Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 3 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 4 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 5 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டிவிஎஸ் க்ரேயோன் முதல் வெஸ்பா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரை.. 2021ல் அறிமுகமாகவுள்ள ஸ்கூட்டர்கள்!!
ஸ்கூட்டர்களுக்கு இந்தியா எப்போதுமே பெரிய சந்தையாகும். மோட்டார்சைக்கிள்களை காட்டிலும் இயக்குவதற்கு எளிமையானதாகவும், கியர் இல்லாததாகவும் விளங்குவதால் ஸ்கூட்டர்களையே பெரும்பான்மையோர் விரும்புகின்றனர்.
இதன் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் தங்களது லைன்-அப்பில் குறைந்தது ஒரு ஸ்கூட்டர் மாடலையாவது கொண்டுள்ளன. மேலும் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யவும் தயாராகி வருகின்றன. இந்த வகையில் 2021ல் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ள புதிய ஸ்கூட்டர் மாடல்களில் சிலவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

1.டிவிஎஸ் க்ரேயோன்
2018 ஆட்டோ எக்ஸ்போவில் டிவிஎஸ் க்ரேயோன் கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தப்பட்டது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அடுத்த 2021ஆம் வருடத்தில் விற்பனைக்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கூட்டரில் சிறப்பம்சமாக முழு டிஜிட்டல் இன்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்படவுள்ளது. இதன் மூலமாக ஸ்கூட்டரின் வேகம், ஓடோமீட்டர், பேட்டரியின் சார்ஜ் சதவீதம் மற்றும் ரைடிங் ரேஞ்ச் உள்ளிட்டவற்றை ஓட்டுனர் அறியலாம்.

டிவிஎஸ் க்ரேயோன் கான்செப்ட் மாடல் வெவ்வேறான ரைடிங் மோட்கள், ஜியோ-ஃபென்சிங், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை பெற்றிருந்தது. அவற்றை விற்பனை மாடலில் எதிர்பார்க்கலாம். அதிகப்பட்சமாக 100kmph வேகத்தில் இயங்கக்கூடிய வகையில் வழங்கப்படவுள்ள இந்த டிவிஎஸ் ஸ்கூட்டரை முழு சார்ஜில் 80கிமீ வரையில் இயங்கும்.

2.கிம்கோ எஃப்9
கிம்கோ நிறுவனம் சமீபத்தில்தான் அதன் எஃப்9 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளிகாட்டியது. இந்த ஸ்கூட்டர் ஷோரூம்களுக்கு அடுத்த ஆண்டில் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கூட்டரின் முன்பகுதியில் இரட்டை எல்இடி ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது.

கிம்கோ எஃப்9 ஸ்கூட்டர் 40Ah லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு மற்றும் 9.4 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் மூலம் இயக்க ஆற்றலை பெறும். அதிகப்பட்சமாக 110kmph வேகத்தில் இயங்கக்கூடியதாக வழங்கப்படும் இந்த ஸ்கூட்டரை முழு சார்ஜில் 120kmph வேகத்தில் இயக்க முடியும்.

3.ஹோண்டா ஃபோர்ஸா 300
ஹோண்டாவின் மேக்ஸி-ஸ்கூட்டர் மாடலான ஃபோர்ஸா 300 இந்திய சந்தையில் இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனாவினால் இதன் அறிமுகம் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போகியுள்ளது.

எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய விண்ட்ஸ்க்ரீன், துணை-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், இரு முழு ஹெல்மெட்களை வைப்பதற்கு போதுமான சேமிப்பு பகுதி முக்கிய இக்னிஷன் ஸ்விட்ச் க்னாப், எரிபொருள் நிரப்பும் பகுதி, சேமிப்பிடம் உள்ளிட்டவற்றை கண்ட்ரோல் செய்ய ஸ்மார்ட் சாவி போன்றவற்றை பெற்றுவரும் ஃபோர்ஸா 300-இல் 279சிசி என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 7000 ஆர்பிஎம்-ல் 24.8 பிஎச்பி பவரை பெற முடியும்.

4.ஒகினாவா க்ரூஸர்
ஒகினாவா க்ரூஸர் எலக்ட்ரிக் மேக்ஸி-ஸ்கூட்டர் முதன்முறையாக முன்மாதிரியாக 2020 ஆடோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. முன்பக்கத்தில் V-வடிவில் ஹெட்லேம்ப் மற்றும் பெரிய விண்ட்ஸ்க்ரீனை கொண்டுள்ள இந்த ஸ்கூட்டரில் தொலைத்தூர பயணங்களுக்கு ஏற்றவாறு அகலமான ஹேண்டில் பார் வழங்கப்படவுள்ளது.

முன் மாதிரி மாடலில் 14 இன்ச் அலுமினியம் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டன, ஆனால் விற்பனை மாடலில் 12 இன்ச்சில் சக்கரங்கள் வழங்கப்படும். இதன் துணை-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் ஸ்மார்ட்போன் இணைப்புடன் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

ஒகினாவா க்ரூஸரில் 4 kWh பேட்டரி ஆனது 3 கிலோவாட்ஸ் மோட்டார் உடன் வழங்கப்படவுள்ளது. இவற்றின் உதவியுடன் ஸ்கூட்டரை சிங்கிள் சார்ஜில் 120கிமீ தூரத்திற்கும் அதிகப்பட்சமாக 100kmph வேகத்திலும் ஸ்கூட்டரை இயக்கி செல்ல முடியும்.

5.வெஸ்பா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
வெஸ்பா பிராண்ட் அடுத்த ஆண்டில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றின் மூலமாக எலக்ட்ரிக் இயக்கத்தில் இணையவுள்ளது. இந்திய சந்தைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுவரும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஸ்மார்ட் இணைப்பு மற்றும் அப்ளிகேஷன் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம். இதன் அறிமுகம் அடுத்த ஆண்டின் இறுதியில் இருக்கலாம்.