ஹீரோ எலக்ட்ரிக்கின் புதிய நைக்ஸ்-எச்எக்ஸ் கமர்ஷியல் ஸ்கூட்டர் அறிமுகம்! ஆரம்ப விலை ரூ.64,640

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் கமர்ஷியல் பயன்பாடுகளுக்கு ஏற்ற புதிய நைக்ஸ்-எச்எக்ஸ் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கமர்ஷியல் பயன்பாட்டு வாகனத்தை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹீரோ எலக்ட்ரிக்கின் புதிய நைக்ஸ்-எச்எக்ஸ் கமர்ஷியல் ஸ்கூட்டர் அறிமுகம்! ஆரம்ப விலை ரூ.64,640

புதிய ஹீரோ எலக்ட்ரிக் நைக்ஸ்-எச்எக்ஸ் இ-ஸ்கூட்டரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.64,640 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிராண்டின் புதிய ‘எச்எக்ஸ்' சீரிஸில் ஒரு பகுதியாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 0.6 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது.

ஹீரோ எலக்ட்ரிக்கின் புதிய நைக்ஸ்-எச்எக்ஸ் கமர்ஷியல் ஸ்கூட்டர் அறிமுகம்! ஆரம்ப விலை ரூ.64,640

1.53kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்புடன் வழங்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் மோட்டாரின் உதவியுடன் ஸ்கூட்டரை அதிகப்பட்சமாக 42kmph என்ற வேகத்தில் இயங்க முடியும். இந்த புதிய ஸ்கூட்டரின் ரேஞ்ச் 82கிமீ-ல் இருந்து 210கிமீ வரையில் சிங்கிள் சார்ஜில் இயங்கும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் 210கிமீ ரேஞ்ச் நைக்ஸ்-எச்எக்ஸ் ஸ்கூட்டரின் பேட்டரி அமைப்புடன் நீக்கக்கூடிய தொழிற்நுட்பத்தை பொருத்தினால் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தங்களது வணிகத்திற்கு ஏற்றபடி இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 10 விதமான வழிகளில் கஸ்டமைஸ்ட் செய்து கொள்ளலாம்.

ஹீரோ எலக்ட்ரிக்கின் புதிய நைக்ஸ்-எச்எக்ஸ் கமர்ஷியல் ஸ்கூட்டர் அறிமுகம்! ஆரம்ப விலை ரூ.64,640

அதேபோல் 4-நிலைகளில் ஸ்மார்ட்போன் இணைப்பை பெற்றுவந்துள்ள இந்த ஸ்கூட்டரில் பொருட்களை வைப்பதற்கு வெவ்வேறு விதமான தீர்வுகளை காண முடியும். இந்த ‘தேவைக்கேற்ப' ஸ்மார்ட்போன் இணைப்பு எளிய புளூடூத்-இல் இருந்து ‘உயர்நிலை' தொலைநிலை கண்காணிப்பு மற்றும் கண்டறிதல் வரை உள்ளது.

ஹீரோ எலக்ட்ரிக்கின் புதிய நைக்ஸ்-எச்எக்ஸ் கமர்ஷியல் ஸ்கூட்டர் அறிமுகம்! ஆரம்ப விலை ரூ.64,640

அதிக-டார்க் திறன் கொண்ட ஸ்கூட்டர் மாடல் எனப்படும் புதிய நைக்ஸ்-எச்எக்ஸ் ஸ்கூட்டரின் இயக்கம் சமச்சீராக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இவை மட்டுமில்லாமல் ரீஜெனரேட்டிவ் ப்ரேக்கிங் உடன் காம்பி-ப்ரேக் சிஸ்டத்தையும் இந்த ஸ்கூட்டர் கொண்டுள்ளதால் அதிக சுமைகளுடனும் மென்மையான பயணத்தை பெறலாம்.

புதிய நைக்ஸ்-எச்எக்ஸ் கமர்ஷியல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகத்தின்போது ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஒ சோகிந்தர் கில் கூறுகையில், "ஒவ்வொரு வணிகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட இயக்க தீர்வு தேவை, " ஒரு அளவு" அனைவருக்கும் பொருத்தமாக இருக்க முடியாது.

ஹீரோ எலக்ட்ரிக்கின் புதிய நைக்ஸ்-எச்எக்ஸ் கமர்ஷியல் ஸ்கூட்டர் அறிமுகம்! ஆரம்ப விலை ரூ.64,640

புதிய நைக்ஸ்-எச்எக்ஸ் சீரிஸ் ஒரு நெகிழ்வான, மட்டு மற்றும் பல்துறை திறன் வாய்ந்த வாடிக்கையாளரின் பெரும்பாலான தேவைகளுக்கு பதிலளிக்கக்கூடியது. இந்த ஸ்கூட்டரின் மூலம் குறைவான எரிபொருள் செலவு, அதிக சுமை சுமக்கும் திறன், நகரங்களுக்கு இடையேயான பயணம், தொலை பைக் முடக்கிகள் போன்ற ஸ்மார்ட் இணைப்பு அம்சங்களை பெறலாம்" என கூறினார்.

ஹீரோ எலக்ட்ரிக் பிராண்ட் கடந்த சில மாதங்களாக தனது தயாரிப்பு லைன்அப்-ஐ விரிவுப்படுத்த தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதன் வெளிபாடே இந்த புதிய கமர்ஷியல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகமாகும். இந்த ஸ்கூட்டர் 210கிமீ ரேஞ்சை வழங்கக்கூடியது என கூறப்படுவது உண்மையில் எங்களை கவர்ந்துவிட்டது.

Most Read Articles

English summary
Hero Electric NYX-HX Commercial e-Scooter Launched With 210Km Range: Prices Start At Rs 64,640
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X