இந்தியாவில் வேகமெடுக்கும் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை... கல்லா கட்டும் ஹீரோ எலக்ட்ரிக்

அதி-வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த நான்கு மாதங்களில், அதாவது 2021ஆம் நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் சந்தையில் பதிவு செய்த விற்பனை எண்ணிக்கைகள் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் வேகமெடுக்கும் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை... கல்லா கட்டும் ஹீரோ எலக்ட்ரிக்

தற்போது வெளிவந்துள்ள லிஸ்ட்டின்படி பார்க்கும்போது, மொத்தம் 1,113 யூனிட்கள் விற்பனையுடன் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த எண்ணிக்கை, கடந்த ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்நிறுவனம் விற்பனை செய்த தயாரிப்புகளின் எண்ணிக்கை ஆகும்.

இந்தியாவில் வேகமெடுக்கும் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை... கல்லா கட்டும் ஹீரோ எலக்ட்ரிக்
EV Companies April-20 May-20 June-20 July-20 Total
Hero Electric 36 200 480 397 1,113
Okinawa 27 90 356 405 878
Ather 0 143 157 138 438
Ampere 4 44 155 195 398
Revolt 0 0 101 121 222

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு அடுத்தடுத்த நிலைகளில் 878 யூனிட்கள் விற்பனையுடன் ஒகினாவா ஆட்டோ டெக்-கும், 438 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து ஏத்தர் எனர்ஜி நிறுவனமும் உள்ளது. நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் முறையே ஆம்பியர் மற்றும் ரிவோல்ட் நிறுவனங்கள் உள்ளன. மொத்தமாக 3,088 அதி-வேக ஸ்கூட்டர்கள் கடந்த நான்கு மாதங்களில் விற்பனையாகி உள்ளன.

இந்தியாவில் வேகமெடுக்கும் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை... கல்லா கட்டும் ஹீரோ எலக்ட்ரிக்

அதி-வேக ஸ்கூட்டர் மட்டுமில்லாமல் குறை-வேக ஸ்கூட்டர் பிரிவிலும் பெரிய அளவில் வளர்ச்சியை அடைந்து மொத்த விற்பனையில் 45 சதவீத எண்ணிக்கையை ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் பெற்றுள்ளது. இதன் மூலம் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் விற்பனையில் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் பங்கு எவ்வளவு பெரியதாக மாறியுள்ளது என்பதை நீங்கள் அறியலாம்.

இந்தியாவில் வேகமெடுக்கும் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை... கல்லா கட்டும் ஹீரோ எலக்ட்ரிக்

இந்த நான்கு மாதங்களில் சுமார் 40 ஆயிர வாடிக்கையாளர்கள் தங்களது தயாரிப்புகளை வாங்க இணையத்தளம் மூலமாக முன் வந்ததாக இந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாகவே இந்நிறுவனம் முன்பை காட்டிலும் 6 மடங்கு அதிக விற்பனை எண்ணிக்கையை பெற்றுள்ளது.

இந்தியாவில் வேகமெடுக்கும் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை... கல்லா கட்டும் ஹீரோ எலக்ட்ரிக்

ஊரடங்கு காலத்திலும் இத்தகைய வளர்ச்சியை அடைந்தது குறித்து ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஒ சோகிந்தர் கில் கூறுகையில், எங்களது விரைவான சிந்தனை, தைரியமான முடிவுகள் மற்றும் பணம் செலுத்துவதற்கான வெவ்வேறு முறைகள் உள்ளிட்டவை ஊரடங்கில் எங்களது வணிகத்தை பெரிய அளவில் பாதிக்காமல் பாதுக்காத்தன.

இந்தியாவில் வேகமெடுக்கும் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை... கல்லா கட்டும் ஹீரோ எலக்ட்ரிக்

இந்த புதிய அணுகுமுறையே எங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு பெரிய அளவில் உறுதுணையாக இருந்தது. இந்த ஊரடங்கு காலகட்டத்திலும் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஏப்ரல் - ஜூலையில், அனைத்து வகைகளிலும், அதிக எண்ணிக்கையிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையானது, கடினமாக உழைக்க வேண்டும் என்ற எங்களது உறுதிப்பாட்டின் சான்றாகும்.

இந்தியாவில் வேகமெடுக்கும் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை... கல்லா கட்டும் ஹீரோ எலக்ட்ரிக்

2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்காக எங்களிடம் நிறைய திட்டங்கள் உள்ளன. மேலும் நாங்கள் நிர்ணயித்ததை அடைவதிலிருந்து எதையும் தடுக்க இந்த 2020ஆம் ஆண்டை நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை. எங்கள் பணி தொடரும் என தெரிவித்தார்.

இந்தியாவில் வேகமெடுக்கும் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை... கல்லா கட்டும் ஹீரோ எலக்ட்ரிக்

ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான சந்தா திட்டங்களுக்காக ஆட்டோவெர்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிறுவனத்தின் சந்தா திட்டங்கள் மிகவும் குறைவாக மாதத்திற்கு ரூ.2,999 என்பதில் இருந்து ஆரம்பிக்கிறது.

Most Read Articles
English summary
Hero Electric Is The Market Leader For High-Speed Electric Two-Wheelers In First Four Months Of FY'21 Table Code
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X