280கிமீ ரேஞ்ஜ் - 108கிமீ வேகம்! விலையோ மிக மலிவு! இந்தியர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்யும் மார்க்2!

280 கிமீ ரேஞ்ஜ், மணிக்கு 108 கிமீ வேகம் எனும் அசாத்திய திறனில் இந்திய தயாரிப்பாக மின்சார ஸ்கூட்டர் ஒன்று விரைவில் அறிமுகமாக இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

280கிமீ ரேஞ்ஜ் - 108கிமீ வேகம்... விலையும் ரொம்ப கம்மி... அசத்தலான அம்சங்களுடன் எதிர்பார்ப்பை எகிர செய்யும் மார்க்2! அறிமுகம் எப்போங்க?

கற்பனையில் கூட நாம் நினைத்திராத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலைக் குறைவாகக் காணப்பட்டாலும் இந்தியாவில் எரிபொருளின் விலை விண்ணைத் தொடுமளவிற்கு உயர்ந்துக் காணப்படுகின்றது.

280கிமீ ரேஞ்ஜ் - 108கிமீ வேகம்... விலையும் ரொம்ப கம்மி... அசத்தலான அம்சங்களுடன் எதிர்பார்ப்பை எகிர செய்யும் மார்க்2! அறிமுகம் எப்போங்க?

இதனால் மக்கள் எரிபொருள் அல்லாத மாற்று வாகனங்களின் பக்கம் தங்களின் பார்வையைத் திருப்ப ஆரம்பித்துள்ளனர். இதில், அதிக கவனத்தை ஈர்க்கக் கூடிய இடத்தில் மின்சார வாகனங்கள் இருக்கின்றன. எரிபொருள் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் மின்சார வாகனங்களைப் பராமரிப்பது மிகவும் சுலபம். மேலும் குறைந்த செலவும் கூட. அதுமட்டுமின்றி இவை சுற்றுப்புற சூழலுக்கும் நண்பனாக செயல்படும்.

280கிமீ ரேஞ்ஜ் - 108கிமீ வேகம்... விலையும் ரொம்ப கம்மி... அசத்தலான அம்சங்களுடன் எதிர்பார்ப்பை எகிர செய்யும் மார்க்2! அறிமுகம் எப்போங்க?

எனவேதான், இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு குழந்தை பருவத்தில் இருந்து முன்னேறத் தொடங்கியிருக்கின்றது. எனவே இந்தியாவில் மின் வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே, அண்மைக் காலங்களாக மின்சார வாகனங்களின் அறிமுகம் போர் வீரர்களின் படையெடுப்பைப் போன்று செய்யப்பட்டு வருகிகின்றது.

280கிமீ ரேஞ்ஜ் - 108கிமீ வேகம்... விலையும் ரொம்ப கம்மி... அசத்தலான அம்சங்களுடன் எதிர்பார்ப்பை எகிர செய்யும் மார்க்2! அறிமுகம் எப்போங்க?

அந்தவகையில், ஒட்டுமொத்த இந்திய மின்சார இருசக்கர வாகனச் சந்தையுமே தன் வசம் இழுத்துப்போடுகின்ற வகையில் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றது.

சிம்பிள் எனெர்ஜி எனும் இந்திய நிறுவனம்தான் இந்த மின்சார ஸ்கூட்டரை இந்தியாவில் களமிறக்குவதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றது. இதற்காக அந்நிறுவனம் 1 மில்லியன் டாலர்கள் நிதியை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.

280கிமீ ரேஞ்ஜ் - 108கிமீ வேகம்... விலையும் ரொம்ப கம்மி... அசத்தலான அம்சங்களுடன் எதிர்பார்ப்பை எகிர செய்யும் மார்க்2! அறிமுகம் எப்போங்க?

இதைத்தொடர்ந்து, விரைவில் அனைவரின் எதிர்பார்ப்பையும் தூண்டியிருக்கும் அந்த மின்சார ஸ்கூட்டரின் உற்பத்தியையும் பெங்களூருவில் உள்ள யலஹன்கா என்னும் பகுதியில் வைத்து அது தொடங்க இருக்கின்றது.

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட்-19 வைரஸ் பிரச்னை ஓய்ந்த பின்னர், அதாவது 2021ம் ஆண்டின் முதல் காலாண்டில் 'மார்க் 2' எனும் பெயரில் அந்த மின்சார ஸ்கூட்டர் களமிறக்கப்பட இருக்கின்றது.

280கிமீ ரேஞ்ஜ் - 108கிமீ வேகம்... விலையும் ரொம்ப கம்மி... அசத்தலான அம்சங்களுடன் எதிர்பார்ப்பை எகிர செய்யும் மார்க்2! அறிமுகம் எப்போங்க?

