ரொம்ப பில்டப்-ஆ இருக்கே!! ஹார்லி டேவிட்சனின் முதல் அட்வென்ச்சர் பைக் அடுத்த ஆண்டு அறிமுகம்

ஹார்லி டேவிட்சன் பான் அமெரிக்கா மோட்டார்சைக்கிள் உலகளாவிய அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

ரொம்ப பில்டப்-ஆ இருக்கே!! ஹார்லி டேவிட்சனின் முதல் அட்வென்ச்சர் பைக் அடுத்த ஆண்டு அறிமுகம்

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் உலகளாவிய ஆலோசனை கூட்டத்தை ‘எச்-டி 21' என்ற பெயரில் 2021 ஜனவரி 19ஆம் தேதி நடத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் புதிய உலகளாவிய தயாரிப்பு மாடல்களை வெளியிட ஹார்லி டேவிட்சன் திட்டமிட்டுள்ளது.

ரொம்ப பில்டப்-ஆ இருக்கே!! ஹார்லி டேவிட்சனின் முதல் அட்வென்ச்சர் பைக் அடுத்த ஆண்டு அறிமுகம்

மேலும் அப்போது மோட்டார்சைக்கிள் பாகங்கள் மற்றும் சவாரி கியரையும் வாடிக்கையாளர்களுக்கு இந்த நிறுவனம் காண்பிக்கவுள்ளது. அதனை தொடர்ந்து பான் அமெரிக்கா அட்வென்ச்சர் மோட்டர்சைக்கிளின் முன்னோட்டத்தையும் வெளியிட ஹார்லி டேவிட்சன் முடிவெடுத்துள்ளது.

ரொம்ப பில்டப்-ஆ இருக்கே!! ஹார்லி டேவிட்சனின் முதல் அட்வென்ச்சர் பைக் அடுத்த ஆண்டு அறிமுகம்

இதற்காக இந்த ஆலோசனை கூட்ட நிகழ்ச்சி இரண்டாக பிரிக்கப்படவுள்ளது. அதன்படி பான் அமெரிக்கா அட்வென்ச்சரை பற்றிய அப்டேட்கள் 2021 பிப்ரவரி 22ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன. இதனால் வருகிற பிப்ரவரி 22ல் சர்வதேச சந்தைக்கான இந்த அட்வென்ச்சர் பைக்கை பற்றிய கிட்டத்தட்ட அனைத்து தகவல்களும் வெளியிடப்பட்டுவிடும் என தெரிகிறது.

ரொம்ப பில்டப்-ஆ இருக்கே!! ஹார்லி டேவிட்சனின் முதல் அட்வென்ச்சர் பைக் அடுத்த ஆண்டு அறிமுகம்

இதுகுறித்து ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் பிரிவின் துணை தலைவர் தியோ கீட்டால் கருத்து தெரிவிக்கையில், "எங்கள் 2021 மோட்டார் சைக்கிள்களின் பின்னால் உள்ள உத்வேகத்தையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்த உலகத்தை கிட்டத்தட்ட ஒன்றாகக் கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

ரொம்ப பில்டப்-ஆ இருக்கே!! ஹார்லி டேவிட்சனின் முதல் அட்வென்ச்சர் பைக் அடுத்த ஆண்டு அறிமுகம்

இதில் ஒன்று எங்கள் முதல் அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிள், பான் அமெரிக்கா டிஎம் ஆகும். இந்த தருணத்தை உலகெங்கிலும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் பகிர்ந்து கொள்ள எதிர்பார்க்கிறோம்" என கூறினார்.

ரொம்ப பில்டப்-ஆ இருக்கே!! ஹார்லி டேவிட்சனின் முதல் அட்வென்ச்சர் பைக் அடுத்த ஆண்டு அறிமுகம்

ஹார்லி-டேவிட்சன் அதன் முழு உலகளாவிய தயாரிப்பு வரிசையையும் 2021 முதல் ஒழுங்குபடுத்த இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தவுள்ளது. பான் அமெரிக்கா 1250 அட்வென்ச்சர் பிராண்டின் புதிய மாடல் வரிசையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தயாரிப்புகளுள் ஒன்றாகும். ஆனால் பான் அமெரிக்காவின் படங்களைத் தவிர வேறு எந்த விவரங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை!

Most Read Articles

English summary
Harley-Davidson Pan America Global Unveil Date Confirmed: New Product Lineup To Be Showcased In January 2021
Story first published: Friday, December 11, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X