Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 5 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 7 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 7 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியாவை விட்டு வெளியேறியது அநீதி... ஹார்லி டேவிட்சனுக்கு எதிராக பைக் உரிமையாளர்கள் போராட்டம்...
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியா முழுவதும் நேற்று பைக் உரிமையாளர்கள் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் உரிமையாளர்கள் சார்பில், இந்தியா முழுவதும் 14 நகரங்களில் நேற்று (நவம்பர் 22ம் தேதி) இரு சக்கர வாகன பேரணி நடத்தப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 'Dark Rides' என்ற பெயரில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை மற்றும் உற்பத்தி செயல்முறைகளை நிறுத்தி கொள்ள இருப்பதாக ஹார்லி டேவிட்சன் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் திடீரென அறிவித்தது. இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களுக்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

ஆனால் ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள் டீலர்கள் மற்றும் உரிமையாளர்கள் மத்தியில் இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலகின் பல்வேறு நாடுகளிலும் ஹார்லி டேவிட்சன் நிறுவன மோட்டார்சைக்கிள்களின் விற்பனை தடுமாறி வருகிறது என்பது உண்மைதான். ஆனால் இந்தியாவில் விற்பனை மிகவும் மோசமாக உள்ளது.

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் முதல் முறையாக கடந்த 2009ம் ஆண்டு கால்பதித்தது. ஆனால் அப்போதில் இருந்தே சிறப்பான அடித்தளத்தை அமைக்க முடியாத காரணத்தால், விற்பனை சிறப்பாக இல்லை. எனவே இந்தியாவை விட்டு வெளியேறுவது என்ற அதிரடி முடிவை ஹார்லி டேவிட்சன் எடுத்தது.

ஆனால் இந்தியாவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் டீலர்களுக்கும், தற்போது உள்ள வாடிக்கையாளர்களுக்கும் இந்த முடிவு பேரிடியாக அமைந்துள்ளது. அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் பிரீமியம் மோட்டார்சைக்கிள்களை சர்வீஸ் செய்ய முடியாமல் தடுமாறி வருவதாக, உரிமையாளர்களில் பலர் தெரிவித்துள்ளனர்.

எனவே ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், லூதியானா, சண்டிகர், டேராடூன், லக்னோ, டெல்லி, குர்கான், ஜெய்ப்பூர், இந்தூர், போபால், ராய்ப்பூர், கொல்கத்தா, புவனேஸ்வர், மும்பை மற்றும் கவுகாத்தி ஆகிய இந்தியாவின் 14 நகரங்களில் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்கள் நேற்று பேரணி நடத்தினர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற ஹார்லி டேவிட்சன் உரிமையாளர்கள் பலர், கடந்த பல மாதங்களாகவே, தங்களது பைக்குகளுக்கு ஸ்பேர் பார்ட்ஸ் கிடைப்பதில் பல்வேறு சிரமங்கள் இருந்து வருவதாக கூறினர். அத்துடன் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இந்த முடிவு, அதன் டீலர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி எனவும் அவர்களில் பலர் தெரிவித்தனர்.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் டீலர்கள் பலர் இந்த வியாபாரத்தில் பல கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர். ஆனால் இந்தியாவை விட்டு வெளியேறுவது என ஹார்லி டேவிட்சன் எடுத்துள்ள முடிவால், அவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் இந்த முடிவும், அதன் தொடர்ச்சியாக நடந்து வரும் சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Note: Images used are for representational purpose only.