இதுதான் ஹீரோவின் முதல் எலக்ட்ரிக் பைக்கின் பெயரா!! சும்மா தாறுமாறா இருக்கு

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 'எக்ஸ்டெக்' என்ற பெயரை புதியதாக பதிவு செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இதுதான் ஹீரோவின் முதல் எலக்ட்ரிக் பைக்கின் பெயரா!! சும்மா தாறுமாறா இருக்கு

ஹீரோவின் புதிய ‘எக்ஸ்டெக்' என்ற பெயர் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் தயாரிப்பிற்கு சூட்டப்படப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் மலிவான விலையிலான எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தின் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக ஹீரோ மோட்டோகார்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இதுதான் ஹீரோவின் முதல் எலக்ட்ரிக் பைக்கின் பெயரா!! சும்மா தாறுமாறா இருக்கு

ஆனால் இந்த ‘எக்ஸ்டெக்' என்ற பெயர், பெயரின் தன்மைக்கு ஏற்றாற்போல் ஹீரோவின் ப்ரீமியம் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளுக்கே வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் இந்த ஹீரோ ப்ரீமியம் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தான் முதலில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது.

இதுதான் ஹீரோவின் முதல் எலக்ட்ரிக் பைக்கின் பெயரா!! சும்மா தாறுமாறா இருக்கு

இந்த ஹீரோவின் முதல் தயாரிப்பு ஜெர்மனியில் உள்ள ஹீரோ மோட்டோகார்பின் தொழிற்நுட்ப மையம் மற்றும் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் உள்ள ஆராய்ச்சி & கண்டுபிடிப்பு தலைமையகம் என்ற இரு குழுவினரின் முயற்சியின் வெளிப்பாடாக வெளிவரவுள்ளது.

இதுதான் ஹீரோவின் முதல் எலக்ட்ரிக் பைக்கின் பெயரா!! சும்மா தாறுமாறா இருக்கு

எலக்ட்ரிக் அல்ட்ரா ஸ்போர்ட் இந்த எலக்ட்ரிக் பைக்கின் கான்செப்ட் மாடலாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மற்றப்படி ஹீரோவின் இந்த எலக்ட்ரிக் தயாரிப்பை பற்றிய வேறெந்த தகவலும் கிடைக்க பெறவில்லை.

இதுதான் ஹீரோவின் முதல் எலக்ட்ரிக் பைக்கின் பெயரா!! சும்மா தாறுமாறா இருக்கு

கான்செப்ட் மாடலின் வெளியீட்டிற்கு பிறகு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களின் கருத்துகளின் மூலம் ஒரு ஐடியா கிடைக்கும். இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கினாலும் மற்ற இரு நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் ஹீரோ தாமதமாகவே எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் இறங்குகிறது.

இதுதான் ஹீரோவின் முதல் எலக்ட்ரிக் பைக்கின் பெயரா!! சும்மா தாறுமாறா இருக்கு

எலக்ட்ரிக் தயாரிப்பை வடிவமைப்பதில் வேண்டுமென்றால் ஹீரோவிற்கு குழப்பம் ஏற்படலாமே தவிர்த்து, அவற்றை சந்தையில் விளம்பரப்படுத்துவதிலும், விற்பதிலும் குழப்பம் ஏற்பட வாய்ப்பே இல்லை. ஹீரோ எதிர்கொள்ளவுள்ள ஒரே பிரச்சனை அதன் பிராண்டின் பெயரை அதன் எலக்ட்ரிக் தயாரிப்புகளின் விற்பனையில் பயன்படுத்த முடியாது என்பதாகும்.

இதுதான் ஹீரோவின் முதல் எலக்ட்ரிக் பைக்கின் பெயரா!! சும்மா தாறுமாறா இருக்கு

ஏனெனில் சட்டப்பூர்வ ஒப்பந்தத்தின்படி ஹீரோ பிராண்டை ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் காரணமாக ஹீரோ மோட்டோகார்ப் சந்தையில் ஏற்கனவே பிரபலமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டாக விளங்கும் ஏத்தர் எனர்ஜியின் பெயரை பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Hero XTEC Name Registered – Electric Motorcycle To Join Xtreme, XPulse?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X