மலிவு விலை ஹீரோ ஃப்ளாஷ் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்..! கூடுதல் சிறப்பு தள்ளுபடியும் அறிவிப்பு..!

ஹீரோ நிறுவனம் அதன் மலிவு விலை மின்சார ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் பக்கம் மக்களை இழுக்கும்விதமாக அதற்கு சிறப்பு தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மலிவு விலை ஹீரோ ஃப்ளாஷ் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்..! கூடுதல் சிறப்பு தள்ளுபடியும் அறிவிப்பு..!

மின் வாகனங்களுக்கான எதிர்பார்ப்பும், தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. ஆகையால், இதற்கு முன்பு நாம் கேள்விப்படாத நிறுவனங்கள்கூட தற்போது அதன் மின்வாகனங்களை இந்தியாவில் களமிறக்கி வருகின்றன.

இதனால், ஆரம்பநிலையில் இருந்த பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்களின் பெயர்கள் தற்போதே வெளியுலகிற்கு தெரிய ஆரம்பித்துள்ளது.

மலிவு விலை ஹீரோ ஃப்ளாஷ் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்..! கூடுதல் சிறப்பு தள்ளுபடியும் அறிவிப்பு..!

அவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் இதற்கு முன்பாக மின் சாதனங்கள் சார்ந்த உற்பத்தியைச் செய்தவையாக இருக்கின்றன. இவை, தற்போதைய இந்தியாவின் மிக முக்கியமான தேவைகளில் ஒன்றாக மாறியிருக்கும் மின்வாகனங்களைத் தயாரிக்க ஆரம்பித்துள்ளன.

அவ்வாறு, ஆரம்பநிலை உற்பத்தி நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட மின்வாகனங்கள் சமீபகாலமாக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

மலிவு விலை ஹீரோ ஃப்ளாஷ் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்..! கூடுதல் சிறப்பு தள்ளுபடியும் அறிவிப்பு..!

இதுபோன்று, ஆரம்பநிலை வாகன உற்பத்தி நிறுவனங்களே மின்வாகன சந்தையில் இறங்கி அடித்துக் கொண்டிருக்கும் வேலையில், ஜாம்பவான் நிறுவனங்களும் தங்களின் பங்காக எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யத் தொடங்கியுள்ளன.

மலிவு விலை ஹீரோ ஃப்ளாஷ் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்..! கூடுதல் சிறப்பு தள்ளுபடியும் அறிவிப்பு..!

அந்தவகையில், அண்மையில் பஜாஜ் நிறுவனம் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்கூட்டர் செக்மெண்டில் எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்தது. சேத்தக் என்றழைக்கப்படும் இந்த ஸ்கூட்டர் தற்போது ஏத்தர் மின்சார ஸ்கூட்டர்களுக்கு போட்டியளிக்கின்ற வகையில் களமிறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இருசக்கர வாகன உலகின் ஜாம்பவனான ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம் அதன் ப்ளாஷ் பிராண்டில் மலிவு விலை மின்சார இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.

மலிவு விலை ஹீரோ ஃப்ளாஷ் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்..! கூடுதல் சிறப்பு தள்ளுபடியும் அறிவிப்பு..!

அனைத்து ரக வாகன பிரியர்களையும் கவர்கின்ற வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஃப்ளாஷ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 29,990 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இது இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ரூ. 32,710 என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

மலிவு விலை ஹீரோ ஃப்ளாஷ் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்..! கூடுதல் சிறப்பு தள்ளுபடியும் அறிவிப்பு..!

இந்த புத்தம் புதிய மலிவு விலை மின்சார ஸ்கூட்டரை ஹீரோ நிறுவனம், நாடு முழுவதும் உள்ள 615 டச் பாயிண்டுகள் மூலம் விற்பனைச் செய்ய திட்டமிட்டுள்ளது.

மேலும், அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் கவர்கின்ற வகையில் இந்த மின்சார ஸ்கூட்டருக்கு கூடுதல் சிறப்பு தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மலிவு விலை ஹீரோ ஃப்ளாஷ் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்..! கூடுதல் சிறப்பு தள்ளுபடியும் அறிவிப்பு..!

அதன்படி, 7 ஆயிரத்து 90 ரூபாய் இந்த ஃப்ளாஷ் மின்சார ஸ்கூட்டருக்கு தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்துடன், பேடிஎம் சலுகையாக ரூ. 10,500 ஃப்ளாஷின் லீட்-ஆசிட் மற்றும் அனைத்து லித்தியம் அயன் பேட்டரி மாடல்களுக்கும் வழங்கப்பட இருப்பதாக அது அறிவித்துள்ளது.

மலிவு விலையைக் கொண்ட மின்சார ஸ்கூட்டரில் பல்வேறு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மலிவு விலை ஹீரோ ஃப்ளாஷ் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்..! கூடுதல் சிறப்பு தள்ளுபடியும் அறிவிப்பு..!

குறிப்பாக, எல்இடி மின்சார ஹெட்லைட், செல்போன் சார்ஜிங் வசதி மற்றும் அதிநவீன பிரேக்கிங் திறன் உள்ளிட்டவை முக்கிய சிறப்பம்சங்களாக காட்சியளிக்கின்றன.

முற்றிலும் நகர வாசிகளின் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த மின்சார ஸ்கூட்டரில் 48 வோல்ட் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 50 கிமீ தூரம் வரை செல்ல முடியும்.

மலிவு விலை ஹீரோ ஃப்ளாஷ் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்..! கூடுதல் சிறப்பு தள்ளுபடியும் அறிவிப்பு..!

அதேசமயம், இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய அதிகபட்சமாக 8 மணி நேரங்கள் ஆகும். இந்த ஸ்கூட்டர் ஒட்டுமொத்தமாக 69 கிலோ எடையைக் கொண்டுள்ளது. ஆகையால், இளைஞர்கள் மட்டுமின்றி பெண்களும் இதனை சுலபமாக இயக்கலாம்.

இந்த ஸ்கூட்டரை 2020ம் ஆண்டிற்கான ஆட்டோ எக்ஸ்போவில் மீண்டுமொருமுறை காட்சிப்படுத்த ஹீரோ எலெக்ட்ரிக் திட்டமிட்டிருக்கின்றது.

மலிவு விலை ஹீரோ ஃப்ளாஷ் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்..! கூடுதல் சிறப்பு தள்ளுபடியும் அறிவிப்பு..!

இந்தியாவின் எரிபொருள் வாகனங்களுக்கு எதிராக மின்வாகன பயன்பாட்டு ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. இதற்காக, நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் தனித்துவம் வாய்ந்த சலுகையை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், மலிவு விலையில் ஹீரோ எலெக்ட்ரிக் மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்திருப்பது நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

English summary
Hero Electric Launches Affordable Price Flash e-Scooter In India. Read In Tamil.
Story first published: Monday, January 20, 2020, 18:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X