கர்நாடகா போலீஸாருக்கு 751 கிளாமர் பைக்குகள்!! ஒரே நேரத்தில் டெலிவிரி செய்து ஹீரோ நிறுவனம் அசத்தல்

கர்நாடகா போலீஸ் துறைக்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 751 கிளாமர் மோட்டார்சைக்கிள்களை வழங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கர்நாடகா போலீஸாருக்கு 751 கிளாமர் பைக்குகள்!! ஒரே நேரத்தில் டெலிவிரி செய்து ஹீரோ நிறுவனம் அசத்தல்

இந்திய சந்தையில் முன்னணி இருசக்கர வாகன பிராண்டாக உள்ள ஹீரோ மோட்டோகார்ப் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில போலீஸ் துறைகளுக்குடனும் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ளது.

கர்நாடகா போலீஸாருக்கு 751 கிளாமர் பைக்குகள்!! ஒரே நேரத்தில் டெலிவிரி செய்து ஹீரோ நிறுவனம் அசத்தல்

இந்த கூட்டணி கொள்கையின் ஒரு பகுதியாக இன்று (நவம்பர் 11) 751 கிளாமர் பைக்குகளை கர்நாடகா போலீஸாருக்கு ஹீரோ நிறுவனம் வழங்கியுள்ளது. ஒரே நேரத்தில் இத்தனை கிளாமர் பைக்குகளும் விதான் சௌதா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டெலிவிரி செய்யப்பட்டுள்ளன.

கர்நாடகா போலீஸாருக்கு 751 கிளாமர் பைக்குகள்!! ஒரே நேரத்தில் டெலிவிரி செய்து ஹீரோ நிறுவனம் அசத்தல்

இந்த நிகழ்ச்சியில் கலந்த கொண்ட கர்நாடாகா முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா மற்றும் மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மாயி கொடியசைத்து 721 ஹீரோ கிளாமர் பைக்குகளையும் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர்.

கர்நாடகா போலீஸாருக்கு 751 கிளாமர் பைக்குகள்!! ஒரே நேரத்தில் டெலிவிரி செய்து ஹீரோ நிறுவனம் அசத்தல்

நகர்புற சாலைகளுக்கு மிகவும் ஏற்ற ஹீரோ மோட்டோகார்பின் 125சிசி மோட்டார்சைக்கிளான கிளாமர் சமீபத்தில் பிஎஸ்6 அப்கிரேட்-ஐ பெற்றிருந்தது. மேம்பட்ட மைலேஜிற்காக கூடுதலாக ஹீரோவின் ஐ3எஸ் (ஐடியல்-ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம்) தொழிற்நுட்பம் கிளாமரில் வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகா போலீஸாருக்கு 751 கிளாமர் பைக்குகள்!! ஒரே நேரத்தில் டெலிவிரி செய்து ஹீரோ நிறுவனம் அசத்தல்

எக்ஸ்சென்ஸ் ப்ரோகிராம்டு ஃப்யுல்-இன்ஜெக்‌ஷன் தொழிற்நுட்பத்துடன் கிளாமரில் வழங்கப்படுகின்ற 125சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 7500 ஆர்பிஎம்-இல் 10.73 பிஎச்பி மற்றும் 6000 ஆர்பிஎம்-இல் 10.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா போலீஸாருக்கு 751 கிளாமர் பைக்குகள்!! ஒரே நேரத்தில் டெலிவிரி செய்து ஹீரோ நிறுவனம் அசத்தல்

பிரிவில் உள்ள மற்ற 125சிசி மோட்டார்சைக்கிள்களின் அம்சங்களுடன் மாடர்ன் தோற்றத்தில் வழங்கப்படும் ஹீரோ கிளாமரில் முன்பக்கத்தில் டிஸ்க் ப்ரேக் 240மிமீ-லும், க்ரவுண்ட் கிளியரென்ஸ் 180மிமீ-லும் உள்ளது.

கர்நாடகா போலீஸாருக்கு 751 கிளாமர் பைக்குகள்!! ஒரே நேரத்தில் டெலிவிரி செய்து ஹீரோ நிறுவனம் அசத்தல்

ட்ரம், பிளேஸ் எடிசன் - டிஸ்க், டிஸ்க் என்ற 3 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் ஹீரோ கிளாமர் 125 பைக்கின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.71,889-ல் இருந்து ரூ.75,391 வரையில் உள்ளன. இந்த ஹீரோ தயாரிப்பு 55 kmpl என்ற அளவில் மைலேஜ்ஜை வழங்குவதாக அதனை பயன்படுத்தும் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Most Read Articles

English summary
HERO MOTOCORP DELIVERS 751 UNITS OF ‘GLAMOUR’ MOTORCYCLE TO KARNATAKA POLICE DEPARTMENT
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X