மார்க் 2 மின்சார ஸ்கூட்டர் மக்கள் மத்தியில் ஆவலைத் தூண்டுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதே அதன் உச்சபட்ச ரேஞ்ஜ் விகிதம்தான். ஆம், இந்த மின்சார ஸ்கூட்டரை ஒரு முறை முழையமாக சார்ஜ் செய்தால் 280 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அதுமட்டுமின்றி, இதனை வழக்கமான வீட்டு சார்ஜரில் வைத்து சார்ஜ் செய்யதால் வெறும் 40 நிமிடங்களிலேயே முழுமையான சார்ஜை எட்டிவிடும். தற்போது சந்தையில் விற்பனையில் இருக்கும் மின்சார வாகனத்தை முழுமையாக சார்ஜ் பல மணி நேரங்களில் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

280கிமீ ரேஞ்ஜ் - 108கிமீ வேகம்... விலையும் ரொம்ப கம்மி... அசத்தலான அம்சங்களுடன் எதிர்பார்ப்பை எகிர செய்யும் மார்க்2! அறிமுகம் எப்போங்க?

மேலும், இந்த மின்சார ஸ்கூட்டரை ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையத்தில் வைத்து சார்ஜ் செய்தோமேயானால், வெறும் பதினேழே நிமிடங்களில் முழுமையாக சார்ஜாகிவிடும். இதுமட்டுமின்றி, இதன் அதிவேக ஓடும் திறனும் நம்மை வாயைப் பிளக்க வைக்கின்ற வகையில் உள்ளது. இது அதிகபட்சமாக மணிக்கு 103 கிமீ வேகத்தில் ஓடுமாம்.

280கிமீ ரேஞ்ஜ் - 108கிமீ வேகம்... விலையும் ரொம்ப கம்மி... அசத்தலான அம்சங்களுடன் எதிர்பார்ப்பை எகிர செய்யும் மார்க்2! அறிமுகம் எப்போங்க?

இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் எந்தவொரு மின்சார ஸ்கூட்டரும் இந்த வேகத்தில் இயங்காது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆகையால், இந்தியாவில் விற்பனைக்கு வரக்கூடிய அதி வேக மின்சார ஸ்கூட்டர் என்ற பட்டத்தை மார்க் 2 பெறவிருக்கின்றது. இவ்வாறு ஒவ்வொரு அம்சத்திலும் மார்க் 2 நம்மை மெர்சலாக்குகின்ற வகையிலேயே உள்ளது.

280கிமீ ரேஞ்ஜ் - 108கிமீ வேகம்... விலையும் ரொம்ப கம்மி... அசத்தலான அம்சங்களுடன் எதிர்பார்ப்பை எகிர செய்யும் மார்க்2! அறிமுகம் எப்போங்க?

என்னதான் இது அதிகபட்ச அம்சங்களுடன் விற்பனைக்கு இந்தியாவில் களமிறங்கினாலும் இதன் விலை குறைந்ததாகவே இருக்கும் என அந்நிறுவனத்தைச் சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, மின்சார ஸ்கூட்டர் ரூ. 1.1 லட்சம் முதல் 1.25 லட்சம் ரூபாய்க்குள்ளாகவே விற்பனைக்கு கிடைக்கலாம் என கூறப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இதில் கிடைக்கும் அம்சங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் இது மிக மலிவான விலையேயாகும்.

280கிமீ ரேஞ்ஜ் - 108கிமீ வேகம்... விலையும் ரொம்ப கம்மி... அசத்தலான அம்சங்களுடன் எதிர்பார்ப்பை எகிர செய்யும் மார்க்2! அறிமுகம் எப்போங்க?

ரேஞ்ஜ், எஞ்ஜின் திறன், லுக் மற்றும் விலை என அனைத்திலும் இந்தியர்களைக் கவர்கின்ற வகையில் இருக்கும் இந்த மின்சார ஸ்கூட்டரில் தொழில்நுட்ப வசதிகளுக்கும் குறைச்சல் இருக்காது எனக் கூறப்படுகின்றது. குறிப்பாக, இது தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர், பஜாஜ் சேத்தக் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் ஆகியவற்றிற்கு கடுமையான போட்டியளிக்கின்ற வகையில் பிரம்மாண்ட தொழில்நுட்பங்களின் எதிர்பார்க்கப்படுகின்றது.

280கிமீ ரேஞ்ஜ் - 108கிமீ வேகம்... விலையும் ரொம்ப கம்மி... அசத்தலான அம்சங்களுடன் எதிர்பார்ப்பை எகிர செய்யும் மார்க்2! அறிமுகம் எப்போங்க?

இதை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது ஸ்கூட்டர்குறித்து வெளியாகியிருக்கும் புகைப்படத்தில் ஐபி67 தரம் கொண்ட 7இன்ச் தொடு திரை வழங்கப்பட்டிருக்கின்றது. இது 4ஜி ஸ்பீடு கன்னெக்டிவிட்டி அம்சம் கொண்டதாகும். இதன் மூலம் நம்மால் எண்ணற்ற வசதிகளைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், இந்த மின்சார ஸ்கூட்டர் முழுக்க முழுக்க இந்தியாவில் வைத்தே கட்டமைக்கப்பட இருப்பது கூடுதல் சிறப்பு வாய்ந்த தகவலாகும்.

Most Read Articles

English summary
Electric Scooter From Simple Energy Will Have A Range Of More Than 280 kilometres. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X