ஹீரோ பைக்குகளை ஆன்லைனில் எளிதாக வாங்கும் வசதி அறிமுகம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பைக், ஸ்கூட்டர்களை ஆன்லைன் மூலமாக எளிதாக வாங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஹீரோ பைக்குகளை ஆன்லைனில் எளிதாக வாங்கும் வசதி அறிமுகம்

கொரோனா பிரச்னையால் வாகன விற்பனையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், தளர்வுகள் கொடுக்கப்பட்ட பகுதிகளில் விற்பனையை ஊக்குவிக்கும் முயற்சிகளில் வாகன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

ஹீரோ பைக்குகளை ஆன்லைனில் எளிதாக வாங்கும் வசதி அறிமுகம்

அந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் ஆன்லைன் விற்பனை நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலமாக, வாடிக்கையாளர்கள் மிக எளிதாக வாங்குவதற்கான வாய்ப்பை பெற இயலும்.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

ஹீரோ பைக்குகளை ஆன்லைனில் எளிதாக வாங்கும் வசதி அறிமுகம்

இந்த திட்டம் eShop என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 100 சிசி மற்றும் 125 சிசி பைக்குகளையும், 110 சிசி மற்றும் 125 சிசி ஸ்கூட்டர்களையும் இந்த இஷாப் தளம் மூலமாக வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஹீரோ பைக்குகளை ஆன்லைனில் எளிதாக வாங்கும் வசதி அறிமுகம்

பைக், ஸ்கூட்டர் மாடல்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்களை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாக பார்த்து தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு இந்த இஷாப் மூலமாக பெற முடியும். பைக், ஸ்கூட்டர்களின் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்வதுடன், ஆன்ரோடு விலை, வாகன இருப்பு விபரம், ஆன்லைன் மூலமாகவே ஆவணங்களை சமர்ப்பிப்பது உள்ளிட்டவற்றை செய்ய முடியும்.

ஹீரோ பைக்குகளை ஆன்லைனில் எளிதாக வாங்கும் வசதி அறிமுகம்

மேலும், அருகிலுள்ள டீலர் விபரம், கடன் உதவி வசதி, வாகனத்தை ஒதுக்கீடு செய்வது, டெலிவிரி உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் இந்த இஷாப் மூலமாக பெற முடியும். ஹோம் டெலிவிரி ஆப்ஷனையும் தெரிந்து கொள்ளலாம்.

ஹீரோ பைக்குகளை ஆன்லைனில் எளிதாக வாங்கும் வசதி அறிமுகம்

பைக் அல்லது ஸ்கூட்டரை தேர்வு செய்து முன்பதிவு செய்தவுடன், வாடிக்கையாளரின் மொபைல்போனுக்கு குறுந்தகவல் கிடைக்கும். அதன் பிறகு, ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் முறை உள்ளது. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட உடன் வாகனத்திற்கு உரிய இன்வாய்ஸ் உருவாக்கப்பட்டு, டீலர் மற்றும் பதிவு உள்ளிட்ட நடைமுறைகள் டீலர் மூலமாக செய்து தரப்படும். வீட்டிலேயே வாகனத்தை டெவிவிரி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே, ஷோரூமிற்கு செல்லும் அவசியம் தவிர்க்க முடியும்.

ஹீரோ பைக்குகளை ஆன்லைனில் எளிதாக வாங்கும் வசதி அறிமுகம்

மேலும், பைக், ஸ்கூட்டர்களை ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்து சர்வீஸ் செய்து கொள்வதற்கான வாய்ப்பையும் ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் செய்துள்ளது. இதனை ஹீரோ மொபைல்போன் அப்ளிகேஷன் மூலமாக செய்து கொள்ள முடியும். வண்டியை வீட்டிலிருந்தே எடுத்துச் சென்று, சர்வீஸ் செய்து திரும்ப கொண்டு வந்து தரும் நடைமுறையும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
English summary
Hero MotoCorp has launched an integrated online sales platform - eSHOP to further strengthen its industry-leading digital initiatives for enhanced customer experience.
Story first published: Tuesday, June 9, 2020, 11:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X