ரூ.72 ஆயிரத்தில் ஹீரோ க்ளாமர் பிளேஸ் எடிசன் அறிமுகம்... பண்டிகை காலத்திற்கான ஹீரோவின் ஸ்பெஷல் எடிசன்

க்ளாமர் மோட்டார்சைக்கிளின் புதிய பிளேஸ் எடிசனை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த பிளேஸ் எடிசனை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ரூ.72 ஆயிரத்தில் ஹீரோ க்ளாமர் பிளேஸ் எடிசன் அறிமுகம்... பண்டிகை காலத்திற்கான ஹீரோவின் ஸ்பெஷல் எடிசன்

வரப்போகும் பண்டிகை காலத்திற்கான ஹீரோ நிறுவனத்தின் ஸ்பெஷல் எடிசன் ஒன்றொன்றாக வெளிவர துவங்கியுள்ளன. இதன்படி க்ளாமர் மோட்டார்சைக்கிளின் புதிய பிளேஸ் ஸ்பெஷல் எடிசன் ரூ.72,200 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ரூ.72 ஆயிரத்தில் ஹீரோ க்ளாமர் பிளேஸ் எடிசன் அறிமுகம்... பண்டிகை காலத்திற்கான ஹீரோவின் ஸ்பெஷல் எடிசன்

வழக்கமான ஹீரோ க்ளாமர் பைக்கின் ஆரம்ப நிலை ட்ரம் ப்ரேக் வேரியண்ட்டின் விலை ரூ.71,000 ஆகவும், டிஸ்க் ப்ரேக் வேரியண்ட்டின் விலை ரூ.74,500 ஆகவும் உள்ளது. புதிய க்ளாமர் பிளேஸ் எடிசன் ஸ்பெஷல் மேட் வெர்னியர் க்ரே நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

ரூ.72 ஆயிரத்தில் ஹீரோ க்ளாமர் பிளேஸ் எடிசன் அறிமுகம்... பண்டிகை காலத்திற்கான ஹீரோவின் ஸ்பெஷல் எடிசன்

அதேநேரம் பைக்கின் பெட்ரோல் டேங்கில் இருந்து டெயில்லேம்ப் வரையிலும், முன்பக்க ஹெட்லேம்பிற்கு மேற்புறத்திலும் ஒளிரும் பச்சை நிற கிராஃபிக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பெயிண்ட் அமைப்பு உண்மையில் கருப்பு நிற என்ஜின் மற்றும் அலாய் சக்கரங்களுக்கு மிகவும் எடுப்பாக உள்ளது.

ரூ.72 ஆயிரத்தில் ஹீரோ க்ளாமர் பிளேஸ் எடிசன் அறிமுகம்... பண்டிகை காலத்திற்கான ஹீரோவின் ஸ்பெஷல் எடிசன்

அலாய் சக்கரங்கள் மற்றும் முன்பக்கத்தில் டிஸ்க் ப்ரேக் என்று மட்டுமில்லாமல், தற்போதைய க்ளாமரின் டாப் வேரியண்ட்டிலும் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் கூடுதலாக ஹேண்டில்பாரில் யுஎஸ்பி சார்ஜரையும் பெற்று வந்துள்ளது. புதிய க்ளாமர் பிளேஸ் எடிசன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளது.

ரூ.72 ஆயிரத்தில் ஹீரோ க்ளாமர் பிளேஸ் எடிசன் அறிமுகம்... பண்டிகை காலத்திற்கான ஹீரோவின் ஸ்பெஷல் எடிசன்

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட க்ளாமர் பைக் மாடலுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதாகவும், ஹீரோ பிராண்டை எதிர்பார்த்துவரும் இளம் தலைமுறையினரை கவர்வதற்காக இந்த ஸ்பெஷல் எடிசன் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரூ.72 ஆயிரத்தில் ஹீரோ க்ளாமர் பிளேஸ் எடிசன் அறிமுகம்... பண்டிகை காலத்திற்கான ஹீரோவின் ஸ்பெஷல் எடிசன்

ஹீரோ க்ளாமர் பிளேஸில் வழக்கமான 124சிசி ஏர்-கூல்டு, ஃப்யூல்-இன்ஜெக்டட் என்ஜின் தான் வழங்கப்பட்டுள்ளது. பிஎஸ்6 தரத்தில் வழங்கப்படுகின்ற இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 10.7 பிஎச்பி மற்றும் 10.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. க்ளாமர் மோட்டார்சைக்கிள் ஆட்டோ சாய்ல் தொழிற்நுட்பத்திற்கு கூடுதலாக ஹீரோவின் ஐ3எஸ் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழிற்நுட்பத்துடன் விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.72 ஆயிரத்தில் ஹீரோ க்ளாமர் பிளேஸ் எடிசன் அறிமுகம்... பண்டிகை காலத்திற்கான ஹீரோவின் ஸ்பெஷல் எடிசன்

சமீபத்தில் பிஎஸ்6 தரத்திற்கு அப்கிரேட் செய்யப்பட்டிருந்த இந்த 125சிசி மோட்டார்சைக்கிள் பிஎஸ்4 வெர்சனை காட்டிலும் நீளமான சஸ்பென்ஷன் ட்ராவல், மைலேஜ் இண்டிகேட்டர் உடன் டிஜி-அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் பிரகாசமான ஹெட்லேம்ப் உள்ளிட்டவற்றை கூடுதல் அம்சங்களாக ஏற்றிருந்தது.

ரூ.72 ஆயிரத்தில் ஹீரோ க்ளாமர் பிளேஸ் எடிசன் அறிமுகம்... பண்டிகை காலத்திற்கான ஹீரோவின் ஸ்பெஷல் எடிசன்

விற்பனையில் ஹீரோ க்ளாமருக்கு போட்டியாக ஹோண்டா எஸ்பி125 மற்றும் பஜாஜ் பல்சர் 125 உள்ளிட்ட பைக்குகள் உள்ளன. இருப்பினும் முன்பே கூறியதுபோல், ஹீரோ க்ளாமருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை மேலும் அதிகரிக்கவே இந்த ஸ்பெஷல் எடிசன் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Most Read Articles
English summary
Hero Glamour Blaze Edition Launch India
Story first published: Tuesday, October 13, 2020, 1:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X