அறிமுகம் செய்த ஈவீ இந்தியா...!

இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்தில் செல்லும் திறனைப் பெற்றிருக்கின்றது. இதேபோன்று, மின்சா பைக்கும் 90-100 கிமீ வேகத்தில் செல்லும் அதிதிறனைப் பெற்றுள்ளது. இவ்விரு மின்சார வாகனங்களும் விற்பனைக்கு வரும் ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் களமிறக்கப்படலாம் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

ரெட்ரோ ஸ்டைல் ஸ்கூட்டர் - ஸ்போர்ட்டி லுக் பைக்... மின்சார தரத்தில் அறிமுகம் செய்த ஈவீ இந்தியா...!

இவ்விரு வாகனங்களின் அனைத்து அதிகாரப்பூர்வமான தகவல்களும் அவற்றின் அறிமுகம் வெளியடப்பட உள்ளது. இத்துடன், இந்த மின்சார வாகனங்களுக்கு 5 வருட வாரண்டியும், பேட்டரிக்கு மட்டும் 3 வருட வாரண்டியும் வழங்கப்பட உள்ளது.

ரெட்ரோ ஸ்டைல் ஸ்கூட்டர் - ஸ்போர்ட்டி லுக் பைக்... மின்சார தரத்தில் அறிமுகம் செய்த ஈவீ இந்தியா...!

ஒடிசாவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து விரிவாக்கம் பணியை தீவிரப்படுத்தி வருகின்றது. இந்நிறுவனம் அதன் பணியைத் தொடங்கி இரு ஆண்டுகளாகின்றன. இதற்குள்ளகாவே 45 நகரங்களுக்கும் அதிகமான இடங்களில் அது ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

ரெட்ரோ ஸ்டைல் ஸ்கூட்டர் - ஸ்போர்ட்டி லுக் பைக்... மின்சார தரத்தில் அறிமுகம் செய்த ஈவீ இந்தியா...!

மேலும், இதுவரை 1,200க்கும் அதிகமான மின்சார இரு சக்கர வாகனங்களை அது விற்பனைச் செய்துள்ளது. இத்துடன், எல்லையை விரிவாக்கம் செய்யும் விதமாக டெல்லி, உபி, மஹாராஷ்டிரா போன்ற நகரங்களில் புதிய ஷோரூம்களை நிறுவ முயற்சி மேற்கொண்டு வருகின்றது.

ஏற்கனவே, மேற்கு வங்கம், ஜார்கண்ட், ஒடிசா, சத்திஷ்கர், தெலங்கானா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட நகரங்களில் அதன் கொடி நிலை நாட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
EeVee Unveiled Two Electric Two-Wheelers At Auto Expo 2020. Read In Tamil.
Story first published: Friday, February 7, 2020, 12:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X