பழச மறக்காத ஹார்லி டேவிட்சன்! என்ன செஞ்சிருக்கு தெரியுமா?.. வாயை பிளந்த மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள்!

கடந்து வந்த பாதையை நினைவுகூறும் விதமாக ஹார்லி டேவிட்சன் தரமான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்த சுவாரஷ்ய தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பழச மறக்காத ஹார்லி டேவிட்சன்... என்ன செஞ்சிருக்கு தெரியுமா?.. வாயை பிளந்த மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள்...

உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன், அதன் ஆரம்ப காலத்தை நினைவு கூறும் வகையில் ஓர் இ-மிதிவண்டியை தற்போது புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த இ-மிதிவண்டிக்கு 'சீரியல் 1' என்ற பெயரை அது வைத்திருக்கின்றது.

பழச மறக்காத ஹார்லி டேவிட்சன்... என்ன செஞ்சிருக்கு தெரியுமா?.. வாயை பிளந்த மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள்...

அதாவது, இந்நிறுவனம் இந்த உலகில் முதல் முறையாக அறிமுகானபோது, விற்பனைக்குக் கொண்டுவந்த சைக்கிளின் தோற்றத்தை ஒத்த முதல் பைக்கை நினைவு கூறும் வகையில் இந்த இ-மிதிவண்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவேதான், இந்த பைக்கை பரைசாற்றும் வகையில் புதிய இ-சைக்கிளுக்கு சீரியல் 1 என்ற பெயரையும் ஹார்லி டேவிட்சன் சூட்டியுள்ளது.

பழச மறக்காத ஹார்லி டேவிட்சன்... என்ன செஞ்சிருக்கு தெரியுமா?.. வாயை பிளந்த மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள்...

உலகளாவிய வெளியீட்டை ஹார்லி டேவிட்சன் செய்துள்ளது. ஆனால், இந்த இ-சைக்கிள் வரும் 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே விற்பனைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இந்நிறுவனம், அதன் முதல் மோட்டார்சைக்கிளை கடந்த 1903 ஆம் ஆண்டே விற்பனைக்கு களமிறக்கியது. இதற்கு 'சீரியல் நம்பர் ஒன்' (‘Serial Number One') என்ற பெயரில் அது அறிமுகம் செய்யப்பட்டது.

பழச மறக்காத ஹார்லி டேவிட்சன்... என்ன செஞ்சிருக்கு தெரியுமா?.. வாயை பிளந்த மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள்...

இதனை நினைவுக்கூறும் விதமாக பைக்கின் உருவம் மற்றும் ஸ்டைல் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் புதிய இ-சைக்கிளை ஹார்லி டேவிட்சன் வடிவமைத்துள்ளது. இது தோற்றம் சற்று கிளாசியாக இருப்பதை நம்மால் காண முடிகின்றது. ஆனால், இதில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் அனைத்தும் நவீன காலத்திற்கு ஏற்பதாகும்.

பழச மறக்காத ஹார்லி டேவிட்சன்... என்ன செஞ்சிருக்கு தெரியுமா?.. வாயை பிளந்த மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள்...

இதை வெளிப்படுத்தும் வகையில் எளிதில் அழுக்கு படியாத வெள்ளை நிற டயர், ஸ்பிரிங் பேட்டில், நேரான கைப்பிடிகள், ஒயர்-ஸ்போக்குகள் கொண்ட ரிம் உள்ளிட்ட ஏராளமானவற்றை ஹார்லி டேவிட்சன் இந்த இ-சைக்கிளில் வழங்கியுள்ளது. இவையனைத்தும் நவீன தரத்திலானதாக இருந்தாலும் தோற்றம் என்னவே முந்தைய காலத்தை வெளிக்காட்டும் வகையிலேயே அமைந்துள்ளது.

பழச மறக்காத ஹார்லி டேவிட்சன்... என்ன செஞ்சிருக்கு தெரியுமா?.. வாயை பிளந்த மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள்...

