ஹீரோ ஸ்கூட்டர்களின் விளம்பரத்தில் பிரபல நடிகர்! தீபாவளியை முன்னிட்டு வெளியீடு

தீபாவளி உள்ளிட்ட வரப்போகும் பண்டிகை நாட்களை முன்னிட்டு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் ஸ்கூட்டர் மாடல்களை விளம்பரப்படுத்தும் முயற்சியாக இரு தொலைக்காட்சி கமர்ஷியல் (டிவிசி) வீடியோக்களை புதியதாக வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹீரோ ஸ்கூட்டர்களின் விளம்பரத்தில் பிரபல நடிகர்! தீபாவளியை முன்னிட்டு வெளியீடு

ஹீரோ மோட்டோகார்பின் இந்த புதிய டிவிசி வீடியோகளில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிளஷர் ப்ளஸ் ஸ்பெஷல் எடிசன் உள்பட இந்தியாவில் விற்பனையில் உள்ள இந்நிறுவனத்தின் முன்னணி ஸ்கூட்டர் மாடல்கள் அனைத்தும் காட்டப்பட்டுள்ளன.

ஹீரோ ஸ்கூட்டர்களின் விளம்பரத்தில் பிரபல நடிகர்! தீபாவளியை முன்னிட்டு வெளியீடு

ஃப்யுல் இன்ஜெக்ட் சிஸ்டத்துடன் எக்ஸ்சென்ஸ் தொழிற்நுட்பத்துடன் வழங்கப்படும் ஹீரோ ஸ்கூட்டர்களின் இந்த டிவிசி வீடியோக்கள் முழுக்க முழுக்க அவற்றை வாடிக்கையாளர்கள் மத்தியில் கவனத்தை பெற வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக வெளியிடப்பட்டுள்ளன.

ஹீரோ ஸ்கூட்டர்களின் விளம்பரத்தில் பிரபல நடிகர்! தீபாவளியை முன்னிட்டு வெளியீடு

இதன் காரணமாக இந்த வீடியோகளில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். ஒரு வீடியோவில் போலீஸ் அதிகாரியாக வரும் ரன்பீர் அதில் தனது மேல் அதிகாரியை ஹீரோ ஸ்கூட்டரை வாங்க வலியுறுத்துகிறார். இதற்காக சில ஹீரோ ஸ்கூட்டர் உரிமையாளர்களிடம் இவர்கள் உரையாடுவதுபோல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த டிவிசி வீடியோவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் ஸ்கூட்டர்களில் கொண்டுவந்துள்ள ஃப்யுல்-இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் ஹீரோ எக்ஸ்சென்ஸ் தொழிற்நுட்பம் போன்ற டெக்னிக்கல் அப்டேட்கள் தெளிவாக எடுத்து கூறப்பட்டுள்ளன.

ஹீரோ ஸ்கூட்டர்களின் விளம்பரத்தில் பிரபல நடிகர்! தீபாவளியை முன்னிட்டு வெளியீடு

அதுமட்டுமில்லாமல் ஸ்கூட்டர்களின் ஸ்டைல், மைலேஜ், செயல்திறன் உள்ளிட்டவையும் ஹைலைட்டாக சுட்டி காட்டப்பட்டுள்ளன. மற்றொரு வீடியோவில் சமீபத்திய அறிமுகமான பிளஷர்+ பிளாட்டினம் ஸ்பெஷல் எடிசனை தவிர்த்து வேறெந்த ஸ்கூட்டரும் காட்டப்படவில்லை. இதிலும் ரன்பீர் கபூர் வருகிறார்.

ஹீரோ பிளஷர்+ பிளாட்டினம் ஸ்கூட்டரின் விலை ரூ.60,950 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கருப்பு & பழுப்பு என்ற இரட்டை நிறத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த 110சிசி ஸ்கூட்டரின் பிஎஸ்6 இணக்கான ஃப்யூல் இன்ஜெக்டட், ஏர்-கூல்டு என்ஜினிலும் ‘எக்ஸ்சென்ஸ் தொழிற்நுட்பம்' வழங்கப்பட்டுள்ளது.

ஹீரோ ஸ்கூட்டர்களின் விளம்பரத்தில் பிரபல நடிகர்! தீபாவளியை முன்னிட்டு வெளியீடு

அதிகப்பட்சமாக 7,000 ஆர்பிஎம்-ல் 8 பிஎச்பி மற்றும் 5,500 ஆர்பிஎம்-ல் 8.7 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இந்த என்ஜின் உள்ளது. அதுமட்டுமில்லாமல் பிஎஸ்6 அப்கிரேடினால் பிஎஸ்4 வெர்சனை காட்டிலும் 10 சதவீதம் கூடுதலான ஆக்ஸலரேஷன் மற்றும் 10 சதவீதம் கூடுதலான மைலேஜை இந்த என்ஜின் வழங்கும்.

ஹீரோ ஸ்கூட்டர்களின் விளம்பரத்தில் பிரபல நடிகர்! தீபாவளியை முன்னிட்டு வெளியீடு

இந்த ஸ்பெஷல் எடிசன் மட்டுமில்லாமல் மேஸ்ட்ரோ எட்ஜ்125 ஸ்கூட்டரின் புதிய ‘ஸ்டீல்த்' எடிசனையும் ரூ.72,950 என்ற விலையில் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்திருந்தது. தொலைக்காட்சி விளம்பரங்களில் குறிப்பாக தனது ஸ்கூட்டர் மாடல்களை விளம்பரப்படுத்துவதை ஹீரோ நிறுவனம் கடந்த சில மாதங்களாக தொடர் கதையாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Hero Destini, Maestro, Pleasure Scooters In New TVCs Ft. Ranbir Kapoor
Story first published: Tuesday, October 20, 2020, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X