ஹீரோ மோட்டோகார்ப்பின் பண்டிகை கால சலுகைகள்- ரூ.7,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்

இந்த பண்டிகை காலத்திற்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அட்டகாசமான மற்றும் அசத்தலான சலுகைகளை அறிவித்துள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹீரோ மோட்டோகார்ப்பின் பண்டிகை கால சலுகைகள்- ரூ.7,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்

இந்த பண்டிகை காலத்திற்கான சலுகைகளுள் குறைந்த விகித வட்டியுடன் எளிய மாதத்தவணை திட்டங்கள் மற்றும் பண தள்ளுபடி உள்ளிட்டவை அடங்குகின்றன. இந்த சலுகைகள் குறிப்பிட்ட ஹீரோ ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிளுக்கு மட்டுமே பொருந்தும்.

ஹீரோ மோட்டோகார்ப்பின் பண்டிகை கால சலுகைகள்- ரூ.7,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்

ஹீரோ நிறுவனம் தயாரிப்புகளை அன்றாட மோட்டார்சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் செயல்திறன்மிக்க மோட்டார்சைக்கிள்கள் என்ற மூன்று பிரிவுகளில் சந்தைப்படுத்தி வருகிறது. இதில் அன்றாட மோட்டார்சைக்கிள் பிரிவில் ஸ்பிளெண்டர்+, சூப்பர் ஸ்பிளெண்டர், ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட், எச்எஃப் டீலக்ஸ், பேஷன் ப்ரோ மற்றும் க்ளாமர் என்ற ஹீரோ பைக்குகள் அடங்குகின்றன.

ஹீரோ மோட்டோகார்ப்பின் பண்டிகை கால சலுகைகள்- ரூ.7,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்

இவற்றிற்கு தயாரிப்பு நிறுவனம் 6.99 சதவீத வட்டி விகித்துடன் ரூ.4,999 என்ற குறைந்த முன்தொகை திட்டத்தை வழங்கியுள்ளது. மேலும் இந்த ஹீரோ பைக்குகள் ரூ.2,100 மதிப்பில் பணம் தள்ளுபடி மற்றும் ரூ.1,000 மதிப்பில் எக்ஸ்சேன்ஞ் போனஸையும் பெற்றுள்ளன.

ஹீரோ மோட்டோகார்ப்பின் பண்டிகை கால சலுகைகள்- ரூ.7,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்

இந்த வகையிலான ரூ.3,100 அளவிலான பண சலுகை 125சிசி ஹீரோ பைக்குகளை எக்ஸ்சேன்ஞ் செய்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இந்நிறுவனத்தின் ஸ்கூட்டர் பிரிவில் மேஸ்ட்ரோ எட்ஜ்110, டெஸ்டினி 125, மேஸ்ட்ரோ எட்ஜ்125 மற்றும் பிளெஷர்+ உள்ளிட்டவை தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளை பெற்றுள்ளன.

ஹீரோ மோட்டோகார்ப்பின் பண்டிகை கால சலுகைகள்- ரூ.7,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்

இவற்றிற்கும் மேற்கூறப்பட்ட குறைந்த முன்தொகை திட்டம்தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பண்டிகை காலத்தில் ஹீரோ ஸ்கூட்டர்களை வாங்குவோர் ஹீரோவின் ஆரம்ப நிலை மோட்டார்சைக்கிள்களை காட்டிலும் அதிகமாக ரூ.6,100 வரையில் பணத்தை சேமிக்க முடியும்.

ஹீரோ மோட்டோகார்ப்பின் பண்டிகை கால சலுகைகள்- ரூ.7,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்

இதில் ரூ.2,100 மதிப்பில் பண தள்ளுபடி, ரூ.2,000 வரையில் எக்ஸ்சேன்ஞ் டாப்-அப் மற்றும் ரூ.2,000 மதிப்பிலான கார்ப்ரேட் போனஸ் உள்ளிட்டவை அடங்குகின்றன. ஹீரோவின் செயல்திறன் மோட்டார்சைக்கிள்களாக தற்சமயம் எக்ஸ்ட்ரீம் 160ஆர் மற்றும் பிரபலமான ஆஃப்-ரோடு மோட்டார்சைக்கிளான எக்ஸ்பல்ஸ் 200 உள்ளிட்டவை உள்ளன.

ஹீரோ மோட்டோகார்ப்பின் பண்டிகை கால சலுகைகள்- ரூ.7,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்

இவை இரண்டிற்கும் மற்ற ஹீரோ இருசக்கர வாகனங்கள் பெற்றுள்ள எளிய நிதி திட்டம் தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பைக்குகளை வாங்குவதன் மூலம் ரூ.7,000 வரையிலான பணத்தை சேமிக்கலாம். இந்த வருட பண்டிகை காலத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகையில் ரூ.3,000 மதிப்பிலான பணம் தள்ளுபடி, ரூ.2,000-க்கு எக்ஸ்சேன்ஞ் டாப்-அப் மற்றும் ரூ.2,000 மதிப்பில் கார்ப்ரேட் போனஸ் போன்றவை உள்ளன.

ஹீரோ மோட்டோகார்ப்பின் பண்டிகை கால சலுகைகள்- ரூ.7,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்

இந்த குறுகிய கால சலுகைகளுடன் அதன் தயாரிப்புகளுக்கு ரூ.499-ல் சேவை தொகுப்பையும் ஹீரோ நிறுவனம் ஏற்கனவே வழங்கி வருகிறது. ரூ.5,500 மதிப்பு கொண்ட இந்த சேவை தொகுப்பு குட்லைஃப் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. அதேபோல் பேடிஎம்-ஐ உபயோகிப்பவர்கள் ரூ.2,500 வரையிலும், சிட்டி வங்கி பயன்பாட்டாளர்கள் ரூ.5,000 வரையிலும் பணம் தள்ளுபடியை பெறலாம்.

ஹீரோ மோட்டோகார்ப்பின் பண்டிகை கால சலுகைகள்- ரூ.7,000 வரையில் பணத்தை சேமிக்கலாம்

ஐசிஐசிஐ டெபிட் கார்ட் மற்றும் கிரெட் கார்ட் பயன்படுத்தி ஹீரோ மோட்டார்சைக்கிள்களை வாங்குவோர் ரூ.5,000 வரையில் பணத்தை சேமிக்க முடியும். ஹீரோ மோட்டோகார்ப்பின் இத்தகைய அதிரடி சலுகைகளினால் இந்த பண்டிகை காலத்தில் ஹீரோ இருசக்கர வாகனத்தை சொந்தமாக்குவது எளிதானதாக மாறியுள்ளது.

Most Read Articles

English summary
Hero Motocorp Motorcycle Scooters Festive Offers Diwali 2020
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X