இந்தியாவின் முதல் பிரிமியம் மின்சார ஸ்கூட்டர் இதுதான்.. இதோட டாப் ஸ்பீடு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் எவெர்வ் மோட்டார்ஸ் அதன் பிரிமியம் தரத்திலான மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவின் முதல் பிரிமியம் மின்சார ஸ்கூட்டர் இதுதான்... இதோட டாப் ஸ்பீடு என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இந்தியாவில் மின் வாகனங்களுக்கான புரட்சி ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. அண்மைக் காலங்களாக படையெடுக்கும் புதிய மின்வாகனங்களின் அறிமுகமே இதற்கு சான்றாக இருக்கின்றது.

இதில், இந்திய மின்வாகன உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு நிறுவனங்களும் பெரும் பங்கினை வகிக்கின்றன. அதேசமயம், இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் சில புது முக நிறுவனங்களும் தங்களின் பங்காக புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.

இந்தியாவின் முதல் பிரிமியம் மின்சார ஸ்கூட்டர் இதுதான்... இதோட டாப் ஸ்பீடு என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

அந்தவகையில், மஹாராஷ்டிராவின் புனே நகரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் எவெர்வ் மோட்டார்ஸ் நிறுவனம், அதன் புத்தம் புதிய பிரிமியம் தரத்திலான இ-ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக வருகின்ற ஆட்டோ எக்ஸ்போ 2020 (அடுத்த மாதம் நடைபெறவிருக்கின்றது) நிகழ்வில் காட்சிப்படுத்த இருக்கின்றது.

இந்தியாவின் முதல் பிரிமியம் மின்சார ஸ்கூட்டர் இதுதான்... இதோட டாப் ஸ்பீடு என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இந்த ஸ்கூட்டரே இந்த நிறுவனத்தின் மூலம் அறிமுகம் செய்யப்படும் முதல் புரோட்டோ டைப்பிலான மின்சார ஸ்கூட்டர் ஆகும்.

பிரிமியம் தரத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ள இந்த ஸ்கூட்டர் எதிர்கால டிசைன் தாத்பரியங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. டிசைன் மட்டுமின்றி அதில் காணப்படும் தொழில்நுட்பம் மற்றும் எஞ்ஜினியரிங் வேலைப்படும் மிகவும் அசத்தலானது இருக்கின்றது.

இந்தியாவின் முதல் பிரிமியம் மின்சார ஸ்கூட்டர் இதுதான்... இதோட டாப் ஸ்பீடு என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

குறிப்பாக இதன் ஸ்பீடு பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. பொதுவாக மின்சார வாகனங்கள் ரேஞ்ச் விகிதத்தை மனதில் கொண்டு குறைந்த வேகத்தின் அடிப்படையில் வாகனத்தை தயாரித்து வருகின்றன.

ஆனால், விரைவில் காட்சிப்படுத்தப்பட உள்ள இந்த பெயரிடப்படாத புதிய தயாரிப்பு மணிக்கு 110 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய திறனைப் பெற இருக்கின்றது. இதுவே, இந்த ஸ்கூட்டரின் தனித்துவமான சிறப்பம்சமாக இருக்கின்றது.

இந்தியாவின் முதல் பிரிமியம் மின்சார ஸ்கூட்டர் இதுதான்... இதோட டாப் ஸ்பீடு என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இத்துடன், தனியாக கழட்டி ரீசார்ஜ் செய்யும் வசதிகொண்ட பேட்டரி இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரங்கள் எடுத்துக்கொள்ளும். ஆனால், ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் சார்ஜ் செய்தால் மிக குறைவான நேரமே தேவைப்படும். இதனை, 5 ஆம்ப் சாக்கெட்டில்கூட சார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவின் முதல் பிரிமியம் மின்சார ஸ்கூட்டர் இதுதான்... இதோட டாப் ஸ்பீடு என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

தொடர்ந்து, சொகுசு கார்களில் காண்பதைப் போன்று கன்னெக்டட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. த்ரிவ்ஸ் எனப்படும் அந்த அம்சம் ரேஞ்ச், பேட்டரி ஸ்டேட்டஸ், மேப், இருப்பிடம், ஓடிஓ மற்றும் கோளாறுகள் பற்றிய கூடுதல் தகவல்களையும் ரைடருக்கு வழங்கும். இதுமட்டுமின்றி, அவசர காலங்களில் உதவுகின்ற வகையிலான அம்சங்களும் இந்த அம்சத்தில் இடம்பெற்றிருக்கின்றது.

இந்தியாவின் முதல் பிரிமியம் மின்சார ஸ்கூட்டர் இதுதான்... இதோட டாப் ஸ்பீடு என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இந்த மின்சார ஸ்கூட்டர் கணிசமான டீசர் புகைப்படங்கள் மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவை, மின்சார ஸ்கூட்டரின் தனித்துவமான ஸ்டைல் மற்றும் அம்சத்தை வெளிப்படுத்தும் வகையில் காட்சியளிக்கின்றது. அதில், ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் மின்சார விளக்கு கூடுதல் கவர்ச்சியைக் கொண்டிருப்பதை அது வெளிக்கொணர்ந்துள்ளது.

இந்தியாவின் முதல் பிரிமியம் மின்சார ஸ்கூட்டர் இதுதான்... இதோட டாப் ஸ்பீடு என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் இந்த மின்சார ஸ்கூட்டரில் பக்கவாட்டு மற்றும் பின்புற பகுதிக்கு கூடுதல் கவர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நீல நிற ஸ்டிரிப் டைப்பிலான விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் தற்போது முன்மாதிரி மாடலிலேயே அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதன் உற்பத்தியை நடப்பாண்டின் நான்காம் காலாணடில் அந்நிறுவனம் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவின் முதல் பிரிமியம் மின்சார ஸ்கூட்டர் இதுதான்... இதோட டாப் ஸ்பீடு என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

ஸ்டைல் மற்றும் சிறப்பம்சத்தில் இந்த மின்சார ஸ்கூட்டர் சிறப்பு வசதியைக் கொண்டிருக்கின்றதோ அதேபோன்று ரைடிங்கின்போது அலாதியான இன்பத்தை ஏற்படுத்துகின்ற வகையிலான வசதி வாய்ப்பையும் பெற்றிருக்கின்றது. இந்த ஸ்கூட்டரின் பேட்டரிகள் மற்ற மின்சார ஸ்கூட்டரைப் போலவே இருக்கைக்கு அடியில் நிறுவப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் பிரிமியம் மின்சார ஸ்கூட்டர் இதுதான்... இதோட டாப் ஸ்பீடு என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

அவை, லித்தியம் அயன் பேட்டரிகள் ஆகும். இது எந்தளவிற்கு ரேஞ்ச் வழங்கும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. ஆனால், இது பிரிமியம் தரத்திலான மின்சார ஸ்கூட்டர் என்பதால் குறைந்தது 100 கிமீ அதிகமான ரேஞ்ச் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எவெர்வ் நிறுவனத்தின் இந்த சிறப்பு வாய்ந்த மின்சார ஸ்கூட்டருடன் கூடுதலாக பல்வேறு நிறுவனங்களின் மின்சார ஸ்கூட்டர்களும் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் களமிறங்க இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Everve Motors Will Unveil Indias Most Premium E-Scooter at 2020 Auto Expo. Read In Tamil.
Story first published: Wednesday, January 29, 2020, 12:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X