ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 ராலி கிட் அறிமுகம்... விலை மற்றும் முக்கிய விபரங்கள்

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கான ராலி கிட் ஆக்சஸெரீகளுக்கான விலை விபரம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பான விரிவான விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 ராலி கிட் அறிமுகம்... விலை மற்றும் முக்கிய விபரங்கள்

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் கடந்த ஆண்டு மே மாதம் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 என்ற ஆஃப்ரோடு பைக் மாடலை அறிமுகப்படுத்தியது. அறிமுகம் செய்யப்பட்டது முதல் இந்த பைக் விற்பனையில் ஓரளவு நல்ல எண்ணிக்கையையும் பதிவு செய்து வருகிறது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 ராலி கிட் அறிமுகம்... விலை மற்றும் முக்கிய விபரங்கள்

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த பைக்கை ராலி பந்தயங்களில் பயன்படுத்தும் வகையிலான விசேஷ ஆக்சஸெரீகள் அடங்கிய பேக்கேஜை ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகப்படுத்தி உள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 ராலி கிட் அறிமுகம்... விலை மற்றும் முக்கிய விபரங்கள்

கடந்த ஆண்டு இத்தாலியிலுள்ள மிலன் நகரில் நடந்த ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் ராலி கிட் பொருத்தப்பட்ட மாடல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அப்போதே, இது பெரும் ஆவலை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், இந்த பிரத்யேக ஆக்சஸெரீ பேக்கிற்கான விலை விபரம் வெளியிடப்பட்டு இருக்கிறது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 ராலி கிட் அறிமுகம்... விலை மற்றும் முக்கிய விபரங்கள்

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கான ராலி கிட்டிற்கு ரூ.38,000 விலையாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வரும் மார்ச் முதல் குறிப்பிட்ட ஹீரோ மோட்டோகார்ப் டீலர்களில் மட்டுமே இந்த பிரத்யேக கிட் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 ராலி கிட் அறிமுகம்... விலை மற்றும் முக்கிய விபரங்கள்

இந்த பிரத்யேக ஆக்சஸெரீ கிட்டில், முன்புறத்தில் 250 மிமீ லாங் டிராவல் அமைப்புடைய ஃபோர்க்குகளும், பின்புறத்தில் 220 மிமீ லாங் டிராவல் சஸ்பென்ஷனும் முக்கிய விஷயமாக இடம்பெற்றுள்ளது. இது முழுமையான அட்ஜெஸ்ட்டபிள் வசதியை அளிக்கும். சாதாரண மாடலில் முன்புறத்தில் 190 மிமீ ஃபோர்க்குகளும் மற்றும் பின்புறத்தில் 170 மிமீ சஸ்பென்ஷன்களும் பயன்படுத்தப்படுகின்றன.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 ராலி கிட் அறிமுகம்... விலை மற்றும் முக்கிய விபரங்கள்

புதிய சஸ்பென்ஷன்கள் மூலமாக இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 275 மிமீ ஆக அதிகரித்துள்ளது. ஹேண்டில்பார் மற்றும் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். நீளமான சைடு ஸ்டான்டு அமைப்பும் கொடுக்கப்படுகிறது. ஓட்டுபவர் காலணிகள் மூலமாக எளிதாக பைக்கை கட்டுப்படுத்தும் வகையில், பெரிய கியர் லிவர் மற்றும் பிரேக் பெடல்களும் கொடுக்கப்படுகின்றன.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 ராலி கிட் அறிமுகம்... விலை மற்றும் முக்கிய விபரங்கள்

சாதாரண மாடலில் டியூவல் ஸ்போர்ட் சியட் டயர்கள் கொடுக்கப்படும் நிலையில், இந்த ராலி கிட்டில் மேக்சிஸ் ராலி டயர்கள் வழங்கப்படுகின்றன. இதனால், மோசமான சாலைகளை எளிதாகவும், பாதுகாப்பாகவும் கடந்து வருவதற்கு இது உதவும்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 ராலி கிட் அறிமுகம்... விலை மற்றும் முக்கிய விபரங்கள்

கடந்த ஆண்டு ஐக்மா கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 ராலி ரேஸ் மாடலில் அக்ரபோவிக் சைலென்சர் பொருத்தப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது இந்த கிட்டில் அது இடம்பெறவில்லை. இந்த பைக்கிற்கு விசேஷ சைலென்சரை வழங்கும் முயற்சிகள் நடந்து வருவதாக ஹீரோ தெரிவிக்கிறது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 ராலி கிட் அறிமுகம்... விலை மற்றும் முக்கிய விபரங்கள்

எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லை. இந்த பைக்கில் 199.6 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 18.1 பிஎச்பி பவரையும், 17.1 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 ராலி கிட் அறிமுகம்... விலை மற்றும் முக்கிய விபரங்கள்

இந்த ராலி ரேஸ் கிட் ஆக்சஸெரீகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ராலி ரேஸ் பிரிவின் ஆலோசனைகளின் அடிப்படையில் ஹீரோ பொறியாளர்கள் உருவாக்கி இருக்கின்றனர்.

Most Read Articles
English summary
Hero MotoCorp has launched special Rally Kit for XPulse bike in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X