ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 ஸ்கூட்டர் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

கவர்ச்சிகர அம்சங்களுடன் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டரின் பிஎஸ்6 மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. படங்களுடன் கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 ஸ்கூட்டர் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

இந்தியாவில் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனால், இந்த சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, 110சிசி ரகத்திலான மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இந்த சந்தையில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்தான் நம்பர்-1 இடத்தில் இருந்து வருவதுடன் யாரும் எட்ட முடியாத விற்பனை எண்ணிக்கையுடன் வலுவான சந்தையை தக்க வைத்து வருகிறது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 ஸ்கூட்டர் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் மார்க்கெட்டை உடைக்க பல்வேறு நிறுவனங்களும் முயற்சி செய்து வருகின்றன. அந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் இந்த சந்தையில் மேஸ்ட்ரோ எட்ஜ் 110 என்ற மாடலை வைத்துள்ளது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 ஸ்கூட்டர் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

இந்த சூழலில், பிஎஸ்-6 தரத்திற்கு இணையான எஞ்சினுடன் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது. டிசைனில் மாற்றங்கள் இல்லை என்றாலும், புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் மூலமாக புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 ஸ்கூட்டர் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

இந்த ஸ்கூட்டர் கவர்ச்சிரமான ஸ்டிக்கர் வேலைப்பாடுகளுடன் பியர்ல் ஃபேட்லெஸ் ஒயிட், மிட்நைட் புளூ, கேண்டி பிளேஸிங் ரெட், டெக்னோ புளூ, பாந்தர் பிளாக் மற்றும் சீல் சில்வர் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 ஸ்கூட்டர் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஸ்கூட்டரின் பிஎஸ்-4 மாடலில் பயன்படுத்தப்பட்ட அதே 110.9சிசி எஞ்சின் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் சேர்க்கப்பட்டு பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் XSens என்ற நவீன தொழில்நுட்பத்துடன் அதிக எரிபொருள் சிக்கனத்தையும், செயல்திறனையும் வழங்கும் வித்ததில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 ஸ்கூட்டர் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 மாடலின் எஞ்சின் 8 பிஎச்பி பவரையும், 8.75 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பழைய பிஎஸ்4 எஞ்சின் அளவுக்கான செயல்திறனையும், எரிபொருள் சிக்கனத்தையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 ஸ்கூட்டர் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 ஸ்கூட்டரில் ஹாலஜன் பல்புகளுடன் ஹெட்லைட் க்ளஸ்ட்டர், எல்இடி டெயில் லைட், டியூவல் டோன் ரியர் வியூ மிரர்கள், வெளிப்புறத்திலிருந்து எரிபொருள் நிரப்புவதற்கு வசதியான பெட்ரோல் டேங்க் மூடி அமைப்பு, செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சைடு ஸ்டான்டு இண்டிகேட்டர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 ஸ்கூட்டர் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

புதிய ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 மாடலில் யுஎஸ்பி சார்ஜர், பூட் லைட், டைமண்ட் கட் அலாய் வீல்கள், கவரும் டிசைனிலான சைலென்சர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 ஸ்கூட்டர் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

இந்த ஸ்கூட்டர் 1,843 மிமீ நீளமும், 715 மிமீ அகலமும், 1,188 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. 1,261 மிமீ வீல் பேஸ் நீளம் கொண்டுள்ளது. தரையிலிருந்து 775 மிமீ இருக்கை உயரம் கொண்டுள்ளது. 112 கிலோ எடையுடன் 5 லிட்டர் எரிபொருள் கலன் பெற்றிருக்கிறது. இது இருபாலருக்குமான ஸ்கூட்டர் மாடலாக இருக்கும்.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 ஸ்கூட்டர் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் சிங்கிள் சைடு ஷாக் அப்சார்பரும் உள்ளது. இரண்டு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகளும், காம்பி பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்புறத்தில் 12 அங்குல சக்கரமும், பின்புறத்தில் 10 அங்குல சக்கரமும் உள்ளன. ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 பிஎஸ்6 ஸ்கூட்டர் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!

இந்த ஸ்கூட்டர் மாடல் மிக விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா ஆக்டிவா 6ஜி, டிவிஎஸ் ஜுபிடர் பிஎஸ்6 உள்ளிட்ட மாடல்களுக்கு நேரடியாக போட்டியாக இருக்கும். ரூ.6,000 கூடுதல் விலையில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Hero MotoCrop has unveiled the new Maestro Edge 110 BS6 scooter in the Indian market. The Maestro Edge 110 is expected to be launch in the country sometime this month. The company is offering the scooter with a host of new features.
Story first published: Saturday, September 5, 2020, 9:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X