Just In
- 44 min ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 2 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 5 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 5 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்தது ஹீரோ டெஸ்ட்டினி 125...
ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் கடந்த அக்டோபர் மாத விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவிலேயே மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் திகழ்கிறது. ஆனால் அதன் வெற்றி, பெரும்பாலும் ஆரம்ப நிலை கம்யூட்டர் மோட்டார்சைக்கிள்கள் மூலமே கிடைக்கிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்கூட்டர்களின் விற்பனை அவ்வளவு சிறப்பாக இருப்பதில்லை. குறிப்பாக ஹோண்டா ஆக்டிவா போன்ற ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் விற்பனை மிகவும் குறைவாக உள்ளது.

ஆனால் சமீப காலமாக இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் பிரபலமடைந்து வருகின்றன. இதன்படி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம், 26,714 டெஸ்ட்டினி 125 (Hero Destini 125) ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடுகையில் இது 157.58 சதவீத வளர்ச்சியாகும்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

ஏனெனில் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10,371 ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதே சமயம் நடப்பாண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிட்டால், 35.99 சதவீத வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு செப்டம்பர் மாதம் ஹீரோ நிறுவனம் 19,644 டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கைக்கு பெரும்பாலும் ஸ்பிளெண்டர் வரிசை பைக்குகள், ஹெச்எஃப் டீலக்ஸ், க்ளாமர் மற்றும் பேஷன் உள்ளிட்ட ஆரம்ப நிலை கம்யூட்டர் மோட்டார்சைக்கிள்களையே சார்ந்துள்ளது. ஆனால் பிரீமியம் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களில் இதேபோன்ற வெற்றியை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தால் ருசிக்க முடியவில்லை.

எனினும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்கூட்டர் விற்பனை சமீப காலமாக வேகம் எடுத்து வருவதால், அந்த நிலை மாறி வருவது போல் தெரிகிறது. ஆனால் ஹீரோ டெஸ்ட்டினி 125 சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்திருந்தாலும், அதன் போட்டியாளர்களை விட இந்த ஸ்கூட்டர் மிகவும் பின்தங்கி இருக்கிறது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களின் பட்டியலில் ஹோண்டா ஆக்டிவா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ஹோண்டா நிறுவனம் 2.39 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆக்டிவா ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது! இதே காலகட்டத்தில் டிவிஎஸ் நிறுவனம் 74 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜூபிடர் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டரில், 124.6 சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 9.1 பிஎஸ் பவரையும், 10.4 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 10 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் ட்யூப்லெஸ் டயர்கள் உள்பட பல்வேறு வசதிகளை ஹீரோ டெஸ்ட்டினி 125 பெற்றுள்ளது.

ஹீரோ டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர் கடந்த அக்டோபர் மாதம் சிறப்பான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளதற்கு, சமீபத்தில் முடிவடைந்த பண்டிகை காலம் முக்கியமான காரணமாக இருக்கலாம். இதுதவிர கொரோனா வைரஸ் அச்சத்தால் பொது போக்குவரத்திற்கு பதில் சொந்த வாகனங்களில் பயணம் செய்வதை பலர் பாதுகாப்பானதாக கருதுவதும் இதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.