ஆர்ப்பரிக்கும் உருவத்தில் தோன்றிய எவோலட் ஹாவ்க் மின்சார பைக்... ஆட்டோ எக்ஸ்போவின் கவர்ச்சி நாயகன்!

எவோலட் நிறுவனத்தின் ஆர்ப்பரிக்கும் டிசைன் தாத்பரியங்கள் கொண்ட ஹாவ்க் எலெக்ட்ரிக் பைக் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆர்பறிக்கும் தோற்றத்தில் காட்சிக்குள்ளாகிய எவோலட் ஹாவ்க் மின்சார பைக்... ஆட்டோ எக்ஸ்போவின் கவர்ச்சி நாயகன்...

ஹரியானா மாநிலம், குருகிராம் நகரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் எவோலட் இந்தியா. இந்நிறுவனம் ஓர் ஆரம்பநிலை மின்வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இது தற்போது இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2020ம் ஆண்டிற்கான வாகன கண்காட்சியில் ஹாவ்க் என்ற புத்தம் புதிய மின்சார பைக்கை காட்சிப்படுத்தியுள்ளது.

ஆர்பறிக்கும் தோற்றத்தில் காட்சிக்குள்ளாகிய எவோலட் ஹாவ்க் மின்சார பைக்... ஆட்டோ எக்ஸ்போவின் கவர்ச்சி நாயகன்...

இந்த பைக் அசாத்தியமான ஸ்போர்ட்டி லுக்கைக் கொண்டிருந்ததால் அங்கு வந்த பெரும்பாலான பார்வையாளர்களின் கவனத்தை அது கவர்ந்தது. குறிப்பாக இந்திய தயாரிப்பில் இத்தகைய ரம்மியமான பைக்கா... என்ற முனுமுனுப்பை பலரின் மத்தியில் ஏற்படுத்தியது.

ஆர்பறிக்கும் தோற்றத்தில் காட்சிக்குள்ளாகிய எவோலட் ஹாவ்க் மின்சார பைக்... ஆட்டோ எக்ஸ்போவின் கவர்ச்சி நாயகன்...

அதற்கேற்ப வகையில், அந்த பைக்கின் உடல் தோற்றம், முன் பக்க மாஸ்க், ப்யூவல் டேங்க் மற்றும் எஞ்ஜினை சுற்றி பொருத்தப்பட்ட பேனல்கள், ஹாவ்க் எலெக்ட்ரிக் பைக்கிற்கு கடுமையான ஸ்போர்ட்ஸ் பைக்கின் தோற்றத்தை வழங்கியது.

இதன் தோற்றம் மட்டுமின்றி எஞ்ஜினும் அதிக திறன் வாய்ந்ததாக காட்சியளிக்கின்றது. இது அதிகபட்சமாக மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லும் சக்தியைக் கொண்டிருக்கின்றது.

ஆர்பறிக்கும் தோற்றத்தில் காட்சிக்குள்ளாகிய எவோலட் ஹாவ்க் மின்சார பைக்... ஆட்டோ எக்ஸ்போவின் கவர்ச்சி நாயகன்...

இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரியை முழுமையாக ஒரு முறை சார்ஜ் செய்தால் குறைந்தது 100 கிமீ தூரம் வரை பயணிக்க முடியுமாம். மேலும், இதனை முழுமையாக சார்ஜ் செய்ய குறைந்தது 3 முதல் 4 மணி நேரங்கள் வரை எடுக்கும் என்றும் கூறப்படுகின்றது.

ஆர்பறிக்கும் தோற்றத்தில் காட்சிக்குள்ளாகிய எவோலட் ஹாவ்க் மின்சார பைக்... ஆட்டோ எக்ஸ்போவின் கவர்ச்சி நாயகன்...

இதுமட்டுமின்றி மேலும் பல மின்சார வாகனங்களே எவோலட் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

ஆர்பறிக்கும் தோற்றத்தில் காட்சிக்குள்ளாகிய எவோலட் ஹாவ்க் மின்சார பைக்... ஆட்டோ எக்ஸ்போவின் கவர்ச்சி நாயகன்...

இதுகுறித்து பேசிய அந்நிறுவனத்தின் சிஇஓ-ஆன பிரேரான சதுர்வேதி, "எவலோட் நிறுவனம் ஹரியானா, ஹைதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தியாலையை இயக்கி வருகின்றது. இங்கு 13 தயாரிப்புகள் முழு வீச்சுடன் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இங்கு தயாரிக்கப்பட்ட மின் வாகனங்களை காட்சிப்படுத்துவதில் நாங்கள் பெருமைக் கொள்கின்றோம்" என்றார்.

ஆர்பறிக்கும் தோற்றத்தில் காட்சிக்குள்ளாகிய எவோலட் ஹாவ்க் மின்சார பைக்... ஆட்டோ எக்ஸ்போவின் கவர்ச்சி நாயகன்...

தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ள மின்சார வாகனங்கள் நடப்பாண்டு ஜூன் மாதத்திற்குள் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கபடுகின்றது.

ஆர்பறிக்கும் தோற்றத்தில் காட்சிக்குள்ளாகிய எவோலட் ஹாவ்க் மின்சார பைக்... ஆட்டோ எக்ஸ்போவின் கவர்ச்சி நாயகன்...

இதற்கான வேலைகளில் அந்நிறுவனம் மிக தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. தற்போது, இந்நிறுவனத்திற்கு 12 மாநிலங்களில் 17க்கும் மேற்பட்ட டீலர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். விரைவில் இதனை 200-ஆக மாற்றும் இலக்கில் எவோலட் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. தொடர்ந்து, ஒவ்வொரு டீலர்கள் வாயிலாகவும் 2 ஆயிரம் யூனிட்டுகள் வரை ஆண்டு ஒன்றிற்கு விற்பனைச் செய்ய அது திட்டமிட்டிருக்கின்றது.

Most Read Articles
 
English summary
Evolet Hawk Unveiled At Auto Expo. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X