வெறும் 30 யூனிட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் ஹார்லி டேவிட்சன் எஃப்எக்ஸ்டிஆர்114 லிமிடேட் எடிசன்

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாட்டில் உள்ள தனது விற்பனை மாடல்களின் எண்ணிக்கையை எஃப்எக்ஸ்டிஆர் 114 லிமிடேட் எடிசனின் மூலமாக விரிவுப்படுத்தியுள்ளது. இந்த புதிய பைக் குறித்து பென்னெட்ஸ் என்ற செய்தி தளம் வெளியிட்டுள்ள விபரங்களை முழுமையாக இந்த செய்தியில் பார்ப்போம்.

வெறும் 30 யூனிட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் ஹார்லி டேவிட்சன் எஃப்எக்ஸ்டிஆர்114 லிமிடேட் எடிசன்

வெறும் 30 யூனிட்கள் மட்டும் விற்பனை செய்யப்படவுள்ள புதிய எஃப்எக்ஸ்டிஆர் 114 பைக்கின் டிசைனை இங்கிலாந்தில் உள்ள பெயிண்டர்கள், கஸ்டம் டிசைன் நிறுவனங்கள் மற்றும் இமேஜ் டிசைன் நிறுவனங்களின் உதவியுடன் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

வெறும் 30 யூனிட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் ஹார்லி டேவிட்சன் எஃப்எக்ஸ்டிஆர்114 லிமிடேட் எடிசன்

இதன் விளைவாக வாடிக்கையாளர்களின் கண்கவரும் வகையில் வெள்ளை, கருப்பு மற்றும் தங்க நிறத்தில் பெயிண்ட் தேர்வுகளை இந்த புதிய லிமிடேட் எடிசன் பைக் ஏற்றுள்ளது. காஸ்மெட்டிக் மாற்றங்களாக இந்த பைக்கில் ‘லிமிடேட் எடிசன்' என்ற முத்திரை, பெட்ரோல் டேங்கில் வித்தியாசமான லோகோ டிசைன் மற்றும் ஒருங்கிணைந்த சீரியல் நம்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

MOST READ: பருவமழை தொடங்க போகுது... மழை நீரில் இருந்து வாகனங்களை பாதுகாக்க எளிமையான வழி என்னென்ன..?

வெறும் 30 யூனிட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் ஹார்லி டேவிட்சன் எஃப்எக்ஸ்டிஆர்114 லிமிடேட் எடிசன்

ஹார்ட்வேர்களில் முக்கியமான மாற்றமாக ஸ்டாக் க்ளிப்-ஆன்களுக்கு பதிலாக ‘ஃபாட் ஏப்' ஹேண்டில்பார் ரைசர் கிட்டை கொண்ட ஒற்றை துண்டில் ஹேண்டில்பார் பொருத்தப்பட்டுள்ளது. மற்றப்படி பைக்கின் மற்ற பாகங்கள் அனைத்தும் வழக்கமான ஹார்லி டேவிட்சன் எஃப்எக்ஸ்டிஆர் 114 பைக் மாடலை தான் ஒத்து காணப்படுகின்றன.

வெறும் 30 யூனிட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் ஹார்லி டேவிட்சன் எஃப்எக்ஸ்டிஆர்114 லிமிடேட் எடிசன்

இதன் புதிய லிமிடேட் எடிசனில் இயக்க ஆற்றலுக்கு இந்நிறுவனத்தின் மில்வாக்கி-எய்ட் 114 1,868சிசி வி-ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 4,500 ஆர்பிஎம்-ல் 90 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனை இந்த லிமிடேட் எடிசனில் வெகு விரைவாக அதாவது 3,500 ஆர்பிஎம்-லேயே வெளிப்படுத்தும்.

MOST READ: உங்க பைக்கிற்கு எவ்வளவு இன்ஸ்யூரன்ஸ் பிரிமீயம்னு தெரியணுமா?... இங்கே க்ளிக் பண்ணுங்க

வெறும் 30 யூனிட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் ஹார்லி டேவிட்சன் எஃப்எக்ஸ்டிஆர்114 லிமிடேட் எடிசன்

இதன் விலை ஐரோப்பிய சந்தையில் 18,345 யூரோவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய ரூபாய் மதிப்பு 16.97 லட்சமாகும். இது எஃப்எக்ஸ்டிஆர் 114 பைக்கின் பேஸ் வேரியண்ட்டை விட கிட்டத்தட்ட 40 ஆயிரம் ரூபாய் அதிகமாகும்.

வெறும் 30 யூனிட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் ஹார்லி டேவிட்சன் எஃப்எக்ஸ்டிஆர்114 லிமிடேட் எடிசன்

இந்த விலை அதிகரிப்பு, தற்போது புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள நிறத்தேர்வுகளுக்கு தான். எஃப்எக்ஸ்டிஆர் 114 மாடலின் வழக்கமான மற்ற நிறத்தேர்வுகளில் இந்த லிமிடேட் எடிசன் இந்த பைக்கின் தற்போதைய விலையில் தான் விற்பனை செய்யப்படவுள்ளது.

MOST READ: பட்டுனு பைக் இன்ஸ்யூரன்ஸ் புதுப்பிக்கணுமா?... சட்டுனு இங்கே க்ளிக் பண்ணுங்க!

வெறும் 30 யூனிட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் ஹார்லி டேவிட்சன் எஃப்எக்ஸ்டிஆர்114 லிமிடேட் எடிசன்

கொரோனா வைரஸினால் ஏற்பட்டிருக்கும் நஷ்டங்களுக்கு மத்தியில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் கஸ்டம் பணிகளுக்கு அதிகளவில் உட்படுத்தும் எஃப்எக்ஸ்டிஆர் 114 பைக்கின் தோற்றத்தை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்க இந்த புதிய லிமிடேட் எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Harley-Davidson FXDR 114 Limited Edition Revealed
Story first published: Saturday, May 23, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X