Just In
- 5 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 7 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 7 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
- 9 hrs ago
பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா?
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 17.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Movies
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தொடர்ந்து வெளியாகிவரும் ஹார்லி டேவிட்சன் 338ஆர் பைக்கின் காப்புரிமை படங்கள்... இந்தியாவிற்கு வருமா..
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தில் இருந்து மலிவான மோட்டார்சைக்கிளாக வெளிவரவுள்ள் 338ஆர்-ன் காப்புரிமை படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹார்லி டேவிட்சன் 338ஆர் பைக் முக்கியமாக ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சந்தைக்காக உருவாக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்தியாவில் இந்த பைக் அறிமுகமாகுமா என்பது தெரியவில்லை.
ஏனெனில் இந்தியாவில் தயாரிப்பு மற்றும் விற்பனை பணிகளை நிறுத்தி கொள்ளவுள்ளதாக இந்நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது. 2020 ஜூலையில் ஹார்லி டேவிட்சனின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜோசென் ஜீட்ஸ் பொறுப்பேற்றதிலிருந்து, நிறுவனத்தின் வணிகத்தில் அதிகளவில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கின்றன.

அவற்றில் பெரும்பாலானவை ஹார்லி டேவிட்சனின் முந்தைய நிர்வாக அதிகாரி கொண்டுவந்த சந்தை மற்றும் தயாரிப்புகளை அதிகப்படுத்தும் திட்டங்களை ரத்து செய்வதாகவே உள்ளன. இதன்படி "தி ரிவைர்" மூலோபாயத்தின் கீழ், தயாரிப்பு மாடல்களின் எண்ணிக்கையை 30% குறைக்க இந்த அமெரிக்க க்ரூஸர் பிராண்ட் முடிவு செய்துள்ளது.

சர்வதேச ஊடகங்களால் "பேபி ஹார்லி" என அழைக்கப்படும் ஹார்லி டேவிட்சனின் 338ஆர் பைக் சமீப காலமாக அடிக்கடி செய்திகளில் உலா வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் பிராண்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருத்தம் நடவடிக்கைகளால் இந்த மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வரும் என்று உறுதியாக கூற முடியாத நிலையில் உள்ளோம்.
இருப்பினும் இந்த ஹார்லி டேவிட்சன் பைக்கின் காப்புரிமை படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் தான் உள்ளன. இந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள ஸ்கெட்ச் படங்கள், மறுசீரமைப்பு செயல்முறைகளில் இருந்து இந்த பைக் தப்பித்துவிடும் என்று கூறுவதை போல் உள்ளது.

338ஆர், மற்ற ஹார்லி டேவிட்சன் பைக்குகளில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டதாக விளங்குகிறது. ஏனெனில் ஹார்லி டேவிட்சன் பிராண்டிற்கே உண்டான க்ரூஸர் ரக தோற்றத்தையோ அல்லது பெரிய அளவிலான என்ஜினையோ இந்த பைக் பெறவில்லை என்பது இதன் காப்புரிமை படங்கள் மூலம் அறிய முடிகிறது.
சீனாவை சேர்ந்த கியாஞ்சியாங் க்ரூப் உடனான ஹார்லி டேவிட்சனின் கூட்டணியில் இந்த பைக் உருவாகுவதாக கூறப்படும் நிலையில், 338ஆர் அதன் ப்ளாட்ஃபாரத்தை கியாஞ்சியாங் க்யூஜே350 மற்றும் பெனெல்லி 302எஸ் பைக்குகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த படங்களின் மூலம் பார்க்கும்போது, தட்டையான-ட்ராக் ரேஸர் பைக்குகளின் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஹார்லி டேவிட்சன் பைக்கில் மெல்லிய எரிபொருள் டேங்க், அதிகளவில் சுருக்கப்பட்ட இருக்கை, பைக்கில் இருந்து வெளியே நீளும் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் மற்றும் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
மலிவான விலையில் உருவாக்கப்படும் இந்த மோட்டார்சைக்கிளில் 338சிசி, இணையான-இரட்டை என்ஜின் பொருத்தப்படும் என தெரிகிறது. அதேபோல் இந்த என்ஜின் 43 பிஎச்பி (பெனெல்லி 302எஸ்-ன் 300சிசி என்ஜினை காட்டிலும் 5 பிஎச்பி அதிகம்) வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படலாம். சஸ்பென்ஷனிற்கு தலைக்கீழான டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் முன்புறத்திலும், மோனோஷாக் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. சக்கரங்கள், ப்ரேக்கிங் சிஸ்டம், ஸ்விங்க் ஆர்ம் உள்ளிட்டவை பெனெல்லி 302எஸ் மற்றும் க்யூஜே350 பைக்குகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.
புதிய மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, ஹார்லி டேவிட்சன் நிறுவனம் உலகம் முழுவதிலும் வெறும் 50 அதிக லாபகரமான சந்தைகளில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இதற்கு அர்த்தம், இந்தியா உள்ளிட்ட குறைந்த அளவிலான சந்தைகளில் இருந்து விலகுவதாகும். இருப்பினும், எண்ட்ரீ-லெவல் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளுக்கு முதன்மை சந்தையாக ஆசியா விளங்குகிறது.

இதனால் இந்தியாவுக்காக புதிய வணிக மாதிரியில் செயல்படவுள்ளதாக இந்நிறுவனம் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், அதன் 338ஆர் பைக்கை தயாரிக்கவும் சில்லறை விற்பனை செய்யவும் ஒரு உள்ளூர் நிறுவனத்துடன் ஹார்லி டேவிட்சன் கூட்டணி ஏற்படுத்தி கொள்ளலாம். ஆனால் அதை பற்றி தற்போதைக்கு விவாதிக்க இயலாது.