Just In
- 8 min ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 2 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 4 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 4 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியாவில் ஹார்லி-டேவிட்சன் என்ன செய்தது என கேட்பவர்களுக்கான விடை... இதோ வீடியோவாக!! இதுபோதும்...
இந்தியாவில் இருந்து விடைபெற்ற நிலையில் இந்திய சந்தைக்கான புதிய வீடியோவை ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

மோட்டார்சைக்கிள் பிரியர் என்றால் நிச்சயம் உங்களுக்கு ஹார்லி-டேவிட்சன் பிராண்ட் எவ்வளவு பெரியது மற்றும் எவ்வளவு பழமையானது என்ற விஷயம் தெரிந்திருக்கும்.

சுமார் 118 வருடங்களாக இருசக்கர வாகன தயாரிப்பில் ஈடுப்பட்டுவரும் ஹார்லி-டேவிட்சன் அதன் தயாரிப்பு மூலமாக மக்களுடன், அவர்களது உணர்வுகளுடன் பிணைப்பை ஏற்படுத்தி கொண்டுள்ளது.

இந்திய மக்களும் ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களை கொண்டாட தவறவில்லை. நம் நாட்டிலும் பல ஆண்டுகளாக இந்த அமெரிக்க பிராண்டில் இருந்து மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்ட வண்ணமே உள்ளது.
இதனை கொண்டாடும் விதத்தில்தான் தற்போது ‘என்றென்றும் எச்-டி இந்தியா' என்ற பெயரில் புதிய வீடியோ ஒன்றை ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியர்கள் ஹார்லி-டேவிட்சன் பைக்குகளை தங்களது மனதில் எந்த இடத்தில் வைத்துள்ளனர் என்பது இந்த வீடியோவில் தெள்ள தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

ஹார்லி-டேவிட்சன் என்ன செய்தது? என்ற கேள்வியுடன் துவங்கும் இந்த வீடியோ எனக்கு தெரிந்தவரை அதற்கான விடை அனைத்தையும் காட்டிய பின்னரே நிறைவு பெற்றுள்ளது. மற்ற பைக்குகள் செல்லும் சாலையில் திடீரென ஒரு ஹார்லி-டேவிட்சன் பைக் சென்றால் நமது ரியாக்ஷன் எவ்வாறு இருக்கும் என்பதை தத்ரூவமாக இந்த வீடியோவில் காட்டியுள்ளனர்.

இந்திய சந்தையை பொறுத்தவரையில், விற்பனை குறைவாலும், முன்பு இருந்த அளவிற்கு பைக்குகளுக்கு வரவேற்பு கிடைக்காததினாலும் இந்தியாவில் இருந்து சிறிது காலம் தள்ளியிருக்க ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

ஏனெனில் நம் நாட்டில் இந்த அமெரிக்க பிராண்ட் இலாபத்தை காட்டிலும் இறக்குமதி செலவுகளால் நஷ்டத்தையே சந்திக்க நேர்ந்தது. அது மட்டுமில்லாமல் புது சிஇஒ-வால் ஹார்லி-டேவிட்சன் நிர்வாக முறைகளும், தத்துவங்களும் புதியதாக மாற்றமடைந்துள்ளன.

இந்தியாவில் இருந்து வெளியேறினாலும் தொடர்ந்து மோட்டார்சைக்கிள்களை இங்கு விற்பனை செய்யவே அந்த நிறுவனம் விரும்புகிறது. இதற்காக முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் உடன் ஹார்லி-டேவிட்சன் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ளது.

இதனால் ஹார்லி-டேவிட்சன் பைக்குகளை இந்தியாவில் விற்பது, அவற்றை பழுது பார்ப்பது, அவற்றின் பாகங்கள் மற்றும் கூடுதல் ஆக்ஸஸரீகளை விற்பனை செய்வது உள்ளிட்ட பணிகளை அனைத்தையும் தற்போது உள்ள டீலர்ஷிப் மையங்கள் மூலம் ஹீரோ நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.

ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்திற்கா இந்தியாவில் இந்த நிலைமை? என்றாலும், அதன் இத்தனை வருட பயணத்தை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. தொலைவில் இருந்தாலும் இந்திய சந்தையை புரிந்து கொள்வதில் இந்த நிறுவனம் தீவிரமாக இருக்கும்.

சிறிது காலம் எடுத்து கொண்டு மீண்டும் பழைய வலிமையுடன் இந்திய சந்தைக்கு வரவேண்டுமென ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் சார்பாக ஹார்லி-டேவிட்சனை கேட்டு கொள்கிறோம். ஏனெனில் வணிகம் செய்வதற்கு எளிமையான புது டெல்லி போன்ற நகரங்கள் உலகில் எங்கு சென்றாலும் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடாது.