ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..!

பிஎஸ்6 வாகனங்களை தொடர்ச்சியாக சந்தையில் அறிமுகப்படுத்தி வரும் ஹீரோ நிறுவனத்தில் இருந்து மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் டெஸ்டினி 125 பைக்குகள் பிஎஸ்6 தரத்தில் சந்தையில் இன்று அறிமுகமாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..!

இதில் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 பிஎஸ்6 ஸ்கூட்டரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டான அலாய் வித் ட்ரம் எக்ஸ்ஷோரூமில் ரூ.67,950-ஐ விலையாக பெற்றுள்ளது. மற்ற அலாய் வித் டிஸ்க் விலை ரூ.70,150-ஆகவும், டாப் வேரியண்ட்டான அலாய் வித் டிஸ்க் அண்ட் ப்ரிஸ்மேட்டிக் கலர் விலை ரூ.70,650-ஆகவும் சந்தையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..!

அலாய் வித் டிஸ்க் வேரியண்டிற்கும், அலாய் வித் டிஸ்க் அண்ட் ப்ரிஸ்மேட்டிக் கலர் வேரியண்டிற்கும் வெறும் 500 ரூபாய் மட்டுமே வித்தியாசம். ஹீரோவில் இருந்து தற்போது அறிமுகமாகியுள்ள மற்றொரு வாகனமான ஹீரோ டெஸ்டினி 125 பிஎஸ்6 ஸ்கூட்டர் ரூ.64,310-ஐ ஆரம்ப விலையாக (LX வேரியண்ட்) பெற்றுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..!

இந்த ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டான VX ரூ.66,800 விலையில் இனி விற்பனை செய்யப்படவுள்ளது. டெஸ்டினி 125 பிஎஸ்6 ஸ்கூட்டரில் ஹீரோ அதே 125சிசி என்ஜினை தான் வழங்கியுள்ளது. ஆனால் என்ஜினுடன் ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் மாசு உமிழ்வை குறைக்க புதியதாக பொருத்தப்பட்டுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..!

மேலும் இதனுடன் எக்ஸ்சென்ஸ் தொழிற்நுட்பத்தையும் பெற்றுவரவுள்ள இந்த ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் என்ஜின் அதிகப்பட்சமாக 7000 ஆர்பிஎம்-ல் 9 பிஎச்பி பவரையும், 5500 ஆர்பிஎம்-ல் 10.4 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..!

இந்த பிஎஸ்6 மாடல் அதன் முந்தைய பிஎஸ்4 வெர்சன் ஸ்கூட்டரை விட 11 சதவீதம் அதிக எரிபொருள் திறனையும், 10 சதவீதம் வேகமான முடுக்கத்தையும் வழங்கவல்லது. மேலும் இந்த ஸ்கூட்டரில் உள்ள ஐடியல்-ஸ்டாப்-ஸ்டார்ட் அமைப்பு, ஸ்கூட்டர் எப்போது இயக்கமின்றி உள்ளதோ அப்போது என்ஜினை மொத்தமாக அணைத்துவிடுகிறது.

ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..!

இதுதவிர டெஸ்டினி 125 பிஎஸ்6 ஸ்கூட்டரில் எல்இடியில் இரு ஹெட்லைட்கள் மற்றும் க்ரோம் 3டி லோகோ உள்ளிட்டவையும் புதியதாக பொருத்தப்பட்டுள்ளன. இப்போது உள்ள நிற தேர்வுகளுடன் கூடுதலாக மாட் க்ரே சில்வர் நிறமும் வழங்கப்பட்டுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..!

2020 ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டரின் 125சிசி ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் என்ஜினும் எக்ஸ்சென்ஸ் தொழிற்நுட்பத்தை கொண்டுள்ளது. இந்த பிஎஸ்6 என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றல் 7000 ஆர்பிஎம்-ல் 9 பிஎச்பி பவர் மற்றும் 5500 ஆர்பிஎம்-ல் 10.4 என்எம் டார்க் திறன் ஆகும்.

ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..!

ஏற்கனவே கூறியது மேஸ்ட்ரோ பிஎஸ்6 ஸ்கூட்டர் ப்ரிஸ்மேட்டிக் பெயிண்ட் தொழிற்நுட்ப தேர்வுடன் சந்தைப்படுத்தப்படவுள்ளது. மேலும் டிஸ்க், ப்ரேக் வேரியண்ட்களிலும் விற்பனையாகவுள்ள இந்த ஸ்கூட்டரும் எல்இடி தரத்தில் ஹெட்லைட்களை பெற்றுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 125-க்கு போட்டியாக பிஎஸ்6 ஹீரோ மேஸ்ட்ரோ & டெஸ்டினி 125 விற்பனைக்கு வந்தன..!

இந்த இரு பிஎஸ்6 ஸ்கூட்டர்களும் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் உள்ள ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் ஆர்&டி மைய தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய மாசு உமிழ்வு விதி இந்தியா முழுவதும் அமலாகவுள்ளதால், ஹீரோ நிறுவனத்தில் இருந்து தொடர்ச்சியாக பிஎஸ்6 மோட்டார்சைக்கிள்களாக வெளிவந்த வண்ணம் உள்ளன.

Most Read Articles
English summary
Hero Destini 125 BS6 and Maestro edge 125 BS6 launched price engine update
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X