2021ல் ஹார்லி-டேவிட்சன் கஸ்டம் 1250 பைக் விற்பனைக்கு வருவது உறுதி!! பான் அமெரிக்கா வருமா?

ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் அதன் இணையத்தள பக்கத்தில் எதிர்கால மாடல்கள் பிரிவில் கஸ்டம் 1250 மோட்டார்சைக்கிளின் பெயரை கொண்டுவந்து அதன் இந்திய அறிமுகத்தை உறுதி செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021ல் ஹார்லி-டேவிட்சன் கஸ்டம் 1250 பைக் விற்பனைக்கு வருவது உறுதி!! பான் அமெரிக்கா வருமா?

ஹார்லி-டேவிட்சன் கஸ்டம் 1250 பைக்கின் கான்செப்ட் மாடலை கடந்த 2018ல் காட்சிப்படுத்தியது. அதன்பின் ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தின் சிஇஒ மாற்றத்தால் அந்நிறுவனத்தின் இந்திய வணிக திட்டங்கள் மாற்றமடைந்தன.

2021ல் ஹார்லி-டேவிட்சன் கஸ்டம் 1250 பைக் விற்பனைக்கு வருவது உறுதி!! பான் அமெரிக்கா வருமா?

இதன்படி இந்த பிராண்ட் இந்திய சந்தைக்காக இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன பிராண்டான ஹீரோ மோட்டோகார்ப் உடன் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ளது. இதன் காரணமாக எதிர்கால ஹார்லி-டேவிட்சன் பைக்குகளின் அறிமுகம் சிறிது மங்கலானது.

இந்நிறுவனத்தின் ஸ்ட்ரீட் வரிசை பைக்குகள்தான் தற்சமயம் தயாரிப்பில் உள்ளதால், இந்தியாவில் அடுத்து எந்த ஹார்லி-டேவிட்சன் பைக் அறிமுகமாகவுள்ளது என்பது சரியாக தெரியவில்லை. உறுதியாக சொல்ல வேண்டுமென்றால், ஹார்லி-டேவிட்சன் பான் அமெரிக்கா டூரர் மற்றும் கஸ்டம் 1250 என்ற இரு மாடல்கள் 2021ல் இந்தியாவில் அறிமுகமாகும் என்ற சொல்லலாம்.

2021ல் ஹார்லி-டேவிட்சன் கஸ்டம் 1250 பைக் விற்பனைக்கு வருவது உறுதி!! பான் அமெரிக்கா வருமா?

1250சிசி ரெவால்யுஷன் மேக்ஸ் என்ஜினின் 975சிசி வெர்சனை பெற்றுவரவுள்ளதாக கூறப்பட்ட ப்ரான்க்ஸ் ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்கின் வருகை தாமதமாகியுள்ளது, ஏன் ரத்து கூட செய்யப்பட்டிருக்கலாம். பான் அமெரிக்காவில் லிக்யூடு-கூல்டு, 60-கோண வி-ட்வின் ரெவால்யுஷன் மேக்ஸ் என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக 145 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் இதே என்ஜின் தான் கஸ்டம் 1250 பைக்கில் அதன் தனித்தன்மைக்கு ஏற்ற விதத்தில் சற்று குறைவான டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் திருத்தியமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

2021ல் ஹார்லி-டேவிட்சன் கஸ்டம் 1250 பைக் விற்பனைக்கு வருவது உறுதி!! பான் அமெரிக்கா வருமா?

இந்திய சந்தையில் மாற்றங்களை கொண்டுவரும் அதேநேரத்தில் ஐரோப்பிய சந்தையில் யூரோ 5 மாசு உமிழ்வு விதியினால் ஸ்போர்ட்ஸ்டர் வரிசையில் உள்ள 750சிசி, 883சிசி மற்றும் 1,200சிசி வி-ட்வின் என்ஜின் பைக்குகளின் விற்பனையை நிறுத்தி கொள்ள ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

கஸ்டம் 1250, ஸ்போர்ஸ்டர் பைக்குகளுக்கு மாற்றாக வெளிவரும் முதல் புதிய மாடலாகும். புதிய என்ஜின் மட்டுமின்றி தொழிற்நுட்ப வசதிகள் மற்றும் செயல்திறனிலும் ஹார்லி-டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் பைக்குகளை காட்டிலும் கஸ்டம் 1250 பைக் ஒரு படி முன்னே இருக்கும்.

Most Read Articles
English summary
Harley-Davidson Custom 1250 Confirmed For 2021
Story first published: Tuesday, December 1, 2020, 2:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X