இத்துடன், எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லைட், இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் கண்கவரும் கருப்பு நிற பெயிண்ட் உள்ளிட்டவற்றையும் ஹார்லி டேவிட்சன் இ-பைக்கில் வழங்கியுள்ளது. ஹார்லி டேவிட்சன் கடந்த மிக சமீபத்தில்தான் இந்திய சந்தையை விட்டு வெளியேறியது. அதேசமயம், தற்போது நாட்டின் இருசக்கர வாகன உலகின் ஜாம்பவானான ஹீரோ மோட்டோகார்ப் உடன் அது கூட்டணியைத் தொடங்கியுள்ளது.

பழச மறக்காத ஹார்லி டேவிட்சன்... என்ன செஞ்சிருக்கு தெரியுமா?.. வாயை பிளந்த மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள்...

இந்த கூட்டணியின் அடிப்படையிலேயே விரைவில் அதன் அனைத்து இருசக்கர வாகனங்களையும் ஹார்லி சந்தைப்படுத்த இருக்கின்றது. இம்மாதிரியான சூழ்நிலையிலேயே தனது கடந்த காலத்தை பரைசாற்றும் விதமாக புதிய சீரியல் 1 எனும் இ-மிதிவண்டியை ஹார்லி டேவிட்சன் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், ஹீரோவுடன் கூட்டணி அமைந்திருப்பதால் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

பழச மறக்காத ஹார்லி டேவிட்சன்... என்ன செஞ்சிருக்கு தெரியுமா?.. வாயை பிளந்த மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள்...

ஆனால், சீரியல் 1 இ-சைக்கிளின் இந்திய விற்பனைப் பற்றிய அதிகாரப்பூர்வ இதுவரை கிடைக்கவில்லை. மேலும், இ-சைக்கிளின் ரேஞ்ஜ் மற்றும் சிறப்பு வசதிகள் போன்றவற்றின் தகவலும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் பாரம்பரியமிக்க தோற்றத்தில் இந்த இ-சைக்கிள் காட்சியளிப்பதால் ஹார்லி டேவிட்சன் இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் சீரியல்-1 ஆவலைத் தூண்டியுள்ளது.

பழச மறக்காத ஹார்லி டேவிட்சன்... என்ன செஞ்சிருக்கு தெரியுமா?.. வாயை பிளந்த மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள்...

இந்த இ-சைக்கிள் மட்டுமில்லைங்க ஹார்லி டேவிட்சனின் மற்றுமொரு பைக் பற்றிய தகவலும் அதன் ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. ஆம் விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் 338ஆர் பைக்கைப்பற்றி தான் நாம் இங்கு பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இந்த பைக்கை ஆசியா மற்றும் ஐரோப்பிய ஆகிய இருசக்கர வாகன சந்தைகளுக்காக மட்டுமே ஹார்லி டேவிட்சன் உருவாக்கி வருகின்றது.

பழச மறக்காத ஹார்லி டேவிட்சன்... என்ன செஞ்சிருக்கு தெரியுமா?.. வாயை பிளந்த மோட்டார்சைக்கிள் ஆர்வலர்கள்...

விலை மற்றும் உருவத்தில் சிறியதாக இந்த பைக் காட்சியளிப்பதால் சிலர் இப்பைக்கை 'பேபி ஹார்லி' என செல்லமாக அழைக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையிலேயே அண்மையில் பேபி ஹாரிலி பற்றிய புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி அதன் ரசிகர்களை மேலும் தூண்டியது. குறிப்பாக, பைக்கின் புகைப்படத்துடன், அப்பைக்கிற்கான காப்புரிமையை ஹார்லி பெற்றதாகவும் தகவல் வெளியாகியது. இந்த தகவல் அதன் ஆர்வலர்கள் மேலும் ஆவலை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

Most Read Articles

English summary
Harley-Davidson ‘Serial 1’ e-Bicycle Unveiled: Inspired By Brand’s First-Ever Motorcycle From 1903. Read In Tamil.
Story first published: Friday, October 30, 2020, 11:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X