மீண்டும் புதியதாக எஸ்கார்ட்ஸ் ராஜ்தூத் 175... வாயடைத்து போன இளம் நெட்டிசன்கள்...

ஒருகாலத்தில் இந்தியர்களின் பேராதரவுடன் மற்ற பைக்குகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிவந்த எஸ்கார்ட்ஸ் ராஜ்தூத் 175 பைக், விற்பனையில் இருந்த சமயத்தில் கொண்டிருந்த தோற்றத்திற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மீண்டும் புதியதாக எஸ்கார்ட்ஸ் ராஜ்தூத் 175... வாயடைத்து போன இளம் நெட்டிசன்கள்...

இந்திய சந்தையில் 2-ஸ்ட்ரோக் மோட்டார்சைக்கிள் பிரிவில் யமஹா ஆர்டி350 உள்பட பல மோட்டார்சைக்கிள்கள் கோலோச்சி உள்ளன. யமஹா ஆர்டி350, அதன் தோற்றத்தாலும், ஆற்றல்மிக்க என்ஜினாலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான மோட்டார்சைக்கிளாக விளங்கியது.

மீண்டும் புதியதாக எஸ்கார்ட்ஸ் ராஜ்தூத் 175... வாயடைத்து போன இளம் நெட்டிசன்கள்...

இந்த வகையில் 70, 80களில் வாடிக்கையாளர்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த மற்றொரு பைக் மாடல் தான் ராஜ்தூத் 175. ஆர்டி350-ஐ போல் ஆற்றல் மிகுந்த என்ஜினை கொண்டில்லாவிடினும், இதன் என்ஜின் அந்த சமயத்தில் மிகவும் குறைவான ஆர்பிஎம்-ல் அதிக டார்க் திறனை வெளிப்படுத்தியது சிறப்பம்சமாக பார்க்கப்பட்டது.

மீண்டும் புதியதாக எஸ்கார்ட்ஸ் ராஜ்தூத் 175... வாயடைத்து போன இளம் நெட்டிசன்கள்...

ராஜ்தூத் 175 பைக்கை தற்போது விரல்விட்டு எண்ணிவிடும் அளவிலான வாடிக்கையாளர்கள் தான் வைத்துள்ளனர். அவர்களில் சிலர் இந்த பழமை வாய்ந்த வாகனத்தை மீண்டும் புதிய தோற்றத்திற்கு மாற்றுவதற்கும் மறப்பதில்லை. அவ்வாறான பைக்குகளுள் ஒன்றை தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

விற்பனையில் இருந்த போது கொண்டிருந்த தோற்றத்தை பெற்றுள்ள இந்த ராஜ்தூத் 175 பைக் குறித்து வீக்கெண்ட் ஆன் வீல்ஸ் #வாவ் என்ற யூடியுப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், இந்த இரு-ஸ்ட்ரோக் மோட்டார்சைக்கிள் ஸ்டாக் நிலைக்கு மாற்றப்பட்ட பிறகு எவ்வாறு உள்ளது என்பது விரிவாக காட்டப்பட்டுள்ளது.

மீண்டும் புதியதாக எஸ்கார்ட்ஸ் ராஜ்தூத் 175... வாயடைத்து போன இளம் நெட்டிசன்கள்...

இதன் 11 லிட்டர் பெட்ரோல் டேங்கின் இருபுறங்களிலும் க்ரோம்-ஆல் செய்யபட்ட பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் பெட்ரோல் டேங்க் மூடியை திறப்பதற்கென தனியாக சாவி உள்ளது. தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் எந்த மாற்றமும்.

மீண்டும் புதியதாக எஸ்கார்ட்ஸ் ராஜ்தூத் 175... வாயடைத்து போன இளம் நெட்டிசன்கள்...

இந்த க்ளஸ்ட்டர் வாகனத்தின் வேகம் மற்றும் ஓடோ மீட்டரை தவிர்த்து பெரிய அளவில் எந்த விபரத்தையும் காட்டாது. இதற்கு முன்புறத்தில் உள்ள பைக்கை ஸ்டார்ட் செய்வதற்கான சாவி குழி மூன்று நிலைகளை கொண்டுள்ளது. இதில், மையத்தில் சாவியை செருகினால் வாகனம் முழுவதும் அணைத்து வைக்கப்பட்டுவிடும்.

மீண்டும் புதியதாக எஸ்கார்ட்ஸ் ராஜ்தூத் 175... வாயடைத்து போன இளம் நெட்டிசன்கள்...

அதுவே சாவியை இடதுபுறமாக நகர்த்தினால் என்ஜினிற்கு மின்சார ஆற்றல் வழங்குவது உள்பட மொத்த பைக்கும் இயக்கத்திற்கு தயாராகிவிடும். சாவியை வலதுபுறமாக திருப்பினால் ஹேண்டில்பாரின் வலதுபுறத்தில் உள்ள ஸ்விட்ச்களை மட்டும் செயல்படுத்த முடியும்.

மீண்டும் புதியதாக எஸ்கார்ட்ஸ் ராஜ்தூத் 175... வாயடைத்து போன இளம் நெட்டிசன்கள்...

இந்த வசதி இருண்ட பகுதியில் இருந்து வாகனத்தை எடுக்க உதவும். அதாவது ஹேண்டில்பாரின் வலதுபுறத்தில் தான் ஹெட்லேம்பிற்கான ஸ்விட்ச் உள்ளது. ஹெட்லேம்பை சுற்றியுள்ள கௌல் செவ்வக வடிவில் இருந்தாலும், உள்ளே ஹெட்லேம்ப் ஆனது அதிக மற்றும் குறைவான வெளிச்சத்திற்கான ஹலோஜன் விளக்குகளுடன் வட்ட வடிவில் தான் உள்ளது.

மீண்டும் புதியதாக எஸ்கார்ட்ஸ் ராஜ்தூத் 175... வாயடைத்து போன இளம் நெட்டிசன்கள்...

பின்புறத்தில் நேர்த்தியான டிசைனில் உள்ள டெயில் விளக்கு இரு புறங்களிலும் வட்ட வடிவில் டர்ன்-சிக்னல் இண்டிகேட்டர்களை கொண்டுள்ளது. பைக்கின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள பேனல் தன்னால் முடிந்த அளவிற்கு பெரும்பான்மையாக எல்லா பாகங்களையும் மறைத்துள்ளது.

மீண்டும் புதியதாக எஸ்கார்ட்ஸ் ராஜ்தூத் 175... வாயடைத்து போன இளம் நெட்டிசன்கள்...

எக்ஸாஸ்ட் குழாய் பைக்கின் வலதுபுறத்திலும், ராஜ்தூத் 175 விற்பனையான காலத்தில் இந்த பைக்கில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை வைக்கும் பின்புற உலோக சட்டம் சில்வர் நிறத்திலும் உள்ளன. ஓட்டுனர் மற்றும் பின் இருக்கை பயணி என இருவருக்கும் சேர்த்து ஒற்றை தூண்டாக இருக்கை இந்த பைக்கில் உள்ளது.

மீண்டும் புதியதாக எஸ்கார்ட்ஸ் ராஜ்தூத் 175... வாயடைத்து போன இளம் நெட்டிசன்கள்...

மற்றொரு முக்கிய அம்சமாக பைக்கை ஸ்டார்ட் செய்வதற்கான கிக்கர் மற்றும் கியர் லிவர் எந்த மாற்றமுமின்றி அப்படியே இடதுபுறத்திலேயே தொடர்ந்துள்ளன. அதேபோல் இந்த ராஜ்தூத் 175 பைக்கில் சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக் போன்ற மெக்கானிக்கல் பாகங்களும் மாற்றப்படவில்லை.

மீண்டும் புதியதாக எஸ்கார்ட்ஸ் ராஜ்தூத் 175... வாயடைத்து போன இளம் நெட்டிசன்கள்...

சஸ்பென்ஷன் அமைப்பாக இரு பக்கங்களிலும் ஏர்லஸ் ஃபோர்க் யூனிட்டும், ஸ்போக் சக்கரங்களில் ப்ரேக்கிங் பணியை கவனிக்க ட்ரம் ப்ரேக்குகளும் உள்ளன. இவற்றுடன் என்ஜினை அமைப்பையும் எந்தவொரு மாற்றமுமின்றி இந்த திருத்தியமைக்கப்பட்ட ராஜ்தூத் 175 பைக் பெற்றுள்ளதாக இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீண்டும் புதியதாக எஸ்கார்ட்ஸ் ராஜ்தூத் 175... வாயடைத்து போன இளம் நெட்டிசன்கள்...

இதன் 173சிசி, சிங்கிள்-சிலிண்டர், 2-ஸ்ட்ரோக் ஏர்-கூல்டு என்ஜின் மிக்கார்ப் கார்புரேட்டர் சிஸ்டத்துடன் அதிகப்பட்சமாக 5000 ஆர்பிஎம்-ல் 9 பிஎச்பி பவரையும், 3500 ஆர்பிஎம்-ல் 13.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

மீண்டும் புதியதாக எஸ்கார்ட்ஸ் ராஜ்தூத் 175... வாயடைத்து போன இளம் நெட்டிசன்கள்...

இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 3-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. என்ஜினின் இந்த ஆற்றல் அளவுகள் தற்போது பெரியதாக இல்லாவிடினும், நெட்ஃபிளிக்ஸுக்கு பதிலாக தூர்தர்ஷன் பார்த்து கொண்டிருந்த அந்த காலக்கட்டத்து வாடிக்கையாளர்களுக்கு மிக பெரியதாகவே இருந்தது.

மீண்டும் புதியதாக எஸ்கார்ட்ஸ் ராஜ்தூத் 175... வாயடைத்து போன இளம் நெட்டிசன்கள்...

கிராமப்புற சாலைகளில் தனி மரியாதையுடன் உலா வந்து கொண்டிருந்த இந்த 2-ஸ்ட்ரோக் மோட்டார்சைக்கிளை பராமரிப்பதும் எளிமையானதாக இருந்தது. இதுவும் இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். ராஜ்தூத் 175 பைக்கை விற்பனை செய்துவந்த எஸ்கார்ட் க்ரூப் இந்த பைக்கின் தயாரிப்பு பணிகளை முதன்முதலாக 1960களில் இந்தியாவில் ஆரம்பித்தது.

போலந்து நாட்டை சேர்ந்த பிரபலமான எஸ்எச்எல் எம்11 175 பைக்கின் மாற்றியமைக்கப்பட்ட வெர்சனாக இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்ட ராஜ்தூத் 175 பைக்கின் தயாரிப்பு, யுரோ 2 மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக அப்டேட் செய்யப்படாததால் 2005ல் நிறுத்தப்பட்டது. ஆனால் அதற்குள்ளாக சுமார் 1.6 மில்லியன் ராஜ்தூத 175 பைக்குகளை எஸ்கார்ட் க்ரூப் விற்பனை செய்துவிட்டது.

மீண்டும் புதியதாக எஸ்கார்ட்ஸ் ராஜ்தூத் 175... வாயடைத்து போன இளம் நெட்டிசன்கள்...

இத்தகைய சிறப்புகளை கொண்ட இந்த பைக் தற்போது புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு எளிதாக மாற்றப்படவில்லை. ஏனெனில் இந்த திருத்தியமைக்கும் பணிக்கு நிறைய நாட்கள் செலவானதாகவும், இதன் சில பாகங்களை தற்போது மீண்டும் வாங்குவதற்குள் போதும், போதும் என்றாகிவிட்டது எனவும் இந்த ராஜ்தூத் 175 பைக்கின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Most Read Articles

English summary
Escorts Rajdoot 175 Fully Restored To Stock Condition. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X